பசுமைப் புரட்சி
1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை நுட்பங்கள் வேளாண் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும், அதனால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் பசுமைப் புரட்சி (Green Revolution) எனப்படுகிறது. இந்தியா போன்ற பல மூன்றாம் நிலை நாடுகள் பட்டினிச் சாவை எதிர்நோக்கிய அன்றைய கால கட்டத்தில் பசுமைப் புரட்சி முன்னிறுத்திய பயிர்ச்செய்கை முறைகள் பலன் தந்தது. பசுமைப் புரட்சி தொடக்கி வைத்த வேளாண் ஆராய்ச்சி கட்டமைப்புகள் தொடர்ந்தும் வேளாண் தொழில்நுட்பத்தில் பங்கெடுத்து வருகின்றன. தொலைநோக்கில் இந்தப் பயிர்ச்செய்கையின் பல்வேறு குறைபாடுகள் அறியப்பட்டு, தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டத்துக்கு செல்வது தேவையானாலும், பசுமைப் புரட்சி உலக சமூக தொழில்நுட்ப, பொருளாதார, அரசியல் தளங்களில் நிகழ்ந்த முக்கிய புரட்சிகளுள் ஒன்று என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கூற்று[சான்று தேவை]. பசுமைப் புரட்சியானது "உயர்-மகசூல் வகைகளை" உருவாக்கியதன் மூலம் விளைச்சலை அதிகரிக்க பழமையான கலப்பின முறையைப் பயன்படுத்துவதை பிரபலப்படுத்தியது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவில் மக்காச்சோளத்தின் விளைச்சல் 1900 ஆம் ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஹெக்டேருக்கு 2.5 டன்களாக இருந்தது. 2001 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 9.4 டன்களாக அதிகரித்தது. அதேபோன்று, உலகளாவிய சராசரி கோதுமை மகசூல் 1900 ஆம் ஆண்டு ஹெக்டேருக்கு 1 டன்னுக்கும் குறைவாக இருந்தது. 1990 ஆம் ஆண்டு ஹெக்டேருக்கு 2.5 டன்னுக்கும் அதிகமாக இருந்தது.
தென் அமெரிக்க சராசரி கோதுமை மகசூல் ஹெக்டேருக்கு 2 டன்னுக்கு குறைவாகவும், ஆப்பிரிக்காவில் ஹெக்டேருக்கு 1 டன்னுக்கு குறைவாகவும், எகிப்து மற்றும் அரேபியாவில் நீர்ப்பாசனத்தைக் கொண்டு ஹெக்டேருக்கு 3.5 முதல் 4 வரையிலுமாக இருந்தது. இதற்கு முரணாக, பிரான்ஸ் போன்ற நாடுகளின் சராசரி கோதுமை மகசூல் ஹெக்டேருக்கு 8 டன்னுக்கும் அதிகமாக இருந்தது. மகசூலில் ஏற்படும் மாற்றங்கள் காலநிலை, மரபணுக்கள், மற்றும் தீவிர விவசாய உத்திகள் (உரங்கள், ரசாயன பூச்சிக் கட்டுப்பாடு,தேக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வளர்ச்சிக் கட்டுப்பாடு) ஆகியவற்றால் ஏற்படுகின்றன.[1][2]
இந்த புரட்சி அமெரிக்காவின் Rockfeller Foudation, Ford Foundation ஆகியவற்றின் உதவியுடன் தொடங்கியது. விரைவில் அமெரிக்க அரசு, இந்திய அரசு, மெக்சிக்கோ அரசு போன்ற பல்வேறு நாடுகள் பசுமைப் புரட்சியை தமது நாடுகளில் நடைமுறைப்படுத்தின. Norman Borlaug பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படுகிறார். எம். எஸ். சுவாமிநாதன் இந்தியாவில் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்துவதில் முன்னின்றவர்களில் ஒருவர்.
