ஏலூரு புத்தர் பூங்கா

ஏலூரு புத்தர் பூங்கா இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு நகரில் அமைந்துள்ளது.ஏலபுரி என்பது ஏலூர் நகரத்தின் பண்டைய பெயராகும். கஜ வல்லிவாரி செருவு (ஆங்கிலம்: Gaja Vallivari Cheruvu) என்பது ஏலபுரி நகரத்தில் (ஆங்கிலம்: Helapuri town) உள்ள பழமையான குளங்களில் ஒன்றாகும். சாளுக்கியர் ஆட்சிக் காலத்தில் யானைகள் இக்குளத்தில் தண்ணீர் குடித்தன. கி.பி. 11 ஆம் நூற்றாண்டு வரை, ஏலூரு வேங்கி வம்சத்தின் முன்னாள் தலைநகரமாகத் திகழ்ந்தது. [1]

ஏலூரு புத்தர் சிலை
நின்ற கோலத்தில் அபய முத்திரை காட்டும் புத்தர் சிலை
அமைவிடம்ஏலூரு, இந்தியா
ஆள்கூற்றுகள்16°42′30″N 81°06′45″E / 16.70833°N 81.11250°E / 16.70833; 81.11250
உயரம்74 அடி உயரம்
திறப்பு5 மே 2013
நிர்வகிக்கும் அமைப்புஏலூரு மாநகராட்சி
ஏலூரு புத்தர் பூங்கா is located in ஆந்திரப் பிரதேசம்
ஏலூரு புத்தர் பூங்கா
ஏலூருவில் புத்தர் சிலை அமைவிடம்

புத்தர் சிலை தொகு

கஜ்ஜலவரி செருவு [2] என்ற பெயரில் அமைந்துள்ள குளத்தின் நடுவில் ஓர் அற்புதமான 74 அடி [3] உயர புத்தர் சிலை கட்டப்பட்டது. புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்காக ஓர் ஓவியக் கூடமும் உருவாக்கப்பட்டது. சிலையின் பீடத்தில் புகழ்பெற்ற அமராவதி சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. ஐக்கிய ஆந்திராவின் கடைசி முதலமைச்சராக இருந்த நல்லாரி கிரண் குமார் ரெட்டி இதனை திறந்து வைத்தார். [4]

மேலும் பார்க்கவும் தொகு

  • மிக உயரமான சிலைகளின் பட்டியல்
  • சிலைகளின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

  1. "Buddha Park History". Buddha Park History ~ BUDDHA PARK - ELURU. 2013-06-12. பார்க்கப்பட்ட நாள் 2019-06-02.
  2. Nagaraja, G. (2013-05-04). "Gajjalavari Cheruvu set to turn into a Buddhist centre" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/gajjalavari-cheruvu-set-to-turn-into-a-buddhist-centre/article4682712.ece. 
  3. "Infotainment for schoolchildren" (in en-IN). The Hindu. 2014-05-12. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/infotainment-for-schoolchildren/article6001576.ece. 
  4. Karan, Ram (2015-10-25). "Buddhist motifs for Brand Amaravati" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/stateview-amaravatis-buddhist-past/article7800561.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏலூரு_புத்தர்_பூங்கா&oldid=3426243" இலிருந்து மீள்விக்கப்பட்டது