சுரேந்திரநாத் பானர்ஜி

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

சுரேந்திரநாத் பானர்ஜி (Surendranath Banerjee) இந்திய அரசியல் இயக்கத்தை உருவாக்கியவரும், சிறந்த பேச்சாளரும், கல்வியாளரும், பத்திரிக்கையாளரும், இந்திய தேசிய சங்கத்தை நிறுவியரும் ஆவார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தேசியத் தலைவராக பணியாற்றிவர்.

சர் சுரேந்திரநாத் பானர்ஜி
சுரேந்திரநாத் பானர்ஜியின் உருவச்சிலை, கொல்கத்தா
பிறப்பு(1848-11-10)10 நவம்பர் 1848
கல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு6 ஆகத்து 1925(1925-08-06) (அகவை 76)
பரக்பூர், மேற்கு வங்காளம், இந்தியா
தேசியம்இந்தியன்
படித்த கல்வி நிறுவனங்கள்கொல்கத்தா பல்கலைக்கழகம்
பணிகல்வியாளர், அரசியல்வாதி
அறியப்படுவதுநிறுவனர், இந்திய தேசியச் சங்கம்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

இளமை

தொகு

சுரேந்திரநாத் பானர்ஜி, மருத்துவர் துர்கா சரண் பானர்ஜியின்[1] மகனாக கல்கத்தாவில் 1848ல் பிறந்தார். கல்கத்தா பேரன்ட்டல் அகாடமிக் இன்ஸ்டிட்டியூட் மற்றும் இந்து கல்லூரியில் பயின்றார். பின்னர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தார்.

இந்தியக் குடிமைப் பணி தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இவரது வயதைக் காரணம் காட்டி, அவரது தேர்ச்சியை ரத்து செய்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றார். சில்ஹட் நகரில் துணை மாஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார்.[2] பின்னர் அப்பதவியிலிருந்தும் ஆங்கிலேய அரசால் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து இங்கிலாந்துக்குச் சென்று பிரிவி கௌன்சிலில் மேல்முறையீடு செய்தும் எப்பலனும் கிடைக்கவில்லை.

இந்திய விடுதலை இயக்கத்தில்

தொகு

இந்தியர்களை பாரபட்சமாக நடத்தும் பிரித்தானிய இந்திய அரசை எதிர்க்க தீர்மானித்தார். மக்கள் அரசியல் உரிமைகளைப் பெறவும், அரசு நிர்வாகத்தில் பங்கு பெறவும் ஓர் அமைப்பு அவசியம் என்று கருதினார்.[3] ஆனந்த மோகன் போஸ் என்பவருடன் சேர்ந்து, சுரேந்திரநாத் பானர்ஜி, 26 சூலை 1876ல் இந்திய தேசிய சங்கம் எனும் அமைப்பை நிறுவினார்.[4]

கல்கத்தாவில் மெட்ரோபாலிட்டன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1882-ல் ரிப்பன் கல்லூரியை (தற்போதைய சுரேந்திரநாத் கல்லூரி) தொடங்கி, அதில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இப்பணியில் 37 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபட்டார். தீவிர அரசியலில் ஈடுபட்டபோதும், கற்பிக்கும் பணியை நிறுத்தவில்லை.

இந்தியக் குடிமைப் பணித் தேர்வு எழுதும் இந்திய மாணவர்களின் வயது வரம்பு பிரச்சினைக்கு இதன்மூலம் தீர்வு கண்டார். ஆங்கில அரசின் இன வேறுபாட்டை எதிர்த்து நாடு முழுவதும் போர்க் குரல் எழுப்பினார்.

1879ல் பெங்காலி என்ற ஆங்கில நாளிதழை 1878-ல் தொடங்கினார். இதில் ஆங்கில அரசுக்கு எதிராக எழுதியதால் கைது செய்யப்பட்டார்.[5] 1885ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் முக்கியப் பங்கு வகித்தார். தனது அமைப்பை அதனுடன் இணைத்தார்.