உற்பத்திப் பெருக்கம்
தொகுகடந்த நூற்றாண்டு விவசாயமானது விரிவான உற்பத்தித்திறன், கலப்பு உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றாக உழைப்பை பதிலீடு செய்தல், நீர் மாசுபாடு மற்றும் பண்ணை மானியங்கள் என்பதாகவே குறிப்பிடப்பட்டது. 1800 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், விவசாய உத்திகள், நடைமுறைகள், விதை இருப்புகள் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட தாவரங்கள் தேர்வுசெய்யப்பட்டு புதிய பெயர்களால் வழங்கப்பட்டன, இதனுடைய அலங்காரமான அல்லது பயன்மிக்க தன்மையின் காரணமாக மத்திய காலகட்டங்களில் காணப்பட்டதைவிட ஒரு அலகு நிலத்திற்கு பல மடங்கு அதிகமாக விளைச்சலைத் தரக்கூடிய வகையில் மேம்படுத்தப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டிலும், குறிப்பாக டிராக்டர்களைக் கொண்டு வேகமாகவும் பேரளவிலும் முன்பைவிட பண்ணை வேலைகள் துரிதமடைந்தன. இந்த முன்னேற்றங்கள் அமெரிக்கா, அர்ஜெண்டினா, இஸ்ரேல் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் குறிப்பிட்ட நவீன பண்ணைகளின் திறன்கள் மேம்படுவதற்கு வழிவகுத்துள்ளன. ஒரு சில நாடுகளின் உற்பத்தி செய்யும் அளவு, குறிப்பிட்ட ஒரு அலகு நிலத்திற்கான அளவை விட உயர்தர உற்பத்தி அளவை எட்டியுள்ளன. அம்மோனியம் நைட்ரேட் கலவைக்கான ஹெபர்-போஷ் முறை பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியதோடு, பயிர் விளைச்சலில் இருந்த முந்தைய தடைகளை தாண்டி வந்துள்ளது.
உணவுதானிய அரிசி, சோளம் மற்றும் கோதுமை ஆகியவை 60 விழுக்காடு மனித உணவுத் தேவைகளைப் நிறைவு செய்தன.[3] 1700 ஆம் ஆண்டுகளுக்கும் 1980 ஆம் ஆண்டுகளுக்கும் இடையே,"உலகளவில் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தின் மொத்தப் பரப்பளவு 466 சதவிகிதம் உயர்ந்ததுடன்" குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ப்பு, உயர் மகசூல் வகைகள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், நீர்ப்பாசனம் மற்றும் இயந்திரம் ஆகியவற்றின் காரணமாகவே மகசூல் சட்டென்று அதிகரித்தது.[3] உதாரணத்திற்கு, நீர்ப்பாசனம் 1940 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை கிழக்கு கொலராடோவில் சோள உற்பத்தியை 400லிருந்து 500 சதவிகிதமாக அதிகரிக்கச் செய்தது.[3]
பூச்சி மேலாண்மை
தொகுதீவிர விவசாயத்தில் பயன்படுத்தப்பட்ட ஒற்றைக்கலாச்சார முறைகள் பூச்சிக்கொல்லிகளால் மட்டுமே கட்டுப்படுத்தப்படக்கூடிய பூச்சிகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளன. "பல ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்டும், குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் கொண்டிருந்த" ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுவதை குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கவில்லை, ஏனென்றால் கொள்கைகள் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தின என்பதோடு IPM வலுவான அறிவு கொண்டதாக இருந்தது.[3] இருப்பினும் "பசுமைப் புரட்சி" ஆசியாவில் குறிப்பிடத்தக்க அளவில் அரிசி விளைச்சலை அதிகரித்துள்ளது.
