காசநோய்த் தடுப்பூசி

காசநோய்த் தடுப்பூசி அல்லது பி.சி.ஜி தடுப்பூசி (Bacillus Calmette–Guérin (BCG) vaccine) என்பது கால்நடைக் காசநோய்க் கிருமியிலிருந்து உண்டாக்கப்பட்ட உயிருள்ள மற்றும் வலிமை குறைக்கப்பட்ட பாக்டீரியங்களைக் கொண்ட தடுப்பூசி ஆகும்.[1] வளர்ப்பூடகங்களில் தொடர்ச்சியாய்ப் பல்லாண்டுகள் வளர்த்ததன் மூலம் இக்கிருமி தனது நோய் உண்டாக்கும் தன்மையை இழந்தது. இத் தடுப்பூசி எந்த அளவு காசநோயிலிருந்து காப்பாற்றும் என்பது நாடுகளைப் பொறுத்து வேறுபடுகிறது. ஒட்டு மொத்தமாய்ப் பார்த்தால் இதன் தடுப்பு மதிப்பு 80 விழுக்காடு ஆகும். காச நோய் மற்றும் தொழு நோய் அதிகம் உள்ள நாடுகளில் இத் தடுப்பூசி முதன்மையாகப் பயன்படுகிறது.[1]பிறந்த ஆரோக்கியமான குழந்தைக்கு ஒரு முறை மட்டும் வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[1] புரூலி புண் மற்றும் சிறு நீர்ப்பை புற்று நோய் ஆகியவற்றையும் கட்டுப்படுத்த இத் தடுப்பூசி பயன்படுகிறது.[2]

காசநோய்த் தடுப்பூசியில் பயன்படும் பாக்டீரியத்தை நுண்ணோக்கி வழியே காட்டும் படம்

இம் மருந்திற்கு கடுமையான பக்க விளைவுகள் ஏதுமி்ல்லை. ஊசி குத்துமிடத்தில் சிவப்பு நிறத்தில் வீக்கமோ அல்லது வலியோ இருக்கும். ஊசி குத்தியிடத்தில் சிறிய புண் ஏற்பட்டு பின் தழும்பாக மாறும். கர்ப்ப காலத்தில் இந் மருந்தைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது அல்ல. மாட்டில் பொதுவாகக் காணப்படும் மைக்கோபாக்டீரியம் போவிசு (Mycobacterium bovis) என்ற பாக்டீரியாவிலிருந்து இம் மருந்து தயாரிக்கப்படுகிறது.


வரலாறு

தொகு

சின்னம்மைக்கு கால்நடை சின்னம்மை வைரசைக் கொண்ட தடுப்பூசி பெருமளவு வெற்றி அடைந்ததை அடுத்து காசநோய்க்கும் அதே மாதிரியான தடுப்பூசி உருவாக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டனர். பாஸ்டர் நிறுவனத்தில் பணிபுரிந்த ஆல்பர்ட் கால்மெட்டி மற்றும் அவரது உதவியாளர் கேமில்லை குரின் இருவரும் இதில் வெற்றி கண்டனர். எனவே இவர்களின் பெயரிலேயே இத் தடுப்பூசி பேசில்லை கா‌ல்மெட்டி குரின் அல்லது பிசிஜி என்று அறியப்படுகிறது. இத்தடுப்பூசியை உருவாக்க அவர்கள் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேல் உழைத்தனர். கிளிசரின்-பித்தம்-உருளைக்கிழங்கு வளர்ப்பூடகத்தில் வளர்த்த போது இக்கிருமி மெல்ல மெல்ல தனது நோய் உண்டாக்கும் தன்மையை இழப்பதைக் கண்டனர். ஆனால் நோய்எதிர்ப்புண்டாக்கும் தன்மையைத் தக்க வைத்திருந்தது. இவ்வாறாக 1921 ஆம் ஆண்டில் முதன் முறையாக மனிதரில் காசநோய்த் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது.

காச நோய் தடுப்பூசியின் செயல்திறன்

தொகு

BCG தடுப்பூசி என்பது காச நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தாகும். குழந்தை பிறந்தவுடன், தோலின் வழியாக இம்மருந்து வழங்கப்படுகிறது.[3]

உலகின் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியான விளைவுகளை இம் மருந்து தருவதில்லை. புவியமைப்பைப் பொறுத்து, அதன் செயல் திறன் மாறுபடுகிறது. இங்கிலாந்து போன்ற நாடுகளில் 60 to 80% பாதுகாப்பை வழங்குகிறது.ஆனால் பூமத்திய ரேகையை நோக்கிச் செல்லச் செல்ல அதன் செயல் திறன் குறைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[4][5]

