இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501

இந்தோனேசியா ஏர்ஏசியா விமானம் 8501 (Indonesia AirAsia Flight 8501, QZ8501/AWQ8501) என்பது இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம் நோக்கி சென்றுகொண்டிருக்கையில் 155 பயணிகள் மற்றும் 7 பணிக்குழுவினரோடு[6] 2014 திசம்பர் 28 இல் காணாமல் போன ஏர்பஸ் ஏ320-200 வகை விமானம் ஆகும்.[7] இரண்டு நாட்களின் பின்னர் டிச்ம்பர் 30 அன்று விமானத்தின் சிதைந்த பாகங்கள் சாவகக் கடலில் கரிமட்டா நீரிணையில் கண்டுபிடிக்கப்பட்டது. குறைந்தது 40 உடல்கள் கடலில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டன.[8]

இந்தோனேசியாவின் ஏர்ஏசியா விமானம் 8501
காணாமல்போன PK-AXC விமானம் (2011 இல் எடுக்கப்பட்டது)
சுருக்கம்
நாள்திசம்பர் 28, 2014 (2014-12-28)
இடம்கடைசித் தொடர்பு சாவகக் கடல் பகுதியில்.
3°14′48″S 109°22′06″E / 3.2466°S 109.3682°E / -3.2466; 109.3682[1]
பயணிகள்155
ஊழியர்7
உயிரிழப்புகள்162 (அனைவரும்)[2]
43 (கண்டுபிடிக்கப்பட்டது)[3]
24 சடலங்கள் (அடையாளங்காணப்பட்டன)[4][5]
தப்பியவர்கள்0[2]
வானூர்தி வகைஏர்பஸ் ஏ320-200
இயக்கம்இந்தோனேசியா ஏர்ஏசியா
வானூர்தி பதிவுPK-AXC
பறப்பு புறப்பாடுஜுவாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம், சுரபயா, இந்தோனேசியா
சேருமிடம்சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையம்

விமானம் கிளம்பிய 45 நிமிடங்களில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. விமானம் காணாமல் போவதற்கு முன்பாக, மோசமான வானிலை காரணமாக விமானி மாற்றுப் பாதை வழங்கக் கோரியதாகவும், வழக்கத்தை விட அதிக உயரத்தில் பறக்க அனுமதி கோரியதாகவும் இந்தோனேசியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[9] 29 டிசம்பர் அன்று மாயமான ஏர் ஏசியா விமானம் கடலில் விழுந்ததாக இந்தோனேசியா அறிவித்தது.[10][11]

இந்தோனேசியா ஏர்ஏசியா என்பது மலேசியாவின் குறைந்த-கட்டண விமானசேவையான ஏர்ஏசியா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். 2014 ஆம் ஆண்டில் ஏற்கனவே மலேசியா ஏர்லைன்சின் மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370, 239 பேருடன் காணாமல் போனது, மலேசியா ஏர்லைன்சு 17 விமானம் 298 பேருடன் விபத்துக்குள்ளாகியது.[12]

காணாமல் போன விவரங்கள்

தொகு

விமானத்தின் காலக்கெடு

தொகு
கடந்துவிட்ட நேரம் நேரம் நேரம்
ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் இந்தோனேசிய நேரம்
ஒ.ச.நே+7
சிங்கப்பூர் நேரம்
ஒ.ச.நே+8
00:00 டிசம்பர் 27 டிசம்பர் 28 ஜுஅண்ட சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 162 பேருடன் புறப்பட்டு சென்றது [13]
22:35 05:35 06:35
00:42 23:17 06:17 07:17 இந்தோனேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் விமான கட்டுப்பாட்டு அறை தகவல் தொடர்பில் இருந்து விலகியது [14]
01:49 டிசம்பர் 28 07:24 08:24 ஜுஅண்ட சர்வதேச விமான நிலைய விமான கட்டுப்பாட்டு அறை தகவல் ரேடாரில் இருந்து மறைந்தது [14][15]
00:24
01:55 00:30 07:30 08:30 சிங்கப்பூர் சாங்கி வானூர்தி நிலையத்தை சென்றடைய வேண்டும் [13]

பயணிகள் மற்றும் பணிக்குழுவினர்

தொகு
நாடு வாரியாகப் பயணிகள்[16]
நாடு எண்ணிக்கை.
155
3
1
1
1
1
மொத்தம் 162

விமானத்தில் பயணித்தவர்களில் 145 பெரியவர்கள் 16 குழந்தைகள் மற்றும் 1 கைக்குழந்தை என மொத்தம் 162 பயணிகள் பயணித்ததாக ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.[17]

தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நாடுகள்

தொகு

தேடுதல் பணிகள்

தொகு

தேடுதல் பணியில் இந்தோனேசியா நாட்டின் கப்பல்கள் மூன்றும் விமானங்கள் மூன்றும், மலேசிய நாட்டின் கப்பல்கள் மூன்றும் விமானங்கள் மூன்றும் மற்றும் சிங்கப்பூர் நாட்டின் விமானம் ஒன்றும் ஈடுபட்டு வருகிறது. மேலும் இப்பணியில் உதவ ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் தென் கொரியா நாடுகள் முன்வந்துள்ளன. டிசம்பர் 28, 2014 அன்று தேடுதல் வெளிச்சமின்மையால் மாலையில் நிறுத்தப்பட்டது. மீண்டும் அடுத்த நாள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

