புனே கண்டோன்மென்ட்

புனே கண்டோன்மென்ட் (Pune Cantonment or Pune Camp) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புணே மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான புனே நகரத்திற்கு அருகில் அமைந்த இராணுவத்தினர் மற்றும் அவர்தம் குடும்பங்கள் கொண்ட பாசறை நகரம் ஆகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது இப்பாசறை நகரம், பிரித்தானிய இந்தியச் சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகள் தங்கும் பொருட்டு 1817-இல் நிறுவப்பட்டது. இந்திய இராணுவத்தின் தென் மன்டல தலைமையகம் புனே கண்டோன்மென்ட்டில் அமைந்துள்ளது.

புனே பாசறை நகரம்
पुणे छावणी
புனே கண்டோன்மென்ட்
இராணுவப் பாசறை
பிரித்தானியர்களால் நிறுவப்பட்ட கடைகள்
புனே கண்டோன்மென்டின் மகாத்மா காந்தி சாலை
புனே பாசறை நகரம் is located in மகாராட்டிரம்
புனே பாசறை நகரம்
புனே பாசறை நகரம்
இந்தியாவின் மகாராட்டிரா]]வின புனே நகரத்திற்கு அருகில் அமைந்த புனே கண்டோன்மென்ட் நகரம்
ஆள்கூறுகள்: 18°25′25″N 73°54′32″E / 18.42361°N 73.90889°E / 18.42361; 73.90889
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மண்டலம்புணே மண்டலம்
மாவட்டம்புனே
நிறுவப்பட்டது.1817
தாலுகாஹவேலி தாலுகா
அரசு
 • நிர்வாகம்புனே கண்டோன்மென்ட் மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்11.9 km2 (4.6 sq mi)
ஏற்றம்
577 m (1,893 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்79,454
 • அடர்த்தி6,700/km2 (17,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஆங்கிலம் & மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
411 0xx
தொலைபேசி குறியிடு(91)20
வாகனப் பதிவுMH 12
மக்களவைத் தொகுதிபுணே மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிபுனே கண்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதி
உள்ளாட்சி அமைப்புபுனே கண்டோன்மென்ட் போர்டு
தட்ப வெப்பம்கோப்பென் காலநிலை வகைப்பாடு
சராசரி ஆண்டு மழைப்பொழிவு24 °C (75 °F)
சராசரி கோடைகால வெப்பம்30 °C (86 °F)
சராசரி குளிர்கால வெப்பம்12 °C (54 °F)
இணையதளம்www.punecantonmentboard.org

நிர்வாகம்

தொகு

இது புனே மாநகராட்சியின் ஒரு பகுதியாக இல்லை எனினும், புனே கண்டோன்மென்ட் பகுதியின் நிர்வாகத்தை, உள்ளாட்சி முறைப்படி, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை, கண்டோன்மென்டில் வாழும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது. லஷ்கர் காவல் நிலையம் இப்பகுதியின் சட்டம் & ஒழுங்கை பராமரிக்கிறது.[2]

அரசியல்

தொகு

புனே கண்டோன்மென்ட் பகுதி புணே மக்களவைத் தொகுதிக்கும், புனே கண்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.

போக்குவரத்து

தொகு

புனே நகர அரசுப் பேருந்துகள் புனே கண்டோன்மென்ட் பகுதியை, புனே மாநகராட்சி மற்றும் பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சிப் பகுதிகளுடன் இணைக்கிறது.[3]

புனே கண்டோன்மென்ட் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 9, புனே நகரத்தை சோலாப்பூர், ஐதராபாத் வழியாக ஆந்திரப் பிரதேசத்தின் கடற்கறை நகரமான மச்சிலிப்பட்டணத்துடன் இணைக்கிறது.

சேவைகள்

தொகு

புனே மாநகராட்சி இந்த கண்டோன்மென்ட் பகுதிக்கு குடிநீர் சேவை வழங்குகிறது. மகாராட்டிரா அரசு மின் வாரியம் இப்பகுதிக்கு மின் சேவை வழங்குகிறது.

கல்வி

தொகு

புனே கண்டோன்மென்ட் மன்றக் குழு, இப்பகுதியில் தொழிற் பயிற்சி நிலையம் (Industrial training institute), 3 உயர்நிலைப் பள்ளிகள், 6 துவக்கப் பள்ளிகள் நடத்துகிறது.[4] மேலும் இந்த கண்டோன்மென்ட் பகுதியில் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் செய்ல்படுகிறது. இராணுவ மருத்துவக் கல்லூரி இக்கண்டோன்மென்ட் பகுதியில் இயங்குகிறது.

மருத்துவம்

தொகு

புனே கண்டோன்மென்ட் நிர்வாகம், இப்பகுதியில் 100 படுக்கைகள் கொண்ட ஒரு பெரிய மருத்துவமனை நடத்துகிறது.[5] மேலும் ஒரு இராணுவ மருத்துவ மனையும் இயங்குகிறது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Cities in India". பார்க்கப்பட்ட நாள் 16 January 2010.
  2. "Pune Police Stations". Archived from the original on 28 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 15 January 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "PMPML". Archived from the original on 5 December 2009. பார்க்கப்பட்ட நாள் 19 December 2009.
  4. "PCB Admin Report". Archived from the original on 26 டிசம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 28 November 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Pune Cantonment Board". Archived from the original on 3 ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 25 November 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=புனே_கண்டோன்மென்ட்&oldid=3718372" இலிருந்து மீள்விக்கப்பட்டது