சீரம் இன்ஸ்டிடியூட், இந்தியா

சீரம் இன்ஸ்டிடியூட் (Serum Institute of India) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புனே நகரத்தில் செயல்படும் நோய்த் தடுப்பூசி மருந்துகள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு மருந்துகள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் ஆகும்.[3][4]

சீரம் இன்ஸ்டிடியூட்
வகைதனியார் நிறுவனம்
நிறுவுகை1966
நிறுவனர்(கள்)சைரஸ் எஸ். பூனாவாலா
தலைமையகம்புனே, மகாராட்டிரா, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஉலகம் முழுவதும்
முதன்மை நபர்கள்அதர் பூனேவாலா (தலைவர்)
தொழில்துறைநோய் எதிர்ப்பு மருந்துகள், நோய்த் தடுப்பூசி மருந்துகள்
வருமானம் US$595 மில்லியன் (2015)
நிகர வருமானம் US$295 மில்லியன் (2015)
துணை நிறுவனங்கள்Vakzine Projekt Management GmbH[1], Bilthoven Biologicals BV[2]
இணையத்தளம்seruminstitute.com

இத்தனியார் மருந்து நிறுவனம் சைரஸ் எஸ். பூனாவாலா எனும் பார்சி நபரால் 1966-இல் துவக்கப்பட்டது.[5] இந்நிறுவனம் பூனேவாலே முதலீடு மற்றும் தொழில்கள் குழுமத்தின் துணை நிறுவனம் ஆகும்.[6] இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர் அதர் பூனேவாலா ஆவார்.

மேலோட்ட்ப் பார்வை தொகு

இந்நிறுவனம் நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் நோய்த் தடுப்பூசி மருந்துகள் உற்பத்தி செய்யும் உலகின் பெரிய நிறுவனம் ஆகும்.[7] இந்நிறுவனம் ஆண்டுக்கு 130 கோடி (1.3 பில்லியன்) டோஸ் தடுப்பு மருந்துகள் உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனம் காச நோய்க்கு காசநோய்த் தடுப்பூசி மருந்து, இளம்பிள்ளை வாதம் நோய்க்கு தடுப்பூசி மருந்து, குழந்தைகளுக்கான தடுப்பூசி மருந்துகள் மற்றும் பாம்பு மற்றும் நாய்க்கடிக்களுக்கான விஷ முறிவு மருந்துகள் உற்பத்தி செய்கிறது.[8][9][10]

2009-இல் இந்நிறுவனம் எச்1.என்1 சளிக்காய்ச்சல் எனப்படும் பன்றிக்காய்ச்சலுக்கான மருந்தை உற்பத்தி செய்கிறது.[11][12]

2016-இல் ஐக்கிய அமெரிக்காவின் மசாசூட்ஸ் மருத்துவப் பள்ளியின் ஆதரவுடன் இணைந்து, பாம்பு மற்றும் நாய்க்கடிகளுக்கு, வெகு விரைவில் நஞ்சு முறிவு மருந்தை கண்டுபிடித்தனர்.[13][14]

கொரானா வைரஸ் தடுப்பு மருந்து தொகு

2020-இல் இந்நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்துடன் கூட்டாக, அஸ்டிரா ஜெனிக்கா நிறுவனத்துடன் (AstraZeneca) இணைந்து ChAdOx1 nCoV-19 எனும் பெயரில் கொரானா வைரஸ் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆய்வு செய்து வருகிறது.[15][16]

இந்நிறுவனம் 10 கோடி (100 மில்லியன்) கொரானா தடுப்பு மருந்து டோஸ்களை இந்தியா மற்றும் பிற வளரும் நாடுகளுக்கும் வழங்குவதாக அறிவித்துள்ளது.[17][18][19]. ஒரு டோஸ் கொரானா வைரஸ் தடுப்பு மருந்து ரூபாய் 225-க்கு விற்பனை செய்யப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.[20]

