ஊகோ ரஃபயெல் சாவெசு ஃபிரியாஸ் (Hugo Rafael Chavez Frias, ஜூலை 28, 1954 - மார்ச் 5, 2013) வெனிசுவேலாவின் 45வது[1] அரசுத் தலைவர் ஆவார். தென் அமெரிக்க முதற்குடிமக்கள் பின்புலம் உள்ள முதல் சனாதிபதி இவர் ஆவார். இவர் ஒரு இடது சாரித் தலைவர் ஆவார். இவரது தத்துவ பின்புலத்தில், தலைமையில் வெனிஸ்வேலாவில் அமைந்த புரட்சியை பொலிவரியன் புரட்சி என்று குறிப்பிடுவர். பொலிவேரியப் புரட்சியின் தலைவராக இவர் மக்களாட்சி சோசியலிசம் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் வல்லதிகார எதிர்ப்பு போன்ற கோட்பாடுகளின் தனது சொந்த பார்வையை பரப்பி வந்தவர். இவர் தனது சமகால முதலாளித்துவத்தையும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் வெளியுறவுக் கொள்கையையும் கடுமையாக எதிர்த்து வந்தவர். உலகில் உள்ள முற்போக்கு சக்திகளுக்கு உத்வேகமூட்டிய சாவேஸ் இன்றில்லை. குறுகிய காலமே வாழ்ந்து, அளப்பறிய சாதனை புரிந்த அவர் இன்றில்லை. அவர், போரற்ற உலகம், பசி, நோய், கல்லாமை இல்லாத சமத்துவ ஜனநாயக சமூகத்திற்காக போராடினார்.

ஊகோ சாவெசு
45வது அரசுத் தலைவர்
பதவியில்
2 பிப்ரவரி 1999 – 5 மார்ச் 2013
முன்னையவர்ரபெல் கால்டெரா
பின்னவர்நிக்கோலசு_மதுரோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1954-07-28)28 சூலை 1954
சபனெட்டா, பாரினாசு, வெனிசுவேலா
இறப்பு5 மார்ச்சு 2013(2013-03-05) (அகவை 58)
அரசியல் கட்சிஐந்தாவது குடியரசு இயக்கம்
துணைவர்(கள்)நான்சி கால்மெனாரெசு
மரிசாபெல் உரொட்ரிகசு
பிள்ளைகள்3 பெண்கள், 1 ஆண்
கையெழுத்து

வாழ்க்கை வரலாறு‍

தொகு

1954-ல் இடதுசாரி இலத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலா நாட்டின் சபேனட்டா என்ற கிராமத்தில் ஒரு‍ பள்ளி ஆசிரியர் ஒருவரின் 7 குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் சாவெசு. சாவேஸ், வெனிசுலாவின் ஒரு கடற்கரையோரக் கிராமத்தில், ஆசிரியர் தம்பதியருக்குப் பிறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

வறுமையின் காரணமாக சாவெசையும் அவரது‍ சகோதரரையும் பெற்றோர்கள் பாட்டி‍ வீட்டிற்கு‍ அனுப்பி வைத்தனர். அருகில் இருந்த தேவாலயத்தில் இருந்த பாதிரியாருக்கு‍ உதவியாளனாக வேலை செய்ததால் படிப்பிற்கு இடைஞ்சலில்லாமல் பள்ளி பருவம் கழிந்தது‍ அவருக்கு.

கல்லூரி வாழ்க்கை

தொகு

தனது கல்வித் திறனால் 17 வயதில் வெனிசுவேலா இராணுவ கல்லூரியில் சேர்ந்தார். அங்கு நாட்டுப்பற்று மிக்க சில ராணுவ அதிகாரிகளின் முயற்சியால் உருவாக்கப்பட்ட பாடத்திட்டமே சாவேசின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. ராணுவப் பாடத் திட்டங்களோடு அரசியல், பொருளாதாரம், அரசாங்க நிர்வாகம் இவைகளைப் பற்றிய பாடங்களும் அந்த பாடத்திட்டத்தில் இருந்தன. மார்க்சிய நூல்களையும் அவர் படிக்க நேர்ந்தது. அதில் சே குவேராவின் டைரி, அவரது மனப்போக்கை பெரிதும் மாற்றிவிட்டது. கியூபாவின் பிடெல் காஸ்ட்ரோவை ஒரு தோழனாக அந்த டைரியே சாவெசுவைக் கருத வைத்தது. மார்க்சிய நூல்களை ஆழ்ந்து கற்றதால் சில எதார்த் தங்களை உறுதியாக பற்றி நிற்க அவருக்கு உதவின.

