தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா)

இந்தியா

இந்திய தேசிய நெடுஞ்சாலை 4
4

தேசிய நெடுஞ்சாலை 4
இந்திய சாலை வரைபடத்தில் நீல நிறத்தில் தேசிய நெடுஞ்சாலை 4
வழித்தட தகவல்கள்
நீளம்:1,235 km (767 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மும்பை, மகாராட்டிரம்
 
முடிவு:சென்னை, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:மகாராட்டிரம்: 371 km (231 mi)
கர்நாடகம்: 658 km (409 mi)
ஆந்திரப் பிரதேசம்: 83 km (52 mi)
தமிழ்நாடு: 133 km (83 mi)
முதன்மை
இலக்குகள்:
மும்பை - புனே - சாத்தாரா - சாங்லி - கோலாப்பூர் - பெல்காம் - ஹூப்ளி - பெங்களூரு - சென்னை
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 3 தே.நெ. 4A
புனே சுற்றுப்பாதை. (நான்காம் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி.

தேசிய நெடுஞ்சாலை 4 அல்லது என்.எச்4 என்பது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் தானே என்னும் இடத்தையும், தமிழ் நாட்டில் உள்ள சென்னை நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 1235 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை நான்கு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் மகாராஷ்டிரா 371 கிமீ நீளப் பகுதியையும், கர்நாடகா 658 கிமீ நீளப் பகுதியையும், ஆந்திரப் பிரதேசம் 83 கிமீ ஐயும், தமிழ் நாடு 123 கிமீ நீளத்தையும் தம்முள் அடக்கியுள்ளன.

இரண்டு மாநிலத் தலைநகரங்களூடாகச் செல்லும் இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த நான்கு மாநிலங்களிலும் உள்ள பல நகரங்களையும், ஊர்களையும் இச்சாலை இணைக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும், இச்சாலையில் உள்ள முக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  • மஹாராஷ்டிரா : தானே, புனே, மும்புரா, சவுக், கோலாப்பூர், புனே, கேட், பாத்காவோன், சுருல், லிம்ப், வாலசே, போர்காவோன், உம்புராஜ், கராத், இத்தாக்காரே, வட்காவ், கோலாப்பூர், காகல்.
  • கர்நாடகா: சங்கேஸ்வர், பெல்காம், தார்வாடு, ஹூப்ளி, ஹாவேரி, தாவண்கரே, சித்ரதுர்க்கா, சிரா, தும்கூர், நெலமங்கலா, பெங்களூர், ஹோஸ்கோட்டே, கோலார், முள்பாகல்.
  • ஆந்திரப் பிரதேசம்: பலமனேர், சித்தூர், நரஹரிப்பேட்டா.

சாலை மேம்பாடு

தொகு

இச்சாலையின் பெரும்பகுதி இந்த நெடுஞ்சாலை இந்திய அரசின் தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது. சென்னை முதல் ராணிப்பேட்டை வரை பின் பெங்களூர் முதல் தானே வரை தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தில் உள்ளது. புனே முதல் தானே வரை ஆறு வழி விரைவு சாலையாக உள்ளது

இவற்றையும் பார்க்கவும்

தொகு

உசாத்துணை

தொகு

வெளியிணைப்புகள்

தொகு