ஏலூர், கேரளம் என்ற ஊருடன் குழப்பிக் கொள்ளாதீர்.


இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு நகரமான ஏலூரு மேற்குக் கோதாவரி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இதைச் சுற்றியுள்ள ஊர்களை இணைத்து ஏலூர் மண்டலம் உருவாக்கப்பட்டது.[3]இங்கு ஏலூரு புத்தர் பூங்கா உள்ளது.

ஏலூரு
—  நகரம்  —
ஏலூரு
அமைவிடம்: ஏலூரு, ஆந்திரப் பிரதேசம் , இந்தியா
ஆள்கூறு 16°42′51″N 81°6′45″E / 16.71417°N 81.11250°E / 16.71417; 81.11250
நாடு  இந்தியா
மாநிலம் ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம் மேற்கு கோதாவரி
ஆளுநர் எசு. அப்துல் நசீர்[1]
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி[2]
ஜெகன்மோகன்ரெட்டிமுதல்அமைச்சர்
மக்கள் தொகை

அடர்த்தி

1,89,772 (2001)

12,651/km2 (32,766/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

15 சதுர கிலோமீட்டர்கள் (5.8 sq mi)

22 மீட்டர்கள் (72 அடி)

குறியீடுகள்

இந்த நகரத்தின் மக்கள் தொகை 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 189,772 ஆகும். இது விஜயவாடாவையும், விசாகப்பட்டினத்தையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. முன்னர் ஹேலாப்புரி என்று அழைக்கப்பட்ட இது, வளமான பண்பாடு மற்றும் அரசியல் வரலாறுகளைக் கொண்டது. ஒரு காலத்தில் இது விஷ்ணுகுந்தினப் பேரரசின் தலைநகரமாகவும் விளங்கியதாக நம்பப்படுகிறது. பெரிய நன்னீர் ஏரியான கொள்ளேறு ஏரி இந்த நகரத்துக்கு அண்மையிலேயே உள்ளது.

கெலபுரி என்று முற்காலத்தில் இந்நகரம் அழைக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஏலூரு மச்சிலிப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. பின்னர் 1859 ஆம் ஆண்டில் இது கோதாவரி மாவட்டத்தின் பகுதியானது. பின்னர் சில காலம் கிருஷ்ணா மாவட்டத்துள் இடம் பெற்றிருந்த இது 1925 இல் மேற்கு கோதாவரி மாவட்டம் உருவானபோது அதன் தலைநகராக்கப்பட்டது.

ஆட்சி

தொகு

ஆந்திர சட்டமன்றத்திற்கு ஏலூர் மண்டலத்தில் உள்ள சில ஊர்கள் தெந்துலூர் சட்டமன்றத் தொகுதியிலும், மற்ற ஊர்கள் ஏலூர் சட்டமன்றத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டன.

இந்த மண்டலம் இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியில் உட்படுத்தப்பட்டுள்ளது.[4]

ஊர்கள்

தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[3]

  • மல்காபுரம்
  • சாட்டபர்ரு
  • ஜாலிபூடி
  • கட்லம்பூடி
  • மாதேபல்லி
  • மனூர்
  • ஸ்ரீபர்ரு
  • கலகுர்ரு
  • கோமடிலங்கா
  • குடிவாகலங்கா
  • கொக்கிராயிலங்கா
  • பைடிசிந்தபாடு
  • பிரத்திகோள்ளலங்கா
  • சத்ரம்பாடு
  • கவரவரம்
  • தங்கெள்ளமூடி
  • சோதிமெள்ளா
  • சனிவாரப்புகோட்டை
  • ஏலூரு ஊரகம்
  • கொமடவோலு ஊரகம்
  • போணங்கி

குறிப்புகள்

தொகு
  1. http://india.gov.in/govt/governor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. 3.0 3.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-06.
  4. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏலூரு&oldid=3546651" இலிருந்து மீள்விக்கப்பட்டது