தேகு ரோடு கண்டோன்மென்ட்
தேகு ரோடு கண்டோன்மென்ட் (Dehu Road Cantonment), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புணே மாவட்ட நிர்வாகத் தலைமையிடமான புனே நகரத்திற்கு அருகில் அமைந்த ஒரு இராணுவப் பாசறை நகரம் ஆகும். இப்புதிய இராணுவப் பாசறை நகரம் அக்டோபர் 1958-இல் நிறுவப்பட்டது. முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள், 1940-இல் இவ்விடத்தில் இராணுவக் கிடங்கிகள் அமைத்திருந்தனர்.
தேகு ரோடு கண்டோன்மென்ட் | |
---|---|
பாசறை நகரம் | |
ஆள்கூறுகள்: 18°41′02″N 73°43′54″E / 18.6838°N 73.7318°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 48,961 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 412101 |
வாகனப் பதிவு | MH-14 |
நிர்வாகம்
தொகு7 வார்டுகள் கொன்ட தேகு சாலை கண்டோன்மென்ட் ஆட்சி மன்றக் குழுவின் உறுப்பினர்கள் மகாராட்டிரா அரசின் உள்ளாட்சிச் சட்டப்படி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தேகு சாலை கண்டோன்மென்டின் மக்கள்தொகை 48,961 ஆகும்.
புவியியல் & அமைவிடம்
தொகுகடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்தில் அமைந்த தேகு ரோடு கண்டோன்மென்ட், புனே மாநகரத்திற்கு மேற்கே 27 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தேகு சாலை கண்டோன்மென்டின் வடக்கில் பீமா ஆற்றின் துணை ஆறுகளான இந்திராணி ஆறும், தெற்கில் பவனா ஆறும் பாய்கிறது. சிஞ்ச்வடு பகுதிக்கு வடமேற்கில் 7 கிலோ மீட்டர் தொலைவில் தேகு ரோடு உள்ளது. மத்திய புனே பகுதியிலிருந்து தேசிய நெடுஞ்சாலை 4 (பழைய மும்பை- புனே சாலை) பிம்பிரி-சிஞ்ச்வடு வழியாக தேகு ரோட்டை இணைக்கிறது.
பொருளாதாரம்
தொகுதேகு ரோட்டிற்கு அருகில் உள்ள ஹிஞ்சவடியில் இராஜிவ் காந்தி பன்னாட்டு கணினி தொழில்நுட்ப மையம் உள்ளது. தேகு ரோட்டிற்கு 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த தளேகாவ் (Talegaon) பகுதியில் இந்திய இராணுவத்திற்கு தேவையான வெடிமருந்து தொழிற்சாலை, ஜெனரல் மோட்டார், மெர்சிடிஸ் பென்ஸ் பிஎம்டபிள்யு, வோக்ஸ்வேகன் மோட்டார் கார் தொழிற்சாலைகள் மற்றும் ஜெ. சி. பி (J. C. Bamford) கனரக வாகன தொழிற்சாலைகளும் உள்ளது. மேலும் டெட்ரா பேக் உண்வு பதனிடம் தொழிற்சாலை[1], ஐஎன்ஏ ஊசி ரோலர் தாங்கிகள் (Needle Roller Bearings) தொழிற்சாலைகளும் உள்ளது.
போக்குவரத்து
தொகுபுனே புறநகர் ரயில்வேயின் தொடருந்துகள் தேகு ரோட்டை புனே தொடருந்து நிலையத்துடன் இணைக்கிறது.[2][3][4] புதிதாக கட்டப்பட்ட மேம்பாலச் சாலை பிம்பிரி-சிஞ்ச்வடு நகரத்துடன் எளிதாக இணைக்கிறது.
தொடருந்து நிலையம்
தொகு4 நடைமேடைகளும், 6 இருப்புப் பாதைகளும் கொண்ட தேஹு ரோடு தொடருந்து நிலையம், புனே புறநகர் ரயில்வே மூலம் லோணாவ்ளா, புனே - தளேகாவ், சிவாஜி நகர் பகுதிகளுடன் இணைக்கிறது. மேலும் மும்பை, கோலாப்பூர் காத்ரஜ் பகுதிகளுடன் இணைக்கிறது.[5]
இதனையும் காண்க
தொகு- புனே கண்டோன்மென்ட்
- கட்கி கண்டோன்மென்ட்
மேற்கோள்கள்
தொகு- ↑ Tetra Pak
- ↑ Up Side Local Trains / Railway Time Table Pune Station. Punediary.com (2003-09-24). Retrieved on 2011-05-17.
- ↑ Down Side Local Trains / Railway Time Table Pune Station பரணிடப்பட்டது 2013-09-25 at the வந்தவழி இயந்திரம். Punediary.com (2003-09-24). Retrieved on 2011-05-17.
- ↑ Rail Booking, now at Dehu Road பரணிடப்பட்டது 2018-08-24 at the வந்தவழி இயந்திரம். Punesite.com (2011-01-17). Retrieved on 2011-05-17.
- ↑ "Dehu Road Railway Station | Trains Timetable passing through Dehu Road Station". www.cleartrip.com.