விதைகள்
தொகுமகசூல் அதிகரிப்பு கடந்த 15–20 ஆண்டுகளில் ஏற்படவே இல்லை.[3] அரிசிக்கான மரபணு மகசூல் திறன் 1966 ஆம் ஆண்டிலிருந்து அதிகரிக்கவில்லை, மக்காச்சோளத்திற்கான மகசூலை கடந்த 35 ஆண்டுகளில் சற்றே அதிகரிக்கச் செய்துள்ளது.[3] மூலிகை தடுப்புத் திறனுள்ள களைகளை உருவாவதற்கு ஒன்று அல்லது இரண்டு பத்தாண்டுகள் ஆனது, பூச்சிக்கொல்லிகளை எதிர்க்கும் பூச்சிகள் உருவாவதற்கு கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆனது.[3] பயிர் சுழற்சி எதிர்ப்புத்திறன்களை தடுக்க உதவியது.[3] பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து விவசாய கண்டுபிடிப்புகள் துரிதப்படுத்தப்பட்டன. உலகின் பல்வேறு பகுதிகளிலும் புதிய உயிரினங்களும் புதிய விவசாய முறைகளும் உருவாவதற்கு வழிவகுத்துள்ளன. [4]
உற்பத்தித் திறன்
தொகு2005 ஆம் ஆண்டு சீனாவின் விவசாய உற்பத்தி உலகிலேயே பெரியதாக இருந்தது. உலக வங்கியின் கூற்றுப்படி ஐரோப்பிய யூனியன், இந்தியா மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து கிட்டத்தட்ட உலகின் ஆறில் ஒரு பகுதி பங்கை சீனா பெற்றிருந்தது. விவசாயத்தின் மொத்த காரணி உற்பத்தித்திறனை பொருளாதாரவியலாளர்கள் அளவிட்டுள்ளனர், இந்த அளவீட்டின்படி அமெரிக்க விவசாயம் 1948 ஆம் ஆண்டு இருந்ததைவிட அதிக உற்பத்தித் திறனைக் கொண்டு ஏறத்தாழ 2.6 மடங்கு அதிகரித்திருந்தது.[5]
அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட ஆறு நாடுகள் 90 சதவிகித தானிய ஏற்றுமதியை வழங்கின.[6]
இந்தியாவில் பசுமைப் புரட்சி
தொகுஇந்தியா விடுதலை அடைந்தபோது அதன் உணவு உற்பத்தி மிகக் கவலை தருவதாக இருந்தது.விவசாயிகள் கடன் சுமையில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் கைவசம் மிகக் குறைந்த அளவு நிலமே இருந்தது.அதிலும் அவர்களின் துண்டு நிலங்களும் ஒரே இடத்தில் இருக்காமல் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.புதிய விவசாயக் கருவிகளைப் பற்றி அறிந்திருந்தவர்களிடம் அவற்றை வாங்கிப் பயன்படுத்த போதிய பணம் இல்லை.வானம் பார்த்த விவசாயம் .வானம் பொய்த்தபோது உணவு உற்பத்தியும் குறைந்தது.நிலத்தின் உற்பத்தித் திறனும் விவசாயத் தொழிலாளர்களின் உற்பத்தித் திறனும் மிகவும் குறைவாக இருந்தன.மக்கள் தொகையில் எழுபது விழுக்காட்டினர் விவசாயத்தில் ஈடுபட்டிருந்த போதும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.
