டல்ஹவுசி (நகரம்)


டல்ஹவுசி (Dalhousie:இந்தி: डलहौज़ी) இந்தியாவின் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள ஒரு மலை வாழிடம் மற்றும் கோடைவாழிடமாகும். மலையின் மீதுள்ள இந்த நகரைச் சுற்றி 5 மலைகள் உள்ளன. இவ்விடத்தில் பாயும் முதன்மை ஆறுகள் சீனாப், ராவி, மற்றும் பியாஸ் ஆகியவையாகும். இம்மலையில்; புகழ்பெற்ற ஒரு சக்திதேவியின் ஆலயம் உள்ளது. இந்நகரிலிருந்து இமயமலை மிகவும் அருகாமையில் அதாவது ஒரு சில மைல் தூரத்தில் அமைந்துள்ளது.

டல்ஹவுசி
—  Town  —
டல்ஹவுசி
இருப்பிடம்: டல்ஹவுசி

, இமாச்சலப் பிரதேசம்

அமைவிடம் 32°32′N 75°59′E / 32.53°N 75.98°E / 32.53; 75.98
நாடு  இந்தியா
மாநிலம் இமாச்சலப் பிரதேசம்
மாவட்டம் சம்பா மாவட்டம்
ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத், சிவ பிரதாப் சுக்லா[1]
முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு[2]
மக்களவைத் தொகுதி டல்ஹவுசி
மக்கள் தொகை 7,419 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,954 மீட்டர்கள் (6,411 அடி)

குறியீடுகள்

வரலாறு

தொகு

டல்ஹவுசி மலை வாழிடம் கிழக்கிந்திய கம்பெனியாருக்கான இந்தியாவின் கோடைவாழிடமாக பிரித்தானிய அரசால் கி.பி 1854- ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்தியா, பிரித்தானியாவின் நேரடி ஆட்யின் வருவதற்கு முன், கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது இந்தியாவுக்கான நேரடி பொறுப்பை வகித்தவர் ஆளுநர் (கவர்னர் ஜெனரல்) என அழைக்கப்பட்டார். 1848 முதல் 1856 வரை இந்தியாவில் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றியவர் டல்ஹவுசி பிரபு ஆவார். இந்தியாவின் வெப்பத்தை தாங்க இயலாத கிழக்கிந்தியக் கம்பெனியினர், தற்போதுள்ள இமாசலப் பிரதேசத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில், ஒரு கோடைவாழிட நகரை உருவாக்கினர். இந்த நகர் 1854-ல் உருவாக்கப்பட்டது. புதிய நகருக்கு அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த டல்ஹவுசியின் பெயர் சூட்டப்பட்டது. தற்போதும் அவ்வாறே அழைக்கப்படுகிறது.

அமைவிடம்

தொகு

இமாச்சலப் பிரதேசத்தின் வட பகுதியான சம்பா மாவட்டத்தில் இநாகர் அமைந்துள்ளது இந்நகரைச் சுற்றிலும் ஐந்து மலைகள் அமைந்துள்ளன. இமய மலைகளின் மேற்கு எல்லையாக உள்ள பனிமூடிய மலையாகிய தௌலாதர் மலையில் இதன் அமைவிடம் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 6,000- முதல் 9,000 அடி வரை (2,700 மீ.) உயரத்தில் அமைந்துள்ளது.

கால நிலை

தொகு

குளிர் காலத்தில் மிகவும் பனி சூழ்ந்து காணப்படும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலத்தில் இடியுடன் கூடிய மழைப்பொழிவு இருக்கும். மே முதல் ஜூலை வரையில் காலையும் நன்பகலிலும் மித வெப்பமும் மாலையில் குளிரும் மற்றும் இரவுகளில் கடுங்குளிரும் காணப்படும். குளிர்காலங்களில் மழை பொழிவுடன் கருங்குளிர் நிலவும். அதனால் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவுகள் இருக்கும். இக்காலநிலை காரணமாகவே இந்நகரம் புகழ்பெற்றுள்ளது. கோடைக்காலத்தில் அதாவது மே முதல் செப்டம்பர் வரையான காலம் இங்கு சுற்றுலா செல்ல ஏற்ற காலமாகும்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

தொகு

டல்ஹவுசியில் சுற்றுலாப் பயணிகள் காணத்தக்க இடங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று ஆலா. இது ஒரு உருளைக்கிழங்கு தோட்டமாகும். இது மனதைக் கவரும் இடமாகும். மற்றொரு இடம் கரேலனு. இது இங்குள்ள குணமாக்கும் நீரால் புகழ்பெற்ற இடமாகும். மற்றொரு பிரபலமான இடம் Karelanu பகுதியில் உள்ளது. அதன் விலைமதிப்பற்ற தண்ணீர் பிரபலமானது. சுபாஷ் சந்திர போஸ் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த போது அவர் இங்குள்ள நீரைத் தொடர்ந்து குடித்து வந்ததால் குணமானார் எனக் கூறப்படுகிறது.[3]

கலையும் பண்பாடும்

தொகு
 
சம்பாவிலுள்ள லட்சுமிநாராயணர் கோவில்

இஸ்காட்டிய மற்றும் விக்டோரிய கலை நுணுக்கங்களுடன் கூடைய பல்வேறு கட்டிடங்கள் இந்நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்டைய சம்பா இராச்சியத்தில் டல்ஹவுசி ஒரு நுழைவாயில் நகரமாக இருந்தது. தற்போதுஇந்தியாவின் இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாக, சம்பா மாவட்டமாக விளங்குகிறது. நீண்ட காலமாக அதாவது கி.பி ஆறாம் நூற்றாண்டில் இருந்து வரும் பண்டைய இந்து மதத்தின் கலாச்சார அடையாளங்களான கலைகள், கோயில்கள், மற்றும் கைவினை பொருட்கள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வரும் களஞ்சியமாகவும் கலாச்சார மையமாகவும் சம்பா மலைப்பகுதி விளங்குகிறது. இங்குள்ள பார்மௌர் எனப்படும் இடம் பண்டைய கட்டி(Gaddi)மற்றும் குஜ்ஜார்(Gurjar) பழங்குடியின மக்களின் தலைநகரமாக விளங்கியது. கி. பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை அமைக்கப்பட்ட 84 பழங்காலக் கோயில்கள் இன்றும் இங்கு காணப்படுகின்றன.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டல்ஹவுசி_(நகரம்)&oldid=3405774" இலிருந்து மீள்விக்கப்பட்டது