புனே பெருநகரப் பகுதி

(புனே பெருநகரப் பகுதிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

புனே பெருநகர பகுதி (Pune Metropolitan Region (PMR)) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள புனே மாநகராட்சி, பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சி, புனே கண்டோன்மென்ட், கட்கி கண்டோன்மென்ட், தேகு ரோடு கண்டோன்மென்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஹவேலி தாலுகாவின் பகுதிகளையும் கொண்டதாகும். புனே பெருநகர வளர்ச்சிப் பகுதி 7,256 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டதாகும்.[1][5][6]

புனே பெருநகரப் பகுதி
பெருநகரப் பகுதி
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்புனே
தாலுகா[1][2]
பரப்பளவு
 • மாநகரம்
7,256.46 km2 (2,801.73 sq mi)
மக்கள்தொகை
 (2011)[3]
 • பெருநகர்
50,57,709
 • பெருநகர் அடர்த்தி700/km2 (1,800/sq mi)
நேர வலயம்ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்)
பெருநகர வளர்ச்சி ஆணையம்புனே பெருநகர வளர்ச்சி ஆணையம் (PMRDA)[4]
பெருந்தலைவர்உத்தவ் தாக்கரே, மகாராட்டிரா மாநில முதலமைச்சர்
நகர்புர வளர்ச்சி அமைச்சர்
பொறுப்பான அமைச்சர்அஜித் பவார், சட்டமன்ற உறுப்பினர்
புனே மாவட்டம்
பெருநகர ஆணையாளர்சுபாஷ் திவாஸ், இஆப

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புனே பெருநகர வளர்ச்சிப் பகுதியின் மக்கள்தொகை 50,57,709 ஆகும்.[7]

மகாராட்டிரா மாநில முதலமைச்சரின் தலைமையில் இயங்கும் புனே பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் (Pune Metropolitan Region Development Authority) (PMRDA), நகர்பற வளர்ச்சி அமைச்சர் மற்றும் ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரி தலைமை நிர்வாகியாக செயல்படுகிறார். இது புனே பெருநகர வளர்ச்சிப் பணிக்களுக்கு திட்டமிட்டு, விதிகளை வரையறைத்து கண்காணிக்கிறது. புனே மற்றும் பிம்பிரி-சிஞ்ச்வடு பகுதிகளைச் சுற்றி சுற்றுச் சாலைகள் அமைத்தல், புனே மெட்ரோ இரயில்வே அமைத்தல் புனே பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முக்கியப் பணிகளாக உள்ளது.[8][9]

புனே பெருநகரத்தின் எல்லைகள்

தொகு

புனே பெருநகர வளர்ச்சிப் பகுதியில் புனே மாவட்டத்தின் புனே நகர்புற தாலுகா, பிம்பிரி-சிஞ்ச்வடு, புனே கண்டோன்மென்ட், கட்கி கண்டோன்மென்ட், தேகு ரோடு கண்டோன்மென்ட் மற்றும் புனேவைச் சுற்றியுள்ள ஹவேலி தாலுகாவின் பெரும் பகுதிகள் அடங்கியுள்ளது. புனே பெருநகரப் பகுதியில் இயங்கும் உள்ளாட்சி அமைப்புகள் பின்வருமாறு:

மாநகராட்சிகள்

தொகு

கண்டோன்மென்டுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Pune Metropolitan Region Development Authority - PMRDA". www.pmrda.gov.in. Archived from the original on 2018-04-26. பார்க்கப்பட்ட நாள் 2018-04-26.
  2. "Govt. of Maharashtra Notification: Extending boundaries of Pune Metropolitan Region" (PDF). Official website of the Government of Maharashtra. 10 February 2016.
  3. 3.0 3.1 "Expansion plans: PMRDA wants 800 villages within limits". Times of India (Pune). 30 May 2015. http://timesofindia.indiatimes.com/city/pune/Expansion-plans-PMRDA-wants-800-villages-within-limits/articleshow/47476408.cms. பார்த்த நாள்: 1 June 2015. 
  4. "Pune Metropolitan Region Development Authority - PMRDA". www.pmrda.gov.in. Archived from the original on 2018-05-06. பார்க்கப்பட்ட நாள் 2018-05-06.
  5. "Govt. of Maharashtra Notification: Extending boundaries of Pune Metropolitan Region" (PDF). Official website of the Government of Maharashtra. 10 February 2016.
  6. "‘PMRDA area notified, DP to be announced in a year’" (in en-US). The Indian Express. 2017-06-20. http://indianexpress.com/article/cities/pune/pmrda-area-notified-dp-to-be-announced-in-a-year-4712497/. 
  7. Pune Urban Region
  8. "At Rs 2,591 crore, PMRDA’s 2018-19 budget 200% more than last year - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/pune/at-rs-2591-crore-pmrdas-2018-19-budget-200-more-than-last-year/articleshow/63472115.cms. 
  9. "PMRDA budget 2018-19: Metro line gets Rs 888 crore, Rs 1,235 crore for ring road" (in en). Hindustan Times. 2018-03-26. https://www.hindustantimes.com/pune-news/pmrda-budget-2018-19-metro-line-gets-rs-888-crore-rs-1-235-crore-for-ring-road/story-a1ljMHc1I2wQMzKKvWQ2rL.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனே_பெருநகரப்_பகுதி&oldid=3788418" இலிருந்து மீள்விக்கப்பட்டது