பாவ் பாச்சி
பாவ் பாஜி அல்லது பாவ் பாச்சி (மராத்தி: पाव भाजी) என்பது ஒருவகையான மராத்திய சைவ உணவாகும். இவ்வகை உணவு மகாராட்டிரத்தில் மிகவும் பிரபலம். குசராத், கர்நாடகம்[1] உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் இவ்வுணவு வகை கிடைக்கிறது. [2] பாவ் என்பது மராத்தியில் வெதுப்பியை குறிக்கிறது. பாச்சி என்பது காய்கறி சாறு. பாவ் பாச்சியில், பாச்சி (உருளைக்கிழங்கால் செய்யப்பட்ட சாறு) கொத்தமல்லி இலை, நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை மற்றும் வெதுப்பி இருக்கும். பெரும்பாலும் வெதுப்பியில் வெண்ணெய் தடவப்பட்டிருக்கும்.
பாவ் பாஜி | |
பரிமாறப்படும் வெப்பநிலை | நொறுக்குத்தீனி |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | மகாராட்டிரம் |
முக்கிய சேர்பொருட்கள் | வெதுப்பி, உருளைக்கிழங்கு, வெங்காயம், எலுமிச்சை |
வரலாறு
தொகு1850-களில் மும்பை நகரில் துணி உற்பத்தி செய்யும் ஆலைகளில் வேலைபார்க்கும் ஆட்களிடம் இருந்து இவ்வுணவு வகை அறிமுகமானது. [3] [4]
அவர்களுக்கு மதிய உணவு இடைவேளையின் கால அளவு குறைவாக இருந்ததால் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்ள இயலாது. உணவிற்குப்பின் கடினமாக உழைக்கவும் வேண்டியிருப்பதால், உணவு விற்பனையாளர் ஒருவர் மற்ற உணவுகளில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்து இப்பாவ் பாஜியை உருவாக்கினார். பின்னர், இவ்வகை உணவு மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது; உணவகங்களிலும் பரிமாறப்பட்டது. [4][5]
தயாரிக்கும் முறை
தொகுபாவ் பாச்சி விரைந்து தயாரிக்கக் கூடிய உணவு வகைகளில் ஒன்றாகும்.
இவற்றையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ Mumbai pav bhaji making waves in kebab land இந்தியன் எக்சுபிரசு, 15 April 2007.
- ↑ Sidhpuria. Retailing Franchising. Tata McGraw-Hill Education . பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-014503-0 . pp. 137
- ↑ Michael Patrao. "Taking pride in our very own pav". Deccan Herald.
- ↑ 4.0 4.1 "What Mumbaikars owe to the American Civil War: ‘pav bhaji’". Mint (newspaper). 4 August 2011. http://www.livemint.com/2011/08/04210819/What-Mumbaikars-owe-to-the-Ame.html?h=B.
- ↑ Rushina Munshaw-Ghildiyal (18 July 2011). "A feast of flavours". Hindustan Times இம் மூலத்தில் இருந்து 26 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130126121152/http://www.hindustantimes.com/A-feast-of-flavours/Article1-722425.aspx.