பிகாஜி காமா

இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை

பிகாஜி ருஸ்தம் காமா (Bhikaiji Rusto Cama) (24 செப்டம்பர் 1861 - 13 ஆகத்து 1936), மும்பை மாகானத்தில் செல்வாக்கு மிக்க பார்சி குடும்பத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை ஆவார். பிறர்க்கென உழைக்கும் கோட்பாட்டினை உடையவர். இந்திய விடுதலை போராட்டதற்கு உதவியாக ஜெர்மனி, பிரான்சு போன்ற நாடுகளுக்கு சென்று ஆதரவு திரட்டியவர். மேடம் பிகாஜி 3 ஆகத்து 1885ல், வழக்கறிஞர் ருஸ்தம் கே. ஆர். காமாவை மணந்தார். உடல்நிலையை சீர்படுத்த 1902இல் இலண்டனுக்கு சென்றார். இலண்டனில் பல இந்திய தலைவர்களை சந்தித்தார். அங்கிருந்தபடியே இந்திய விடுதலைப் புரட்சியாளர்களுக்கு உதவினார் .

பிகாஜி ருஸ்தம் காமா
Madam Bhikaiji Cama.jpg
மேடம் பிகாஜி ருஸ்தம் காமா
பிறப்பு24 செப்டம்பர் 1861
மும்பை, இந்தியா
இறப்பு13 ஆகத்து 1936 (வயது 74)
மும்பை, இந்தியா
அரசியல் இயக்கம்இந்திய விடுதலை இயக்கம்

இந்திய கொடியை வெளிநாட்டு மண்ணில் முதல் முதலில், 22ஆம் நாள் அகஸ்டு 1907ல் ஜெர்மனியில் ஏற்றினார்.

இந்தியாவிற்கு புதிய கொடியை அறிமுகம் செய்தல்தொகு

 
விடுதலை இந்தியாவிற்கென 22 ஆகஸ்டு 1907இல் பிகாஜி காமா வடிவமைத்த கொடி

விடுதலை அடையப் போகும் இந்தியாவிற்கென்று புதிய கொடியை உருவாக்கினார் மேடம் காமா. மேலே, பச்சை வண்ணப் பட்டையில், இந்திய மாநிலங்களை குறிக்கும் வகையில் எட்டு மலர்ந்த தாமரைகள் பொறிக்கப்பட்டிருந்தன. நடுவில் மஞ்சள் நிற பட்டையில், வந்தே மாதரம் என, தேவநாகரி வரி வடிவில், எழுதப்பட்டிருந்தது. அடியில், சிவப்பு நிறப் பட்டையில், இந்து - முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்தும், பிறை சந்திரனும், சூரியனும் இடம் பெற்றிருந்தன.[1] இக்கொடி இன்றும் பூனாவில் உள்ள மராத்தா பொது நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேடம் காமா, இந்திய மண்ணில் 13 ஆகத்து 1936இல் உயிர்நீத்தார்.[2]

பிகாஜி ருஸ்தம் காமாவின் நினைவை பாராட்டு விதமாக இந்திய அரசின் அஞ்சல் துறை அவரது உருவம் தாங்கிய அஞ்சல் தலையை 26 சனவரி 1962இல் வெளியிட்டது.[3]

மேற்கோள்கள்தொகு

  1. "Quiz Whizz". The Hindu. 25 செப்டம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. ƒசுதந்திர வேள்வியில் பெண்களின் பங்கு
  3. BHIKAIJI CAMA

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகாஜி_காமா&oldid=2906412" இருந்து மீள்விக்கப்பட்டது