தீவிளைவுகள்
தொகுபசுமை புரட்சி பூச்சிக்கொல்லி மற்றும் கலப்பு நைட்ரஜன் போன்றவற்றை வளர்ந்த நாடுகளிடமிறந்து வளரும் நாடுகளுக்கு அளிக்க வழி செய்தது. இதன் விளைவாக வளர்ந்த நாடுகளின் நிறுவனங்கள் வளர்ந்ததே தவிர வளரும் நாடான நம் நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. ரசாயன உரங்களை பயன்படுத்தியதன் விளைவாக நீரிழிவு, புற்றுநோய், மலட்டுத்தன்மை, பிறவி ஊனம், கண் பார்வை குறைவு போன்ற பல நோய்கள் இன்று எங்கும் பரவியதற்கு காரணம் நம் மண்ணில் கலந்துள்ள ரசாயன மற்றும் பூச்சிக்கொல்லி இவற்றின் எச்சங்களால் தான்.[சான்று தேவை] இப்படி நச்சு தாக்கிய மண்ணில் விளைந்த காய் கறிகளை உண்ணும் பொழுது நம் உடம்பிற்குள்ளும் நச்சு நுழைந்து விடுகிறது.[7]
“சர்வதேச ஆய்வறிக்கையின்படி மகசூலும் மண் வளமும் நேர்விகிதத்தில் உள்ளது. மண் வளத்தை பொறுத்துதான் மகசூல் உள்ளது. இந்திய மண் வளத்தை ஆராய்ந்த சர்வேதேச ஆய்வுக்குழு மண்ணில் இரும்பு, மாலிப்பிடினத்தை தவிர பிற சத்துக்களான பாஸ்பரஸ், மக்னீஷியம், போரான், துத்தநாகம் போன்றவை குறைவாக உள்ளதாக கூறிக்கின்றது.”வளமான மண் இன்று வளம் குன்றி கலங்கமானதற்கு விவசாயத்தில் ரசாயன பூச்சிக்கொல்லிகளையும் உரங்களையும் பயன்படுத்தியதே காரணம்.[7]
இரண்டாம் பசுமைப்புரட்சி
தொகுஇரண்டாம் பசுமை புரட்சி அதிகம் இயற்கை வேளாண்மை நோக்கியே கவனப்படுத்தப்படுகிறது
மேற்கோள்கள்
தொகுசான்றுகள்
தொகு- ↑ Cassman, K. (1998-12-05). "Ecological intensification of cereal production systems: The Challenge of increasing crop yield potential and precision agriculture". Proceedings of a National Academy of Sciences Colloquium, Irvine, California (University of Nebraska). http://www.lsc.psu.edu/nas/Speakers/Cassman%20manuscript.html. பார்த்த நாள்: 2007-10-11.
- ↑ நிலைமாற்றக் குறிப்பு: 1 புஷல் கோதுமை = 60 பவுண்டுகள் (lb) ≈ 27.215 கிலோ. 1 புஷல் மக்காச்சோளம் = 56 பவுண்டுகள் ≈ 25.401 கிலோ
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Tilman D, Cassman KG, Matson PA, Naylor R, Polasky S (August 2002). "Agricultural sustainability and intensive production practices". Nature 418 (6898): 671–7. doi:10.1038/nature01014. பப்மெட்:12167873.
- ↑ USDA NAL சிறப்புத் தொகுப்புகள். தென் சீனக் கண்டுபிடிப்புகள்:டைப்ஸ்கிரிப்ட், ஜூலை 25, 1916-செப்டம்பர் 21, 1918[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ USDA ERS. அமெரிக்காவில் விவசாய உற்பத்தித் திறன் பரணிடப்பட்டது 2013-02-01 at the வந்தவழி இயந்திரம்
- ↑ உணவு ஏமாற்று பொருளாதாரம்,சமூக அறிவியல் நிறுவனம்.
- ↑ 7.0 7.1 http://sgmanarkeni.wordpress.com/2011/02/20/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-2/
தகவல் வாயில்கள்
தொகு- Dr Arvind Upadhayaya. "Black spots in Green revolution". http://www.watershedpedia.com/green-revolution-an-evolution-of-soil-health-destruction/.
- Conway, Gordon (1998). The doubly green revolution: food for all in the twenty-first century. Ithaca, NY: Comstock Pub. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8014-8610-4.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Dowie, Mark (2001). American foundations: an investigative history. Cambridge, MA: MIT. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-04189-8.
- Farrell, John Joseph; Altieri, Miguel A. (1995). Agroecology: the science of sustainable agriculture (2nd ed.). Boulder, CO: Westview. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8133-1718-2.