பொலிவாரியன் இயக்கம்

தொகு
 
thumb

ராணுவ கல்லூரியை விட்டு வெளியேறும் பொழுது ஒரு புதிய மனிதனாக மாற வேண்டும் என்று உறுதி பூண்டார். இராணுவ அதிகாரியாக பதவியேற்றவுடன் வெனிசுவேலா அரசியலமைப்பு உழைக்கும் மக்களை ஏழையாக்குகிறது என்பதைக் கண்டார். 19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் எசுப்பானிய மன்னரின் ஆதிக்கத்திலிருந்த தென் அமெரிக்க பகுதிகளை விடுவிக்க ஆயுதமேந்திப் பேராடிய சிமோன் பொலிவார் வழியில் ஒரு நல்ல மனிதனின் சர்வாதிகாரமே மக்களைக் காக்கும் என்ற முடிவிற்கு வந்து ஒத்த மனதுள்ள ராணுவ அதிகாரிகளுடன் இணைந்து "புரட்சிகர பொலிவேரியன் இயக்கம் - 200" என்ற இரகசிய அமைப்பை உருவாக்கினார். ஆட்சியைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார்.

ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக ராணுவ வீரர்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்ற கொள்கையை உருவாக்கினார். சைமன் பொலிவார் கருத்துக்களால் உத்வேகம் பெற்று 1982ல் ராணுவத்தில் “புரட்சிகர சோசலிச இயக்கம்” எனும் ரகசியக் குழுவினை உருவாக்கினார். இராணுவ வீரர்களைக் கொண்டு‍ அரசைக் கவிழ்க்க முயன்று முதன்முறையாக தோல்வியைச் சந்தித்தார்.[2]

23 ஆண்டு காலமாக உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை வெறியுடன் அமல்படுத்திய அதிபர் கார்லோஸ்-க்கு எதிராக 1992ல் ராணுவப் புரட்சி செய்தார். ஆனால் ராணுவப் புரட்சி தோல்வியுற்றது. அவருக்கும் சிறிய எண்ணிக்கையிலான குழுவினருக்கும் சிறைத் தண்டனை. இதன் மூலம் வெனிசுலா மக்களிடம் புகழ்பெற்றார். இரண்டு ஆண்டுகள் சிறைவாசம். 1994 தேர்தலில், ஆட்சிக்கு வந்த எதிர்க் கட்சித் தலைவர் ரஃபேல் அரசு அவரை விடுதலை செய்தது.[3]

பொலிவாரிய குடியரசுக் கட்சி

தொகு

வெனிசுலாவிற்கு ராணுவக் குழுவினரின் புரட்சி பொருத்தமற்றது என்ற முடிவுக்கு வந்திருந்தார் சாவேஸ். பொலிவேரியன் இயக்கம் அரசியல் இயக்கமாக, பிற நாட்டு இடதுசாரி இயக்கங்களின் ஆதரவோடு காஸ்ட்ரோ வழியில் செல்வது அவசியம் என்ற முடிவிற்கு வந்து அந்த வழியில் நேர்மையாகவும், உறுதியாகவும் செல்ல தொடங்கினார்.[4]

வெனிசுலா ஜனாதிபதி

தொகு

1997ல் 5 வது குடியரசுக் கட்சியைத் துவக்கினார். வெனிசுலா மக்களை வாட்டி வதைக்கும் உலகமயக் கொள்கைக்கு மாற்றாக, சமூக, பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வருவதே தமது கட்சியின் லட்சியம் எனப் பிரகடனம் செய்தார். 1998-ல் நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பெற்று வெனிசுலாவின் அதிபரானார். அதிபரானதும் இராணுவத்திலுள்ள ஊழல் செய்த அதிகாரிகளை பதவியிலிருந்து‍ நீக்கினார்.[4] [5]

சாவேஸ் உருவாக்கிய அரசியல் நிர்ணய சட்டம் மக்களுக்கு விரோதமாக செயல்படு‍ம் ஜனாதிபதியை மக்களே திரும்ப அழைக்கும் உரிமையை வழங்கியுள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள் கையெழுத்திட்ட மனு தேர்தல் ஆணையத்திடம் அனுப்பினால் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அந்த சட்டம் கூறுகிறது. இந்த பிரிவை கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சிகள் 2004-ம் ஆண்டில் இதனையே பயன்படுத்தி சாவேசை அகற்ற வாக்காளர் பட்டியலில் செத்தவர்கள் கையெழுத்தையும் சேர்த்து மகஜர் அனுப்பினர். அந்த மகஜரையும் ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்பை சாவேஸ் சந்தித்தார்.[6]

