துர்காபூர், மேற்கு வங்காளம்
துர்காபூர் (Durgapur, வங்காள மொழி: দুর্গাপুর) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் மேற்கு வர்த்தமான் மாவட்டத்தில் அமைந்த நகரம் ஆகும்.
துர்காபூர் | |
---|---|
அடைபெயர்(கள்): இந்தியாவின் இரும்பு நகரம் | |
ஆள்கூறுகள்: 23°33′N 87°19′E / 23.55°N 87.32°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | மேற்கு வர்த்தமான் |
நிறுவப்பட்ட ஆண்டு | பிந்தைய 1950-களில் |
தோற்றுவித்தவர் | முனைவர். பிதான் சந்திர ராய் (முன்னாள் மேற்கு வங்க முதலமைச்சர்) |
பெயர்ச்சூட்டு | துர்கா மோகன் சட்டோபாத்தியயா |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | துர்காபூர் மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 154.20 km2 (59.54 sq mi) |
ஏற்றம் | 65 m (213 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,80,990 |
• அடர்த்தி | 7,000/km2 (18,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | வங்காளி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 713 2xx (713 201-713 216(city proper);713 217 & 713 219 (suburbs) |
தொலைபேசி குறியிடு எண் | +91 343 |
வாகனப் பதிவு | WB 39 & WB 40 |
நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி | வர்தமான் - துர்காபூர் மக்களவைத் தொகுதி |
சட்டமன்றத் தொகுதிகள் | துர்காபூர் கிழக்கு சட்டமன்றத் தொகுதி & துர்காபூர் மேற்கு சட்டமன்றத் தொகுதி |
இணையதளம் | durgapurmunicipalcorporation |
மாநிலம் மேற்கு வங்கத்தின் தலைநகர் கொல்கத்தாவிலிருந்து 160 கிமீ தொலைவில் உள்ள ஓர் நகரமாகும். மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதலமைச்சராகவிருந்த முனைவர் பிதான் சந்திர ராயின் திட்டமிடலால் ஏற்படுத்தப்பட்ட தொழில் நகரமாகும். மிக அழகாக அமைக்கப்பட்டுள்ள இந்த தொழிற்பேட்டையை ஜோசப் ஆலன் ஸ்டீனும் பெஞ்சமின் போல்க்கும் வடிவமைத்துள்ளனர். [1] இங்கு மாநிலத்தின் பெரிய தொழிற்சாலைகளில் ஒன்றான இந்திய எஃகு நிறுவனத்தின் துர்காபூர் எஃகு ஆலை உள்ளது. இங்குள்ள பிற தொழில் நிறுவனங்கள்: இந்திய எஃகு நிறுவனத்தின் கலப்பு எஃகு ஆலை, இந்திய நடுவண் அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு நிறுவனத்தின் சோதனைச்சாலை, பல மின்னாற்றல் உற்பத்தி நிலையங்கள் (துர்காபூர் பிராஜெக்ட்ஸ்), வேதிப்பொருள் தொழிற்சாலைகள் (துர்காபூர் சிமென்ட், ஐகோர் இன்டஸ்ட்ரீஸ்) மற்றும் பொறியியல் நிறுவனங்கள்(இஸ்பாத் போர்ஜிங்ஸ், அல்ஸ்டாம்) உள்ளன. துர்காபூர் தேசிய தொழில்நுட்பக் கழகம் பொறியியல் கல்வி வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.