புனே நகர்புற தாலுகா
புனே நகர்புற தாலுக்கா (Pune City taluka) (மராத்தி: पुणे शहर तालुका), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தின் 14 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1] தலைமையிடம் புனே நகரம் ஆகும்.
புனே நகரபுற வட்டம் | |
---|---|
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் புனே நகர்புற வருவாய் வட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரா |
மாவட்டம் | புனே மாவட்டம் |
தலைமையிடம் | புனே |
மக்கள்தொகை (2011) | |
• தாலுக்கா | 31,24,458 |
• நகர்ப்புறம் | 31,24,458 |
புனே மாநகராட்சியின் அதிகார எல்லையே, புனே தாலுக்காவின் அதிகார வரம்பாகும். மேலும் புனே மாநகராட்சியின் பரப்பளவு புனே நகரபுற தாலுக்காவிற்குள்ளே அடங்கும்.
புனே நகர்புற தாலுகாவைச் சுற்றிலும் ஹவேலி தாலுகாவின் பகுதிகள் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, புனே நகர்புற வருவாய் வட்டத்தின் மொத்த மக்கள்தொகை 31,24,458 ஆகும். அதில் ஆண்கள் 1,603,675 மற்றும் 1,520,783 பெண்கள் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 948 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 3,37,062 உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.56% ஆக உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 2,481,627 (79.43%), பௌத்தர்கள் 1,23,179 (3.94%) இசுலாமியர் 3,44,571 (11.03%), சமணர்கள் 76,441 (2.45%), கிறித்தவர்கள் 67,808 (2.17%) மற்றும் பிறர் 0.98 ஆகவுள்ளனர். இவ்வருவாய் வட்டத்தில் பெரும்பான்மையோர் மராத்தி மொழி பேசுகின்றனர்.[2]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Talukas in Pune district பரணிடப்பட்டது 2010-03-10 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Pune City Census 2011 data
வார்ப்புரு:புனே மாவட்டம்