மேற்கோள்கள் தொகு

  1. "Profile". www.vpm-consult.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
  2. "Bilthoven Biologicals acquired by Serum Institute of India". www.thepharmaletter.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
  3. "Serum Institute of India Pvt. Ltd.: Private Company Information". bloomberg.com. பார்க்கப்பட்ட நாள் 2018-09-30.
  4. "SERUM INSTITUTE OF INDIA PRIVATE LIMITED - Company, directors and contact details". zaubacorp.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-30.
  5. "About Us". Serum Institute of India. Archived from the original on 19 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 8 December 2016.
  6. "Poonawalla Investments AND Industries Private Limited Information - Poonawalla Investments AND Industries Private Limited Company Profile, Poonawalla Investments AND Industries Private Limited News on The Economic Times". The Economic Times. Archived from the original on 2019-05-08. பார்க்கப்பட்ட நாள் 2020-07-10.
  7. "Cyrus Poonawalla on Forbes Lists". Forbes. பார்க்கப்பட்ட நாள் 24 March 2015.
  8. "Serum Institute Tubervac (BCG)". Serum Institute of India. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  9. "Serum Institute Poliovac". Serum Institute of India. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  10. "Vaccination Schedule". Vaccination as per the National Immunization schedule by Government of India. பார்க்கப்பட்ட நாள் 2020-06-15.
  11. "India developing indigenous swine flu vaccine". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.
  12. Kulkarni, Prasad S.; Raut, Sidram K.; Dhere, Rajeev M. (27 October 2014). "A post-marketing surveillance study of a human live-virus pandemic influenza A (H1N1) vaccine (Nasovac ®) in India". Human Vaccines & Immunotherapeutics 9 (1): 122–124. doi:10.4161/hv.22317. பப்மெட்:23442586. 
  13. "Fast-acting anti-rabies drug set for India launch - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2016-06-12.
  14. Kulkarni, Prasad S.; Sahai, Ashish; Gunale, Bhagwat; Dhere, Rajeev M (3 March 2017). "Development of a new purified vero cell rabies vaccine (Rabivax-S) at the serum institute of India Pvt Ltd". Expert Review of Vaccines 16 (4): 303–311. doi:10.1080/14760584.2017.1294068. பப்மெட்:28276304. 
  15. "AstraZeneca & Serum Institute of India sign licensing deal for 1 million doses of Oxford vaccine". The Economic Times. https://economictimes.indiatimes.com/industry/healthcare/biotech/pharmaceuticals/astrazeneca-serum-institute-of-india-sign-licensing-deal-for-1-billion-doses-of-oxford-vaccine/articleshow/76202016.cms. 
  16. கொரோனா தடுப்பூசி: இந்தியாவின் சீரம் நிறுவன தடுப்பூசி பரிசோதனை
  17. "Covid-19 vaccine: Serum Institute signs up for 100 million doses of vaccines for India, low and middle-income countries". The Financial Express. 7 August 2020. https://www.financialexpress.com/lifestyle/health/covid-19-vaccine-serum-institute-signs-up-for-100-million-doses-of-vaccines-for-india-low-and-middle-income-countries/2047884/. 
  18. Banerjee, Shoumojit (7 July 2020). "Oxford COVID-19 vaccine at least 6 months away from launch: Serum Institute CEO" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/oxford-covid-19-vaccine-at-least-6-months-away-from-launch-serum-institute-ceo/article32015508.ece. 
  19. "Coronavirus (Covid-19) vaccine latest update: Oxford-AstraZeneca corona vaccine production starts; US says 2 billion doses ‘ready to go’" (in en). The Indian Express. 10 June 2020. https://indianexpress.com/article/coronavirus/corona-covid-19-vaccine-update-june-oxford-astrazeneca-moderna-serum-institute-of-india-6447030/. 
  20. "Serum Institute of India to provide Covid-19 vaccines through COVAX at Rs 225 a dose" (in en). The Indian Express. 7 August 2020. https://indianexpress.com/article/india/sii-to-provide-covid-19-vaccines-through-covax-at-rs-225-a-dose-india-6544158/. 

வெளி இணைப்புகள் தொகு