இட்டாவா (Etawah) இந்திய மாநிலமான உத்திரப் பிரதேசத்தின் இட்டாவா மாவட்டத்தில், யமுனை ஆற்றின் கரையில் அமைந்த நகரம் ஆகும். இந்நகரம் இட்டாவா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமாகும். மேலும் இந்நகரத்தில் யமுனை ஆறு மற்றும் சம்பல் ஆறு ஒன்று கூடுகிறது.

இட்டாவா
इटावा
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்இட்டாவா
ஏற்றம்197 m (646 ft)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்257,838
 • அடர்த்தி684/km2 (1,770/sq mi)
Languages
 • அலுவல் மொழிஇந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்206001
தொலைபேசி குறியீடு05688
வாகனப் பதிவுUP75
இணையதளம்www.etawah.nic.in

மக்கள் தொகையியல் தொகு

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இட்டாவா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 2,57,838 ஆகும். எழுத்தறிவு 82.89%.[1]

வரலாறு தொகு

 
இட்டாவா நகரத்தின் சிதிலமடைந்த பகுதிகள், 19வது நூற்றாண்டின் நடுப்பகுதி, ஓவியம்

வெண்கல காலத்தில் பாண்டவர்களுடன் தொடர்புடைய பாஞ்சால நாட்டின் பகுதியாக இட்டாவா நகரம் இருந்தது.

கி பி நான்காம் நூற்றாண்டில் குப்தப் பேரரசின் பகுதியாக இட்டாவா நகரம் இருந்தது.

கன்னோசி மன்னர் இரண்டாம் நாகபட்டரை வென்று, கி பி 9 மற்றும் 10ஆம் நூற்றாண்டில் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசில் இட்டாவா நகரம் இருந்தது. [2]

கி பி 1244இல் தில்லி சுல்தான் கியாசுதீன் பால்பன் இட்டாவா நகரத்தை முற்றுகையிட்டு தாக்கினான்.[3]

சிப்பாய் கிளர்ச்சி, 1857 தொகு

பிரித்தானிய கம்பெனி ஆட்சிக்கு எதிரான முதல் இந்திய விடுதலைப் போரான, சிப்பாய்க் கிளர்ச்சி 1857 சூன் முதல் டிசம்பர் முடிய இட்டாவா நகரத்திலும், இட்டாவா மாவட்டத்திலும் தொடர்ந்து நடைபெற்றது.

நவீன வரலாறும், பொருளாதாரமும் தொகு

இட்டாவா நகரம், கொல்கத்தா-தில்லி இருப்புப் பாதையில் உள்ளது. பருத்தி, எண்ணெய் வித்துக்கள் முக்கிய வேளாண் பயிர்கள் ஆகும். உயர் ரக ஜம்னாபாரி ஆடுகள் மற்றும் படாவாரி எருமைகள் வளர்த்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் இட்டாவா நகரத்தைச் சுற்றிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் காளவாசல்கள் அமைந்துள்ளது.

போக்குவரத்துகள் தொகு

தொடருந்து தொகு

ஐந்து நடைமேடைகள் கொண்ட இட்டாவா தொடருந்து நிலையத்தின் வழியாக நாட்டின் பல பகுதிகளிலிருந்து, நாள் ஒன்றிற்கு 71 தொடருந்துகள் வந்து செல்கிறது. http://indiarailinfo.com/arrivals/etawah-junction-etw/707

சாலைப் போக்குவரத்து தொகு

இட்டாவா நகரத்தின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 2, தில்லி, ஆக்ரா, கான்பூர், அலகாபாத், வாரணாசி, முகல்சராய், தன்பாத், மற்றும் கொல்கத்தா நகரங்களை இணைக்கிறது. மேலும் இட்டாவா நகரத்தின் அருகே அமைந்த குவாலியர், ஆக்ரா மற்றும் கான்பூர் நகரங்களை சாலை வழியாக இணைக்கிறது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Etawah
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்டாவா&oldid=3233539" இருந்து மீள்விக்கப்பட்டது