1994 ல் நடத்தப்பட்ட ஆய்வில் தடுப்பூசி, காச நோய் அபாயத்தை 50% வரை குறைத்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.[4] மக்களின் மரபணுவிலுள்ள வேற்றுமைகள், சுற்று சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மற்ற பாக்டீரியா தொற்றுகள் ஆகியவற்றால் தடுப்பூசியின் செயல் திறன் மாறுபடுவதாகக் ஆய்வுகள் கூறுகின்றன..[6][7]

2014 ல் நடத்தப்பட்ட முறையான ஆய்வில் தடுப்பூசி, நோய் தொற்றை 19–27% குறைப்பதாகவும், காச நோய் பரவும் வேகத்தை 71% வரை குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.[8] இத் தடுப்பூசி எவ்வளவு காலம் செய்யும் என்பது பற்றிய சரியாகத் தெரியவில்லை. ஆனாலும் சில ஆய்வுகள் 15 ஆண்டுகள் வரை 59% பேரிடம் வேலை செய்வதாகக் கூறுகிறது..[9]

போரின் போது ஏற்படும் காச நோயைத் தடுக்க மிகவும் பயன்படுகிறது. இதனால் நுரையீரல் காச நோய் தொற்றுள்ள நாடுகளில் கூட இத் தடுப்பூசி அதிகம் பயன்படுத்தப்படுகிறது.[10]

காச நோய் தடுப்பூசியின் செயல்திறன் மாறுபடக் காரணங்கள்

தொகு

காச நோய் தடுப்பூசியின் செயல்திறன் மாறுபட பல காரணங்கள் கூறப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பின் ஆய்வுகள் கூட காச நோய் பாதிப்பு மிகக் குறைந்த அமெரிக்கா மற்றும் காச நோய் பாதிப்பு மிக அதிகமுள்ள இந்தியா போன்ற நாடுகளில் தடுப்பூசியின் செயல்திறன் பற்றி தெளிவாக விளக்கவில்லை..[11]

  1. காச நோய் தடுப்பூசியிலுள்ள திரிபுகள்[12]
  2. மக்களிடையே காணப்படும் மரபணு மாற்றங்கள்[13]
  3. காச நோயை ஏற்படுத்தாத மைக்கோபாக்டீரியத்தின் குறுக்கீடு.[14]
  4. பிற ஒட்டுண்ணிகளின் குறுக்கீடு. சில ஒட்டுண்ணிகள் நமது நோய் எதிர்ப்பாற்றலை பாதிக்கிறது.[15]

இந்தியாவில் பயன்பாடு

தொகு

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளே ஐரோப்பாவிற்கு வெளியே காசநோய்த் தடுப்பூசியைப் பயன்படுத்திய முதல் நாடுகள் ஆகும். தற்போது இந்தியாவில் பிறந்ததும் அல்லது பிறந்து நான்கு நாட்களுக்குள் பி.சி.ஜி. தடுப்பூசி குழந்தைகளுக்குப் போடப்படுகிறது.

பயனுறுதிறன்

தொகு

உலகெங்கும் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் காசநோய்க்கு எதிரான இத்தடுப்பூசியின் பயனுறுதிறன் வேறுபடுகிறது. தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டில் 1979 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் காசநோய்க்கெதிரான இதன் பயனுறுதிறன் சுழியம் எனத் தெரியவந்தது. இவ்வாறான மாறுபடும் பயனுறுதிறனுக்கு ஜீன்மாறுபாடு, காசநோய் அல்லாத பிற மைக்கோபாக்டீரியத் தொற்று, இதர ஒட்டுண்ணித் தொற்று ஆகியவை காரணமாய் இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

போடப்படும் முறை

தொகு

இடது கையின் டெல்டாய்டு தசைக்கு மேல் உள்ள தோலில் இந்தப் பயன்பாட்டிற்கென்றே உள்ள தனி ஊசியைக் கொண்டு பி.சி.ஜி தடுப்பூசி போடப்படுகிறது. இத்தடுப்பூசியை மறுகட்டாக்கம் செய்ய உவர்நீர் (saline) பயன்படுகிறது. தோலுள் போடுவதற்குப் பதிலாக தோலுக்கடியில் தவறுதலாக இத்தடுப்பூசியை தோலுக்குக் கீழ் செலுத்தினால் அந்த இடத்தில் சீழ்க்கட்டி உருவாகி விடும். தடுப்பூசி போட்ட இடத்தில் நாளடைவில் தழும்பொன்று உருவாகும். ஆறு மாதம் வரை தழும்பு உருவாகாவிடில் மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

காசநோய் தவிர இதர பயன்பாடுகள்

தொகு
  • தொழுநோய்க்கெதராக சிறிய அளவில் இத்தடுப்பூசி தடுக்க வல்லது.
  • சிறுநீர்ப்பை புற்று நோயில் இது சிறுநீர்ப்பைக்குள் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. இது அந்த இடத்தில் நோய் எதிர்ப்பு வினையைத் தூண்டி விடுகிறது.


மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "BCG vaccines: WHO position paper – February 2018.". Releve epidemiologique hebdomadaire 93 (8): 73–96. 23 February 2018. பப்மெட்:29474026. http://apps.who.int/iris/bitstream/10665/260306/1/WER9308.pdf?ua=1. 
  2. Fuge, O; Vasdev, N; Allchorne, P; Green, JS (2015). "Immunotherapy for bladder cancer.". Research and reports in urology 7: 65–79. doi:10.2147/RRU.S63447. பப்மெட்:26000263. 
  3. "BCG Vaccine | TB Symptoms | Tuberculin Skin Test | PPD | TB Signs". TB Symptoms. 2013-01-18. Archived from the original on 2013-10-29. பார்க்கப்பட்ட நாள் 2014-02-02. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. 4.0 4.1 Colditz, Graham A.; Brewer, TF; Berkey, CS; Wilson, ME; Burdick, E; Fineberg, HV; Mosteller, F (1994). "Efficacy of BCG Vaccine in the Prevention of Tuberculosis". JAMA 271 (9): 698–702. doi:10.1001/jama.1994.03510330076038. பப்மெட்:8309034. 
  5. Fine PEM (1995). "Variation in protection by BCG: implications of and for heterologous immunity". Lancet 346 (8986): 1339–45. doi:10.1016/S0140-6736(95)92348-9. பப்மெட்:7475776. 
  6. Venkataswamy, Manjunatha M.; Goldberg, Michael F.; Baena, Andres; Chan, John; Jacobs, William R., Jr.; Porcelli, Steven A. (1 February 2012). "In vitro culture medium influences the vaccine efficacy of Mycobacterium bovis BCG". Vaccine 30 (6): 1038–1049. doi:10.1016/j.vaccine.2011.12.044. பப்மெட்:22189700. 
  7. FINE, P (1 November 1995). "Variation in protection by BCG: implications of and for heterologous immunity". The Lancet 346 (8986): 1339–1345. doi:10.1016/S0140-6736(95)92348-9. பப்மெட்:7475776. 
  8. "Effect of BCG vaccination against Mycobacterium tuberculosis infection in children: systematic review and meta-analysis". BMJ 349: g4643. 2014. doi:10.1136/bmj.g4643. பப்மெட்:25097193. 
  9. "Long-term efficacy of BCG vaccine in American Indians and Alaska Natives: A 60-year follow-up study". JAMA 291 (17): 2086–91. 2004. doi:10.1001/jama.291.17.2086. பப்மெட்:15126436. 
  10. "Protective Effect of BCG against Tuberculous Meningitis and Miliary Tuberculosis: A Meta-Analysis". Int J Epidemiol 22 (6): 1154–8. 1993. doi:10.1093/ije/22.6.1154. பப்மெட்:8144299. https://archive.org/details/sim_international-journal-of-epidemiology_1993-12_22_6/page/1154. 
  11. Fine PE, Carneiro IA, Milstein JB, Clements CJ (1999). "Chapter 8: Reasons for variable efficacy". Issues relating to the use of BCG in immunization programmes (PDF). Geneva, Switzerland: World Health Organization. Archived from the original (PDF) on 2011-02-20.
  12. "Genome plasticity of BCG and impact on vaccine efficacy". Proceedings of the National Academy of Sciences of the United States of America 104 (13): 5596–601. 2007. doi:10.1073/pnas.0700869104. பப்மெட்:17372194. 
  13. "Protective effect of BCG vaccination in infant Asians: a case-control study". Archives of Disease in Childhood 63 (3): 277–281. 1988. doi:10.1136/adc.63.3.277. பப்மெட்:3258499. பப்மெட் சென்ட்ரல்:1778792 இம் மூலத்தில் இருந்து 2008-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081004121130/http://adc.bmj.com/cgi/content/abstract/archdischild%3B63/3/277. 
  14. "BCG-induced increase in interferon-gamma response to mycobacterial antigens and efficacy of BCG vaccination in Malai and the UK: two randomized controlled studies". Lancet 359 (9315): 1393–401. 2002. doi:10.1016/S0140-6736(02)08353-8. பப்மெட்:11978337. 
  15. Rook GAW; Dheda K; Alimuddin Zumla (2005). "Do successful tuberculosis vaccines need to be immunoregulatory rather than merely Th1-boosting?". Vaccine 23 (17–18): 2115–20. doi:10.1016/j.vaccine.2005.01.069. பப்மெட்:15755581 இம் மூலத்தில் இருந்து 2017-09-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170922153759/http://discovery.ucl.ac.uk/295/1/Rook_VACCINE_paper.pdf. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=காசநோய்த்_தடுப்பூசி&oldid=3586556" இலிருந்து மீள்விக்கப்பட்டது