பிலாஸ்பூர் சமஸ்தானம்
பிலாஸ்பூர் சமஸ்தானம் (Bilaspur State or Kahlur State), இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால இமாசலப் பிரதேசம் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பிலாஸ்பூர் சமஸ்தானம் 1,173 km2 (453 sq mi) பரப்பளவும், 1, 00,994 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். இதன் வடக்கில் சுகேத் சமஸ்தானம் மற்றும் மண்டி சமஸ்தானங்களும், வடமேற்கில் காங்கிரா சமஸ்தானம் மற்றும் சம்பா சமஸ்தானங்களும் இருந்தது.
பிலாஸ்பூர் சமஸ்தானம் கக்லூர் (कहलूर) | |||||||
---|---|---|---|---|---|---|---|
கிபி 697–1948 | |||||||
நிலை | சுதேச சமஸ்தானம் | ||||||
தலைநகரம் | பிலாஸ்பூர்[1] | ||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||
வரலாறு | |||||||
• தொடக்கம் | கிபி 697 | ||||||
• முடிவு | 1948 | ||||||
| |||||||
தற்போதைய பகுதிகள் | பிலாஸ்பூர் மாவட்டம், இமாசலப் பிரதேசம், இந்தியா | ||||||
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "Bijawar". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 3. (1911). Cambridge University Press. |
வரலாறு
தொகுகிபி 697-இல் சந்திர வம்ச இராஜபுத்திர குல மன்னர் பீர் சந்த் பிலாஸ்பூர் இராச்சியத்தை நிறுவினார். 17-ஆம் நூற்றாண்டில் மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த பிலாஸ்பூர் இராச்சியம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1849-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற பிலாஸ்பூர் இராச்சியத்தினர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பஞ்சாப் மாகாண ஆளுநரின் கீழ் இருந்தது. பிலாஸ்பூர் இராச்சிய மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 11 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர். இது பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் அரசுகள் முகமையின் கீழ் இருந்தது.
இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 26 சனவரி 1950 முதல் பிலாஸ்பூர் இராச்சியம் இந்திய அரசின் நேரடி ஆளுகையின் கீழ் இருந்தது. 1954-ஆம் ஆண்டில் பிலாஸ்பூர் சமஸ்தானம் இமாசலப் பிரதேசத்துடன் இணைக்கப்பட்டது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுமேலும் படிக்க
தொகு- Hutchinson, J. & J. PH Vogel (1933). History of the Panjab Hill States, Vol. II. 1st edition: Govt. Printing, Pujab, Lahore, 1933. Reprint 2000. Department of Language and Culture, Himachal Pradesh. Chapter XIII Bilaspur State, pp. 494–518.