மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை
மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை (Mumbai-Pune Expressway) இந்தியாவின் முதலாம் ஆறு-வழி, சுரங்கத்தைப் பாதை கொண்ட விரைவு நெடுஞ்சாலை ஆகும். இச்சாலை முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட அணுக்கம் கொண்ட நெடுஞ்சாலை ஆகும்; அதாவது, இச்சாலையின் சந்திகள் எல்லாமே இடைமாற்றுச்சந்திகள் ஆகும்.[1][2][3]
Mumbai Pune Expressway | |
---|---|
மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலை | |
யஷ்வந்தராவ் சவான் விரைவு நெடுஞ்சாலை Yashwantrao Chavan Expressway यशवंतराव चव्हाण द्रुतगती मार्ग | |
விரைவு நெடுஞ்சாலை வரைப்படம் | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு மகாராஷ்டிரா அரசு சாலை மேம்பாட்டு நிறுவனம் (MSRDC) | |
நீளம்: | 93 km (58 mi) |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | கலம்போலி |
முடிவு: | தேஹு சாலை |
அமைவிடம் | |
மாநிலங்கள்: | மகாராஷ்டிரா |
முக்கிய நகரங்கள்: | நவி மும்பை, லோனாவாலா, புனே |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மும்பையின் கிழக்குப் பகுதியையும் - புனே நகரத்தின் தேஹு சாலையையும் இணைக்கும் இச்சாலையின் மொத்த நீளம் 93 கிமீ ஆகும். ஏப்ரல் 2002-இல் இச்சாலை முழுவதும் போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டது. இச்சாலையை அமைக்க மொத்தம் 1630 கோடி ரூபாய் செலவு ஆனது.
இச்சாலை தங்கநாற்கரச் சாலைத் திட்டத்தில் ஒரு பிரிவு.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mumbai-Pune Expressway, India". Road Traffic Technology. பார்க்கப்பட்ட நாள் 2010-08-21.
- ↑ "Rs 7,000-cr project to add more lanes to expressway, NH-4". The Indian express. Express News Agency. 6 February 2015. http://indianexpress.com/article/cities/mumbai/rs-7000-cr-project-to-add-more-lanes-to-expressway-nh-4/.
- ↑ "Mumbai Pune Expressway Route Map, Toll Charges, News and Latest Updates - Infra Info Hub" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-08-12. பார்க்கப்பட்ட நாள் 2024-08-12.