பிலாஸ்பூர் மாவட்டம் (இமாசலப் பிரதேசம்)

பிலாஸ்பூர் இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தில் சத்லஜ் ஆற்றில் செயற்கையாக உருவாக்கப்பட்ட கோவிந்த சாகர் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர் பக்ரா நங்கல் அணைக்கட்டு திட்டத்திற்கு நீர்த்தேக்கமாக பயன்படுகிறது. இந்த ஏரியின் மேல் கன்ராவூரில் உள்ள சாலைப்பாலமானது இந்த வகையில் ஆசியாவிலேயே உயரமானது. இந்த மாவட்டத்தின் தலைமையகம் பிலாஸ்பூர் நகரில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் பரப்பளவு 1,167 கிமீ², மற்றும் மக்கட்தொகை 340,735 (2001 கணக்கெடுப்பின்படி). 2011 கணக்கெடுப்பின்படி இமாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இது மூன்றாவது அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும். [1] இம்மாவட்டப் பகுதிகளை கிபி ஏழாம் நூற்றாண்டு முதல் 1950 வரை பிலாஸ்பூர் இராச்சியத்தினர் ஆட்சி செய்தனர். இங்குள்ள நைனா தேவி கோயில் புகழ் பெற்றது.

பிலாஸ்பூர் மாவட்டம்
Bilaspur in Himachal Pradesh (India).svg
பிலாஸ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு இமாசலப் பிரதேசம்
மாநிலம்இமாசலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்பிலாசுப்பூர் (இமாசலப் பிரதேசம்)
பரப்பு1,167 km2 (451 sq mi)
மக்கட்தொகை340735 (2001)
மக்கள்தொகை அடர்த்தி292/km2 (760/sq mi)
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

மக்கள் வகைப்பாடுதொகு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி பிலாஸ்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 382,056.[2] இது தோராயமாக மாலத்தீவு நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 562வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 327 inhabitants per square kilometre (850/sq mi).[2] மேலும் பிலாஸ்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 12.08%.[2]பிலாஸ்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 981 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் பிலாஸ்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 85.67%.[2]

மேற்கோள்கள்தொகு

  1. "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census 2011". Census2011.co.in. 2011. 2011-09-30 அன்று பார்க்கப்பட்டது.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". 2011-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-10-01 அன்று பார்க்கப்பட்டது.