தங்க நாற்கரச் சாலைத் திட்டம்
தங்கநாற்கரச் சாலைத் திட்டம் என்பது இந்தியாவின் நான்கு முக்கியப் பெருநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிப்பாதைகளாக மாற்றும் திட்டம் ஆகும். இத்திட்டம் 1999ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது.[1] மேற்கூறிய நான்கு நகரங்களையும் இணைக்கும் கோடு நாற்கரமாகக் காணப்படுவதால் இது தங்கநாற்கரச் சாலைத் திட்டம் எனப் பெயரிடப் பட்டது. இதன் மொத்த நீளம் 5,846 கிலோ மீட்டர்கள் ஆகும்.
தங்க நாற்கரச் சாலை | |
---|---|
இந்திய நெடுஞ்சாலை வரைபடத்தில் ஊதா வண்ணத்தில் தங்க நாற்கரச்சாலை வழித்தடம் காட்டப்பட்டுள்ளது | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு இதேநெஆ | |
நீளம்: | 5,846 km (3,633 mi) |
தில்லி – கொல்கத்தா | |
நீளம்: | 1,453 km (903 mi) |
முக்கிய சந்திப்புகள்: | தேநெ 2 |
தில்லி – மும்பை | |
நீளம்: | 1,419 km (882 mi) |
முக்கிய சந்திப்புகள்: | தேநெ 8, தேநெ 79A, தேநெ 79, தேநெ 76 |
மும்பை – சென்னை | |
நீளம்: | 1,290 km (800 mi) |
முக்கிய சந்திப்புகள்: | தேசிய நெடுஞ்சாலை 4 (இந்தியா), தேநெ 7, தேநெ 46 |
கொல்கத்தா – சென்னை | |
நீளம்: | 1,684 km (1,046 mi) |
முக்கிய சந்திப்புகள்: | தேநெ 6, தேநெ 60, தேநெ 5 |
நெடுஞ்சாலை அமைப்பு | |
இது அப்போதை இந்தியப் பிரதமர் வாஜ்பாயினால் துவங்கப்பட்டது. இந்த முதல் கட்ட தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டம் (NHDP), ரூபாய் 60,000 கோடி ( ஐக்கிய அமெரிக்க $ 12.2 பில்லியன்) செலவில் 5.846 கிமீ (3,633 மைல்) தூரம் நான்கு/ஆறு வழி(லேன்) விரைவு(எக்ஸ்பிரஸ்) நெடுஞ்சாலைகள் கொண்டது.
நன்மைகள்
தொகு- குறைவான பயண நேரம்
- குறைந்த போக்குவரத்து நெரிசல் காரணமாக எரிபொருள் சிக்கனம்.
- தரமான சாலைக் கட்டமைப்பால் குறைந்த விபத்துக்களும் பாதுகாப்பானப் பயணமும்
ஒவ்வொரு மாநிலத்தின் தங்க நாற்கரச் சாலை நீளம்
தொகுமுடிக்கப்பட்டதும் தங்க நாற்கரச் சாலை இந்தியாவின் 13 மாநிலங்கள் வழியாக கடக்கும்:
எண் | மாநிலம் | தூரம் |
---|---|---|
1 | ஆந்திர பிரதேசம் | 1,014 km (630 mi) |
2 | உத்தர பிரதேசம் | 756 km (470 mi) |
3 | ராஜஸ்தான் | 725 km (450 mi) |
4 | கர்நாடகம் | 623 km (387 mi) |
5 | மகாராஷ்டிரா | 487 km (303 mi) |
6 | குஜராத் | 485 km (301 mi) |
7 | ஒரிசா | 440 km (270 mi) |
8 | மேற்கு வங்காளம் | 406 km (252 mi) |
9 | தமிழ்நாடு | 342 km (213 mi) |
10 | பீகார் | 204 km (127 mi) |
11 | ஜார்க்கண்ட் | 192 km (119 mi) |
12 | அரியானா | 152 km (94 mi) |
13 | தில்லி | 25 km (16 mi) |
மொத்தம் | 5,846 km (3,633 mi) |
தற்போதைய நிலவரம்
தொகுஎண் | வழி | நிறைவடைந்த நீளம் (கி.மீ) | மொத்த நீளம் (கி.மீ) | நிறைவு (சதவீத்ததில் (%) | இன்றைய நிலவரப்படி | ஆதாரம் |
---|---|---|---|---|---|---|
1. | டெல்லி-கொல்கத்தா | 1,453 km (903 mi) | 1,453 km (903 mi) | 100 | ஆகஸ்ட்31, 2011 | [1] பரணிடப்பட்டது 2009-08-01 at the வந்தவழி இயந்திரம் |
2. | மும்பை - சென்னை | 1,290 km (800 mi) | 1,290 km (800 mi) | 100 | ஆகஸ்ட் 31, 2011 | [2] பரணிடப்பட்டது 2009-08-04 at the வந்தவழி இயந்திரம் |
3. | கொல்கத்தா-சென்னை | 1,667 km (1,036 mi) | 1,684 km (1,046 mi) | 98.99 | செப்டம்பர் 30, 2011 | [3] பரணிடப்பட்டது 2009-07-23 at the வந்தவழி இயந்திரம் |
4. | டெல்லி-மும்பை | 1,419 km (882 mi) | 1,419 km (882 mi) | 100 | ஆகஸ்ட் 31, 2011 | [4] பரணிடப்பட்டது 2009-06-28 at the வந்தவழி இயந்திரம் |
Total | 5,829 km (3,622 mi) | 5,846 km (3,633 mi) | 99.70 | செப்டம்பர் 30, 2011 | [5] பரணிடப்பட்டது 2009-11-29 at the வந்தவழி இயந்திரம் |
NHAI - Current status பரணிடப்பட்டது 2009-11-29 at the வந்தவழி இயந்திரம்
இணைக்கப்படும் நகரங்கள்
தொகுதில்லி - கொல்கத்தா | தில்லி - மும்பை | சென்னை - மும்பை | கொல்கத்தா - சென்னை |
---|---|---|---|
மேற்கோள்கள்
தொகு- ↑ Golden Quadrilateral Highway Network. Road Traffic Technology (2011-06-15). Retrieved on 2013-12-06.
- Fast Lane to the Future, Don Belt. National Geographic, October, 2008.