பொலிவாரிய சோசலிச குடியரசு‍

தொகு

தான் வாக்களித்தவாறு புதிய அரசியல் சட்டத்தினை உருவாக்கி நாட்டின் பெயரை “பொலிவாரிய சோசலிசக் குடியரசு” என பெயரை மாற்றினார். பெண்களுக்கும் பூர்வீகக் குடிமக்களுக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். ஆட்சிக்கு வந்தவுடன் சாவேஸ் எண்ணெய் வளத்தின் பலனை மக்களுக்கு அளிக்க முடிவு செய்தார். வெனிசுலாவில் அபரிமிதமான எண்ணெய் வளம் எப்போதும் இருந்தது. ஆனால், சாவேஸ்தான் உரிய முறையில் அதைப் பயன்படுத்தினார். அதுவரை, அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செலுத்தி வந்த ராயல்ட்டி தொகையை 1 சதவீதத்தி லிருந்து 16 சதவீதமாக உயர்த்தினார்.[7]

வெனிசுலா மக்களின் கனவை நனவாக்கியவர்

தொகு

முற்போக்கான வரித் திட்டத்தினை உருவாக்கி பணக்காரர்களும், நிறுவனங்களும் உரிய வரியை செலுத்தச் செய்தார். இதனால் அவர்கள் சாவேசை வெறுத்தனர். அதிகரித்த வருவாயில், 66 சதவீத சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தினார். மின்சார நிறுவனங்கள், தொலைபேசி நிறுவனங்கள் பொதுத்துறையாக்கப்பட்டன. உலகமயக் கொள்கைகளுக்கு மாற்று இல்லை என்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கூக்குரலிடும் போது “மாற்று உலகம்” சாத்தியம் என்பதை நிரூபித்தார்.பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி கியூப ஆசிரியர்கள் உதவியுடன் வழங்கப்பட்டது. உலகில், மலிவான கட்டணத்தில் மின்சாரம் பெறுகின்றனர்.[5]

வெனிசுலா மக்கள் பண்டமாற்று முறையில், எண்ணெய்க்குப் பதிலாக மருத்து வர்கள் என கியூபாவுடன் ஒப்பந்தம் செய்தார். வெனிசுலா மக்களுக்கு இலவசமாக முதல்தர மருத்துவ சிகிச்சை கிடைக்கச் செய்தார். உருகுவேயிடமிருந்து, எண் ணெய்க்குப் பதிலாக மாடுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

உணவுப் பொருட்கள் சூப்பர் மார்க்கெட் மூலம் மானிய விலையில் வழங்கப்பட்டன.இன்று வெனிசுலாவின் தொழிலாளர்கள் 20 சதவீதம் பேர் பொதுத்துறையில் வேலை செய்கின்றனர். குறைவான அள வில் முதலாளித்துவம் அதிகமான அளவில் சோசலிசம் வேண்டும் என்றார். இன்று, உலகில் மிகவும் குறைவான அளவில் அசமத்துவம் உள்ள நாடாக வெனிசுலா உள்ளது. சாவேசுக்கு முன்புவரை வெனிசுலா பேசப்படவே இல்லை. இன்று உலகம் முழுவதும், வெனிசுலா பேசு பொருளாக மாறியுள்ளது. சாவேசுக்கு முந் தைய வெனிசுலா மற்றும் லத்தீன் அமெ ரிக்க நாடுகள் அனைத்தும் அமெரிக்க ஆதரவு ஆட்சியர்களாய் சீரழிக்கப்பட்டிருந்தன. சாவேஸ் மக்களின் கனவுகளை நனவாக்கினார்.[2]

சைமன் பொலிவாரின் கனவுகள்

தொகு

சைமன் பொலிவார் இன் கனவு தென் அமெரிக்க நாடுகளின் ஒருங்கிணைப்பு ஆகும். பொலிவாரின் கனவை சாவேஸ் நிறைவேற்றும் முயற்சியில் வெகுதூரம் முன்னேறினார். சாவேஸ் லத்தீன் அமெரிக்க நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பினை வலிமைப்படுத்தினார். ஒரு காலத்தில் உலக வங்கி, சர்வதேச நிதியம் அகற்றப்பட்டு, அதன் இடத்தில் ‘சர்வதேச மனிதநேய உதவிக்கான நிதியம்’ உருவாக்கப்பட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். யூரோ பொது நாணயம் போல லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கான பொது நாணயம் உருவாக்கப்பட வேண்டும் என்பேத சைமன் பொலிவாரின் கனவாகும்.[8]

இந்தியா வருகை

தொகு

உலக நாடுகளுடனான உறவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினார். குறிப்பாக கியூபா, சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்தினார். கொல்கத்தா வருகை அவர் இறப்பதற்கு (2013 மார்ச் 5) சரியாக 8 ஆண்டுகளுக்கு முன்பு (2005 மார்ச் 5) வருகை தந்தார். கொல்கத்தாவுக்கும் பயணம் செய்தார். அவர் மறக்க முடியாதபடி மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தனர் கொல்கத்தா மாநகர மக்கள். வெனிசுலாவுக்கு வெளியே, பிரேசில் தலைநகர் போர்ட்டே அலெக்ரே நகர மக்களுக்கு அடுத்து, கொல்கத்தா மக்கள் அளித்த வரவேற்பு மிகப் பெரிய அளவில் இருந்ததாக சாவேஸ் மகிழ்ச்சியடைந்தார்.

