நிக்கோலசு மதுரோ

நிக்கோலாசு மதுரோ மோரோசு (Nicolás Maduro Moros; எசுப்பானிய ஒலிப்பு: nikoˈlaz maˈðuɾo ˈmoɾos; பிறப்பு: 23 நவம்பர் 1962) வெனிசுவேலாவின் அரசியல்வாதியும் தற்போதைய வெனிசுவேலா அரசுத்தலைவரும் ஆவார். இவர் இதற்கு முன் வெனிசுவேலாவின் துணை அரசுத்தலைவராக 2012 அக்டோபர் முதல் 2013 மார்ச்சு வரையும், வெளியுறவுத்துறை அமைச்சராக 2006 ஆகத்து முதல் 2013 சனவரி வரையும் இருந்துள்ளார். 14 ஏப்ரல் 2013 அன்று நடந்து முடிந்த தேர்தலில் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[2]. முன்னாள் குடியரசுத்தலைவர் ஊகோ சாவேசின் இறப்பைத் தொடர்ந்து இவர் இடைக்காலக் குடியரசுத்தலைவராகப் பதவியேற்றுள்ளார். தேர்தல் அமைப்பு இவரை ஏப்ரல் 14, 2013 அன்று குடியரசுத்தலைவராக அறிவித்தது.

நிக்கொலாசு மதுரோ
வெனிசுவேலாவின் 63வது அரசுத்தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
5 மார்ச் 2013
இடைக்காலம்: 5 மார்ச் 2013 – 19 ஏப்ரல் 2013
முன்னையவர்ஊகோ சாவெசு
கூட்டுசேரா இயக்கத்தின் பொதுச் செயலாளர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 செப்டம்பர் 2016
முன்னையவர்அசன் ரவ்கானி
தென்னமெரிக்க நாடுகள் அணியின் தலைவர்
பதவியில்
23 ஏப்ரல் 2016 – 21 ஏப்ரன் 2017
முன்னையவர்தபாரே வாசுகெசு
பின்னவர்மொரீசியோ மாக்ரி
வெனிசுவேலாவின் துணைத் தலைவர்
பதவியில்
13 அக்டோபர் 2012 – 5 மார்ச் 2013
குடியரசுத் தலைவர்ஊகோ சாவெசு
வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
9 ஆகத்து 2006 – 15 சனவரி 2013
குடியரசுத் தலைவர்ஊகோ சாவெசு
வெனிசுவேலா தேசியப் பேரவையின் தலைவர்
பதவியில்
5 சனவரி 2005 – 7 ஆகத்து 2006
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நிக்கொலாசு மதுரோ மோரசு

23 நவம்பர் 1962 (1962-11-23) (அகவை 61)
கரகஸ், வெனிசுவேலா
அரசியல் கட்சிஐக்கிய சோசலிசக் கட்சி (2007–இன்று)
ஐந்தாவது குடியரசு இயக்கம் (2007 இற்கு முன்னர்)
துணைவர்(கள்)அத்ரியானா அஞ்சுலோ
சீலியா புளோரசு
பிள்ளைகள்நிக்கொலாசு குவேரா[1]
கையெழுத்து
இணையத்தளம்இணையதளம்

இவரது எதிர்ப்பாளரான மிராண்டாவின் ஆளுநர் ஹென்ரிக் கேப்ரிலெசு தேர்தல் முறையாக நடக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் [3][4].

பேருந்து ஓட்டுநராக இருந்து, தொழிற்சங்கத்திற்குத் தலைவரானார். 1998 ஆம் ஆண்டு வெனிசுவேலா இணைச் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டு வெனிசுவேலா தேசிய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசாங்கத்தில் 2000 ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பல பதவிகளில் சாவேசு அரசில் பணி புரிந்து இவர் வெளியுறவு அமைச்சராக 2006-ல் பதவியேற்றார். சாவேசுவுக்கு நெருங்கமாக இருப்பவர்களில் இவர் சிறந்த நிருவாக திறன் உள்ளவர் என கருதப்பட்டார்[5].

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோலசு_மதுரோ&oldid=2826524" இலிருந்து மீள்விக்கப்பட்டது