வளரும் தலைவர்களான கோபால கிருஷ்ண கோகலே, சரோஜினி நாயுடு போன்றவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு அமைப்பின் தலைவராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

போராட்டம், பொதுக்கூட்டம், மனு கொடுப்பது, சட்டரீதியிலான நடவடிக்கை என மிதவாதப் போக்கையே பின்பற்றினார். வங்கப் பிரிவினைக்கு இவர் தெரிவித்த எதிர்ப்பு, அரசியல் வாழ்க்கையில் முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. சுதேசி இயக்கத்தின் முக்கியத் தூணாக செயல்பட்டார்.

ஆங்கிலத்தில் உரையாற்றுவதில் வல்லவர். சரளமான, ஆழமான சொல்லாற்றல் இவரை சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக வைத்தது. ஆங்கிலேயரும் மதித்துப் போற்றும் தலைவராக விளங்கினார். வங்காள அரசில் அமைச்சராகப் பணிபுரிந்தபோது, கல்கத்தா மாநகராட்சி நடவடிக்கைகளில் ஜனநாயக நெறிகளை பிரதிபலிக்கச் செய்தார். சில காங்கிரஸ் தலைவர்களின் தீவிரவாதப் போக்கை இவர் ஏற்கவில்லை. காந்திஜியின் ஒத்துழையாமை இயக்க முறையைக்கூட ஏற்க மறுத்தார். ஒரு கட்டத்தில் தீவிர அரசியலில் இருந்து விலகினார். சுரேந்திரநாத் பானர்ஜி 77-வது வயதில் பரக்பூரில் 6 ஆகஸ்டு 1925ல் மறைந்தார்.

நினைவஞ்சலி

தொகு

சுரேந்திரநாத் பானர்ஜியின் நினைவாக பல கல்வி நிறுவனங்களுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. அவைகள்:

  • பரக்பூர் இராஷ்டிரகுரு சுரேந்திரநாத் கல்லூரி
  • இராய்கஞ்ச் சுரேந்திரநாத் மகாவித்தியாலயம்
  • சுரேந்திரநாத் கல்லூரி, கல்கத்தா
  • சுரேந்திரநாத் பெண்கள் கல்லூரி (முன்னாள் ரிப்பன் கல்லூரி), கல்கத்தா
  • சுரேந்திரநாத் நூற்றாண்டு விழா பள்ளி, ராஞ்சி

மேற்கோள்கள்

தொகு
  1. Mukherjee, Soumyen (1996). "Raja Rammohun Roy and the Status of Women in Bengal in the Nineteenth Century". Sydney Studies in Society and Culture 13: 44. https://openjournals.library.sydney.edu.au/index.php/SSSC/article/view/7496. 
  2. Jayapalan, N. (2000-01-01). Indian Political Thinkers: Modern Indian Political Thought (in ஆங்கிலம்). Atlantic Publishers & Dist. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788171569298.
  3. Khan, Ataur Rahman (2001). "The Language Movement and Bengali Nationalism". In Ahmed, Rafiuddin (ed.). Religion, Identity & Politics: Essays on Bangladesh. Colorado Springs, CO: International Academic Publishers. pp. 168–169. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58868-080-0. In the end, Banerjea lost his job by committing a serious judicial mistake, dismissing a case recording the complainant and his witnesses absent while whey were actually present in his court. Banerjea went to England to lodge an appeal ... He concluded that his appeal failed because he was an Indian. This was the basic reason for his becoming a nationalist.
  4. Mittal, Satish Chandra (1986-01-01). Haryana, a Historical Perspective (in ஆங்கிலம்). Atlantic Publishers & Distri.
  5. "Sir Surendranath Banerjea | Indian politician" (in en). Encyclopedia Britannica. https://www.britannica.com/biography/Surendranath-Banerjea. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுரேந்திரநாத்_பானர்ஜி&oldid=3580913" இலிருந்து மீள்விக்கப்பட்டது