பத்ருதீன் தியாப்ஜி
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
பத்ருதின் தியாப்ஜி(பிறப்பு : 10 அக்டோபர் 1844 - இறப்பு 19 ஆகஸ்ட் 1906) பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரபல வழக்கறிஞர், செயற்பாட்டாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். பம்பாய் உயர்நீதிமன்றத்தின் பாரிஸ்டராக பயிற்சி பெற்ற முதல் இந்தியரும் இவரே. இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது தலைவராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய தேசிய காங்கிரசின் முதல் முஸ்லிம் தலைவரும் ஆவார்.
பத்ருதீன் தியாப்ஜி | |
---|---|
![]() | |
இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் | |
பதவியில் 1887–1888 | |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | பம்பாய் | 10 அக்டோபர் 1844
இறப்பு | 19 ஆகத்து 1906 இலண்டன், இந்தியா | (அகவை 61)
பணி | கல்வியாளர்,வழக்கறிஞர், அரசியல்வாதி |
பிறப்பு தொகு
பிரிட்டிஷ் இந்தியாவின் பம்பாய் மாகாணத்தில் 1844 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் சுலைமான் பொஹ்ரா சமூகத்தின் உறுப்பினரான முல்லாஹ் தியாப் அலி பாய் மியான் என்பவருக்கு மகனாக பிறந்தார்.
கல்வி தொகு
இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப்போராட்டத்தின் போது முஸ்லிம்கள் ஆங்கிலேயரை எதிர்த்ததைப்போல், ஆங்கில கல்விமுறையையும் எதிர்த்து வந்தனர். அத்தகைய கால கட்டத்தில் தனது ஏழு மகன்களையும் கல்வி கற்க இங்கிலாந்திற்கு அனுப்பி கல்வி கற்க செய்தார் இவர் தந்தை.
இவரது மூத்த சகோதரர், கமருத்தீன், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் அனுமதிக்கப்பட்ட முதல் இந்திய வழக்கறிஞராக இருந்தார், இவரது சகோதரரின் மீதான ஈர்ப்பால், 15 வயதான பத்ருதின் சட்டம் பயில தூண்டியது.நியுபரி ஹை பார்க் கல்லூரியில் கல்வி பயின்றார்.
இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்ற எலன்பரோவிற்கு அறிமுக கடிதங்களை அளித்தார் இவர் தந்தை, 1863 ஆம் ஆண்டில் லியோ பல்கலைக்கழகத்திலும் தொடர்ந்து மிடில் டெம்பிள் சட்ட கல்லூரியிலும் கல்வி பயின்றார். கண்பார்வை பிரச்சனையால் அவதிப்பட்ட தியாப்ஜி 1864 ஆம் ஆண்டு பம்பாய் திரும்பினார். 1865 ஆம் ஆண்டில் மீன்டும் கல்வியை தொடர்ந்த இவர் 1867 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பட்டம் பெற்றார்.[1].
இந்தியா திரும்புதல் தொகு
டிசம்பர் 1867 ஆம் ஆண்டில் பம்பாய்க்கு திரும்பியப்பின், பம்பாய் உயர்நீதி மன்றத்தின் முதல் இந்திய பாரிஸ்டர் ஆனார் தியாப்ஜி.
இதையும் பார்க்க தொகு
ஆதாரங்கள் தொகு
- ↑ https://archive.org/stream/ThreePatriots/Three%20patriots#page/n25/mode/1up மூன்று முற்போக்கு தேசபகதர்கள் ஆங்கில புத்தகத்தில் -D E; கோகலே, கோபால் கிருஷ்ணா