கேசரி (செய்தித்தாள்)

செய்தித்தாள்

கேசரி (Kesari) (சமசுகிருதத்தில் சிங்கம்) என்பது ஒரு மராத்திய செய்தித்தாள் ஆகும். இது 1881 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர இயக்கத்தின் முக்கிய தலைவரான பால கங்காதர திலகரால் நிறுவப்பட்டது. இந்த செய்தித்தாள் இந்திய தேசிய சுதந்திர இயக்கத்தின் செய்தித் தொடர்பாளராகப் பயன்படுத்தப்பட்டது. மேலும் கேசரி மராத்தா அறக்கட்டளையாலும், திலக்கின் சந்ததியினராலும் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. [1] [2]

கேசரி
வகைநாளிதழ்
வடிவம்அச்சு ஊடகம், இணையவழி ஊடகம்
உரிமையாளர்(கள்)கேசரி மராத்தா அறக்கட்டளை
நிறுவியது1881 சனவரி 4
அரசியல் சார்புவலதுசாரி
மொழிமராத்தி
இணையத்தளம்www.dailykesari.com
செய்தித்தாளின் தலையங்கம்

பால கங்காதர் திலகர் தனது இரண்டு செய்தித்தாள்களான கேசரியை மராத்தியிலும், மக்ராத்தாவை (கேசரி-மராத்தா அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது) [3] [4] ஆங்கிலத்திலும் புனேவிலிருந்து நடத்தி வந்தார். செய்தித்தாள்கள் முதலில் சிப்லங்கர், அகர்க்கர் மற்றும் திலக் ஆகியோரால் கூட்டுறவு நிறுவனமாகத் தொடங்கப்பட்டன.

ஆரம்ப ஆண்டுகள், ஆசிரியர்களும் எழுத்தாளர்களும்தொகு

கேசரியின் ஆசிரியர்களில் அகர்க்கர் (அதன் முதல் ஆசிரியர்), சிப்லங்கர், திலக் உட்பட பல சுதந்திர போராளிகள், சமூக ஆர்வலர்கள் / சீர்திருத்தவாதிகள் இருந்தனர். அகர்க்கர் தனது சொந்த செய்தித்தாளான சுதாரக் (சீர்திருத்தவாதி) என்பதைத் தொடங்க 1887 ஆம் ஆண்டில் கேசரியை விட்டு வெளியேறினார். அதன்பிறகு திலகர் தொடர்ந்து செய்தித்தாளைத் தானே இயக்கி வந்தார். திலகரின் நெருங்கிய கூட்டாளியான நரசிம்ம சிந்தமன் கேல்கர் 1897, 1908 ஆம் ஆண்டுகளில் திலகர் சிறையில் இருந்தபோது இரண்டு முறை ஆசிரியராக பணியாற்றினார். [5]

தற்போது பத்திரிக்கைதொகு

லோக்மண்ய பால்கங்காதர் திலகரின் பெரிய பேரன் தீபக் திலகரால் தி டெய்லி கேசரி என்ற பெயரில் மராத்தி பத்திரிகை இணைய வழியே தொடர்ந்து வெளியிடப்படுகிறது. [6]

கேசரி வாடாவும் திலகர் அருங்காட்சியகமும்தொகு

திலகர் செய்தித்தாளை வெளியிட்ட அசல் வாடா (முற்றம் / கட்டிடம் ) இன்றும் கேசரியின் தற்போதைய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. கேசரியின் அலுவலகங்களுடன், முற்றத்தில் திலகர் அருங்காட்சியகமும், கேசரி-மராத்தா நூலகம் ஆகியவை உள்ளன. திலகரின் நினைவுச் சின்னங்கள், அவரின் எழுத்து மேசை, பல அசல் ஆவணங்கள், 1907 ஆம் ஆண்டில் இசுடுட்கார்ட்டில் மேடம் காமாவால் கட்டமைக்கப்பட்ட முதல் இந்திய தேசியக் கொடி ஆகியவை இதில் அடங்கும். [7] கணபதி திருவிழாவின் போது, வாடாவை ஏராளமான மக்கள் பார்வையிடுகிறார்கள். [8] [9]

குறிப்புகள்தொகு

  1. "About the Vice Chancellor - Deepak J.Tilak". Tilak Maharashtra Vidyapeeth.
  2. "Retracing the legend of Gangadhar Tilak at Kesariwada". Blog - Indian Heritage Sites.
  3. "During the independence movement, newspaper ‘Kesari’ was published by_: - General Knowledge Today".
  4. Mone (Tilak), Mrs. Geetali Hrishikesh. "The Role of Free Circulation in Optimum Newspaper Development - Ph.D. thesis submission". Preface - Shodhganga. மூல முகவரியிலிருந்து 20 June 2014 அன்று பரணிடப்பட்டது.
  5. Watve, K.N. (1947). "Sri Narasimha Chintaman "Alias" Tatyasaheb Kelkar". Annals of the Bhandarkar Oriental Research Institute: 156–158. 
  6. "Know your city - Pune". Indian Express. http://archive.indianexpress.com/news/know-your-city/1188022/. பார்த்த நாள்: 17 June 2014. 
  7. Pal, Sanchari. "Remembering Madam Bhikaji Cama, the Brave Lady to First Hoist India’s Flag on Foreign Soil".
  8. "Kesari Wada". Maharashtra Tourism.
  9. "Kesari Wada". Pune Site.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேசரி_(செய்தித்தாள்)&oldid=3008758" இருந்து மீள்விக்கப்பட்டது