பிம்ப்ரி என்னும் புறநகர்ப் பகுதி மகாராஷ்டிராவின் புனே நகரத்திற்கு அருகில் உள்ளது. இது புனே நகரில் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. புனே மாவட்டத்தின் ஹவேலி தாலுகாவில் உள்ள இந்த புறநகர்ப் பகுதி, பிம்பிரி, சிஞ்ச்வடு என்ற இரட்டை நகரங்களைக் கொண்டது. இந்த நகரங்களை பிம்பிரி-சிஞ்ச்வடு மாநகராட்சியினர் ஆளுகின்றனர். பழைய புனே-மும்பை நெடுஞ்சாலை வழியாக, பிம்பிரியில் இருந்து புனே நகருக்கு செல்லலாம்.

பிம்ப்ரி
புறநகர்
நாடுஇந்தியா
மாநிலம்மகாராஷ்டிரா
மாவட்டம்புனே
தாலுகாஹவேலி தாலுகா
பரப்பளவு
 • மொத்தம்171.51 km2 (66.22 sq mi)
ஏற்றம்570 m (1,870 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்17,29,320
 • அடர்த்தி10,000/km2 (26,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்மராத்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN411017, 411018
தொலைபேசிக் குறியீடு91-20
வாகனப் பதிவுMH-14
மக்களவைத் தொகுதிமாவள், ஷிரூர்
சட்டசபைத் தொகுதிபிம்பிரி, சிஞ்ச்வடு, போசாரி
அரசு மையம்பிம்ப்ரி-சிஞ்ச்வடு மாநகராட்சி
மும்பையில் இருந்து165 கிலோமீட்டர்கள் (103 mi)
இணையதளம்www.pcmcindia.gov.in

பண்பாடு தொகு

குருநானக் ஜெயந்தி, தசரா, பகரானா சாகிப், தீபாவளி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களைக் கொண்டாடுகின்றனர்.

தொழிற்சாலைகள் தொகு

இங்கு டாட்டா மோட்டார்ஸ், மெர்சிடிஸ் பென்ஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் தொழிற்சாலைகள் உள்ளன.

போக்குவரத்து தொகு

பிம்பிரியில் போக்குவரத்து வசதிகள் உள்ளன. இந்த நகரத்திற்கு அருகிலேயே புனே விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு உள்ள பிம்பிரி ரயில் நிலையத்திற்கு புனே புறநகர் ரயில்கள் வந்து செல்கின்றன. பழைய புனே-மும்பை நெடுஞ்சாலை வழியாக பிற நகரங்களுக்கு செல்லலாம். இங்கே புனே மாநகரப் பேருந்துகளும் இயங்குகின்றன.

இதனையும் காண்க தொகு

சான்றுகள் தொகு


இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிம்பிரி&oldid=3494218" இலிருந்து மீள்விக்கப்பட்டது