- Frison, Emile (2008). "Green Revolution in Africa will depend on biodiversity". Development and Cooperation 49 (5): 190–93 இம் மூலத்தில் இருந்து 8 December 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081208121135/http://www.inwent.org/ez/articles/070224/index.en.shtml.
- Jain, H.K. (2010). The Green Revolution: History, Impact and Future (1st ed.). Houston, TX: Studium Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-933699-63-9.
- Oasa, Edmund K (1987). "The Political Economy of International Agricultural Research in Glass". In Glaeser, Bernhard (ed.). The Green Revolution revisited: critique and alternatives. Allen & Unwin. pp. 13–55. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-04-630014-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Ross, Eric (1998). The Malthus Factor: Poverty, Politics and Population in Capitalist Development. London: Zed Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85649-564-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Vernon Ruttan (1977). "The Green Revolution: Seven Generalizations". International Development Review 19: 16–23.
- Sen, Amartya Kumar; Drèze, Jean (1989). Hunger and public action. Oxford: Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-828365-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Shiva, Vandana (1989). The violence of the green revolution: Ecological degradation and political conflict in Punjab. Dehra Dun: Research Foundation for Science and Ecology. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-85019-19-2.
- Smil, Vaclav (2004). Enriching the Earth: Fritz Haber, Carl Bosch, and the Transformation of World Food Production. MIT Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-262-69313-4.
- Spitz, Pierre (1987). "The Green Revolution Re-Examined in India in Glass". In Glaeser, Bernhard (ed.). The Green Revolution revisited: critique and alternatives. Allen & Unwin. pp. 57–75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-04-630014-2.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Wright, Angus (1984). "Innocence Abroad: American Agricultural Research in Mexico". In Bruce Colman; Jackson, Wes; Berry, Wendell (eds.). Meeting the expectations of the land: essays in sustainable agriculture and stewardship. San Francisco: North Point Press. pp. 124–38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86547-171-9.
- Wright, Angus Lindsay (2005). The death of Ramón González: the modern agricultural dilemma. Austin: University of Texas Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-292-71268-3.
மேலும் படிக்க
தொகு- Cotter, Joseph (2003). Troubled Harvest: Agronomy and Revolution in Mexico, 1880–2002. Westport, CT: Prager வார்ப்புரு:ISBN?
- Deb, Debal, "Restoring Rice Biodiversity", Scientific American, vol. 321, no. 4 (October 2019), pp. 54–61. "இந்தியா originally possessed some 110,000 landraces of rice with diverse and valuable properties. These include enrichment in vital nutrients and the ability to withstand flood, drought, salinity or pest infestations. The Green Revolution covered fields with a few high-yielding varieties, so that roughly 90 percent of the landraces vanished from farmers' collections. High-yielding varieties require expensive inputs. They perform abysmally on marginal farms or in adverse environmental conditions, forcing poor farmers into debt." (p. 54.)
- Harwood, Andrew (14 June 2013). "Development policy and history: lessons from the Green Revolution".
- Jain, H.K. (2010). Green revolution: history, impact and future. Houston: Studium Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1441674487. A brief history, for general readers.
வெளி இணைப்புகள்
தொகு- Norman Borlaug talk transcript, 1996
- The Green Revolution in the Punjab, by Vandana Shiva
- "Accelerating the Green Revolution in Africa". Rockefeller Foundation. Archived from the original on 2 அக்டோபர் 2010.
- Moseley, W. G. (14 May 2008). "In search of a better revolution". Minneapolis StarTribune இம் மூலத்தில் இருந்து 16 December 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181216120637/https://www.commondreams.org/views/2008/05/14/search-better-revolution.
- Rowlatt, Justin (December 1, 2016). "IR8: The Miracle Rice Which Saved Millions of Lives". BBC News. https://www.bbc.com/news/world-asia-india-38156350. About the 50th anniversary of the rice strain.