கொல்கத்தாவில் இருப்பதை தமது காரகசில் இருப்பதைப் போலவே உணர்வதாகக் கூறினார். அன்று உணர்ச்சி ததும்பும் உரையாற்றினார். “நான் உங்களை எல்லாம் நேசிக்கிறேன்” என்று வங்கமொழியில் தனது பேச்சைத் துவக்கினார். அவரது இயல்புக்கு ஏற்றவாறு அவர் தாகூரின் பாடலையும் பாடினார். இந்தியாவுடன் உறவைப் பலப்படுத்த சாவேஸ் ஆவலாக இருந்தார்.[9]

மரணம்

தொகு

இடுப்பு புற்று நோயுடன் இரண்டு ஆண்டு காலமாக போராடிய அவர் , உலகப் புகழ்பெற்ற கியூபா மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதும் மருத்துவமனையிலிருந்து நாடு திரும்பி வருவதுமாக இருந்தார். தனது 54ஆம் வயதில் அந்த நோயால் மரணமடைந்தார்.

சாவேஸ் மரணத்தில் சந்தேகம்

தொகு

புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸின் மரணம் குறித்த விசாரணைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.[10]

இறுதி அஞ்சலி

தொகு

சாவேசின் இறுதி ஊர்வலத்தில் மக்களின் கூட்டம் 8 கி.மீட்டருக்கு மேல் நீண்டது. இது போன்றதொரு இரங்கல் ஊர்வலத்தை லத்தீன் - அமெரிக்க கண்டம் இதுவரை கண்டதில்லை. 20 லட்சம் மக்கள் பொறுமையாகக் காத்திருந்து, தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்த தலைவருக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினர்.லத்தீன்-அமெரிக்க நாடுகள், ஈரான், நைஜீரியா போன்ற நாடுகள் தங்கள் நாடு களில் அரசுப்பூர்வ துக்கம் அறிவித்தன. உலகம் முழுவதிலும் இருந்து, 55 நாடு களின் தலைவர்களும், உயர்மட்டக் குழுக் களும் சாவேசுக்கு இறுதி மரியாதை செலுத்த வெனிசுலாவில் திரண்டனர். லத்தீன் -அமெரிக்க -கரீபியன் நாடுகளின் ஒன்றியத்தை (ECLAC) உருவாக்கிய தலைவருக்கு அஞ்சலி செலுத்த அனைத்து லத்தீன் அமெரிக்க அதிபர்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. https://en.wikipedia.org/wiki/List_of_presidents_of_Venezuela
  2. 2.0 2.1 "விடைபெற்றார் சாவேஸ்". 1 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "ஹியூகோ சாவேஸ்: ஒரு சகாப்தத்தின் முடிவு". 6 மார்ச் 2013. Archived from the original on 2013-08-16. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. 4.0 4.1 "Hugo Chávez obituary". 5 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. 5.0 5.1 "Hugo Chávez: Death of a socialist". 19 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. [www.cartercenter.org/documents/2020.pdf "OBSERVING THE VENEZUELA PRESIDENTIAL RECALL REFERENDUM"] (PDF). 25 பிப்ரவரி 2005. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2013. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |date= (help)
  7. "மாபெரும் புரட்சியாளன் ஹூகோ சாவேஸ்!". 7 மார்ச் 2013. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  8. "சாவேஸ் என்ற சகாப்தம்". ஜுலை 3, 2013. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  9. "புதிய மனிதன் ஹியுகோ சாவேசும் பொலிவேரியன் புரட்சியும்". மார்க்சிஸ்ட் மார்ச் மாத இதழ், 2013: உள் அட்டை மற்றும் கடைசி அட்டைப் பக்கம். மார்ச் 2013. 
  10. "சாவேஸ் மரணத்தில் சந்தேகம்?". 16 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 11 நவம்பர் 2013. {{cite web}}: Check date values in: |date= (help)

உசாத்துணை

தொகு

புற இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hugo Chávez
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊகோ_சாவெசு&oldid=3926536" இலிருந்து மீள்விக்கப்பட்டது