விமானம்

தொகு

காணமல் போன ஏர்பஸ் ஏ320-200 வகை விமானம் 37.57 மீட்டர் நீளமும் 34.10 மீட்டர் அகலமும் உடையது. இவ்விமானத்தின் விமானி இரியாண்டோ (Irainto) 20,537 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உடையவர். மேலும் அவர் இந்தோனேசியாவின் ஏரேசியா ஏர்பஸ் ஏ320-200 வகை விமானத்தை 6,100 மணி நேரம் ஓட்டிய அனுபவம் உடையவர். துணை விமானி பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2275 மணி நேரம் விமானம் ஓட்டிய அனுபவம் உடையவர். காணாமல் போன ஏர்பஸ் ஏ320-200 விமானம் கடைசியாக 2014, நவம்பர் 16 அன்று வழக்கமான திட்டமிடப்பட்ட கண்காணிப்பு மற்றும் பழுது நீக்கும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த விமானம் ஆறு வயதிற்கும் சற்று அதிகமானது ஆகும்.

விபத்து

தொகு

காணாமல் போன ஏர் ஏசியா விமானம் விபத்திற்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டது. இவ்விமானம் புறப்பட்ட இடத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் ஜாவா கடலில் விழுந்து கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.[18] இது வரை 40 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியா கடலோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.[18][19]

குறிப்புகள்

தொகு
  1. 149 பயணிகள் மற்றும் 6 பணிக்ககுழுவினர்
  2. 1 பணிக்ககுழுவினர்

மேற்கோள்கள்

தொகு
  1. "Flightradar24 on Twitter". Twitter. பார்க்கப்பட்ட நாள் 28 December 2014.
  2. 2.0 2.1 Jensen, Fergus; Nangoy, Fransiska (4 January 2015). "Weather frustrates AirAsia search divers, no 'pings' detected". Reuters. Archived from the original on 5 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 5 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "AirAsia QZ8501: Tail of crashed plane found". BBB News. BBC. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  4. "Live blog: AirAsia flight QZ8501 crash". Channel NewsAsia. 7 January 2015. Archived from the original on 7 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Police Identify Eight More Victims". The Jakarta Post. 7 January 2015. பார்க்கப்பட்ட நாள் 7 January 2015.
  6. Search and Rescue Operation Suspended for Missing AirAsia Jet ஏபிசி செய்தி
  7. Photo Galleries AirAsia Flight QZ8501 loses contact with air traffic control சிபிசிசெய்தி டிசம்பர் 28 2014 இல் பெறப்பட்டது.
  8. அசோசியேட்டட் பிரெசு (30 டிசம்பர் 2014). "Wreckage, bodies reveal jet's fate days after it disappeared". http://news.yahoo.com/wreckage-bodies-reveal-jets-fate-131429475.html. 
  9. "165 பேருடன் காணாமல் போன ஏர் ஏசியா விமானம்: கடலில் விழுந்திருக்கலாம் என அச்சம்". Archived from the original on 2015-01-07. பார்க்கப்பட்ட நாள் 2021-08-14.
  10. http://news.vikatan.com/article.php?module=news&aid=36689[தொடர்பிழந்த இணைப்பு]
  11. https://sg.news.yahoo.com/contact-with-airasia-flight-qz8501-bound-for-singapore-from-surabaya-lost-033803688.html
  12. அசோசியேட்டட் பிரெசு (28 டிசம்பர் 2014). "Missing flight is 3rd Malaysia-linked incident". http://news.yahoo.com/missing-flight-3rd-malaysia-linked-incident-091349304.html. 
  13. 13.0 13.1 "QZ8501 / Indonesia AirAsia". FlightRadar24. பார்க்கப்பட்ட நாள் 28 December 2014.
  14. 14.0 14.1 "AirAsia jet with 162 on board goes missing on way to Singapore". CNN International Edition. 28 December 2014. பார்க்கப்பட்ட நாள் 28 December 2014.
  15. "[Updated statement] QZ8501". AirAsia Facebook page. 28 December 2014. பார்க்கப்பட்ட நாள் 28 December 2014.
  16. "[Updated statement] QZ8501 (as at 6:54pm, GMT+8)". AirAsia Facebook. 28 December 2014. பார்க்கப்பட்ட நாள் 28 December 2014.
  17. "சேனல் நியூஸ் ஆசியா . 28 டிசம்பர் 2014". Archived from the original on 2014-12-28. பார்க்கப்பட்ட நாள் 2014-12-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  18. 18.0 18.1 http://www.dinamalar.com/news_detail.asp?id=1150031
  19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-01-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-30.

வெளியிணைப்புகள்

தொகு