அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) கோட்டம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம் தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் ஓர் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும். இப்போக்குவரத்து கழகம் தமிழ்நாடு மட்டுமின்றி பாண்டிச்சேரி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தனது பேருந்து சேவையை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலேயே இக்கோட்டத்தின் தலைமையிடம் மட்டுமே ஒரு மாவட்டதின் தலைமையிடத்தில் அமையாமல் இருக்கிறது.
வகை | தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறை |
---|---|
நிறுவுகை | 1990 |
தலைமையகம் | , கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் |
சேவை வழங்கும் பகுதி | தமிழ் நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா. |
தொழில்துறை | அரசுப் போக்குவரத்து பேருந்து |
உற்பத்திகள் | பேருந்து போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சேவைகள் |
உள்ளடக்கிய மாவட்டங்கள் |
திருச்சி, அரியலூர் & பெரம்பலூர்.
தஞ்சாவூர்.
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் (சிதம்பரம்) & காரைக்கால் (புதுச்சேரி).
கரூர்
சிவகங்கை, இராமநாதபுரம் & மதுரை.
புதுக்கோட்டை, தஞ்சாவூர் (பட்டுக்கோட்டை). |
இணையத்தளம் | [1] |
தலைமையகம்
தொகுஇக்கோட்டத்தின் தலைமையகம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. இந்த பேருந்து போக்குவரத்து கழகத்தின் வாயிலாக
- சாதாரண கட்டண நகர பேருந்துகள்,
- குளிர்சாதன பேருந்துகள்,
- சாதாரண கட்டண புறநகர் பேருந்துகள்,
- புறநகர் (விரைவு) பேருந்துகள்,
என கிட்டத்தட்ட 4,000க்கும் அதிகமான பேருந்துகளை இந்த கழகம் கொண்டுள்ளது. இது தமிழக போக்குவரத்து துறையின் கீழ் இயங்கும் அரசுப் போக்குவரத்து கழகத்தில் 49% பேருந்துகளை கொண்டுள்ளது.
கும்பகோணம் போக்குவரத்துக் கழக பணிமனைகள் அமைந்துள்ள மாவட்டங்கள்
தொகுதென்னிந்திய மாநிலங்களிலேயே மிகப்பெரிய அரசுப் போக்குவரத்து கழகமாக கும்பகோணம் போக்குவரத்து கழகம் விளங்குகிறது. இப்போக்குவரத்துக் கழகம் கீழ்கண்ட மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- கரூர்
- புதுக்கோட்டை
- தஞ்சாவூர்
- திருவாரூர்
- நாகப்பட்டினம்
- மயிலாடுதுறை
- சிவகங்கை மாவட்டம்
- இராமநாதபுரம் மாவட்டம்
கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் தமிழகத்தின் சென்னை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை,கோயம்புத்தூர் உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களுக்கு பேருந்துகளை இயக்குகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் கும்பகோணம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரு கோட்டங்களும் 10க்கும் அதிகமான மாவட்டங்களில் தனது கிளைகளை கொண்டுள்ளது.
வரலாறு
தொகுஅரசுப் பேருந்துகள் என்ற சிந்தனையோடு தனியார் பேருந்துகளை நாட்டுடைமையாக்கும் திட்டத்தை அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கலைஞர். கருணாநிதி கொண்டு வந்தபோது கும்பகோணத்தில் இயங்கிய தனியார் பேருந்துகள் நாட்டுடைமையாக்கப்பட்டு சோழன் போக்குவரத்துக்கழகமாக பரிணமித்தது. இதன் தலைமையகம் கும்பகோணத்தில் அமைந்தது.
1997 ஆம் ஆண்டு போக்குவரத்துக்கழகங்களில் இருந்த தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டபோது சோழன் போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) என்ற மாற்றப்பட்டது. தீரன் சின்னமலை. வீரன் அழகுமுத்துக்கோன், மருது பாண்டியர் ஆகிய போக்குவரத்துக் கழகங்களும் கும்பகோணத்துடன் இணைக்கப்பட்டன.
மண்டல அலுவலகங்கள்
தொகுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் - கும்பகோணம் கோட்டம் ஆறு மண்டலங்களுடன் இயங்கி வருகிறது.[1] அவை:
பணிமனைகள்
தொகுகும்பகோணம் மண்டலம்
கும்பகோணம் மண்டலம், தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கியதாகும். கும்பகோணம் மண்டலத்தில் 10 கிளைகள் மூலம் பேருந்துகளை இயக்கி வருகிறது.
- கும்பகோணம் 1
- கும்பகோணம் 2
- கும்பகோணம் 3
- தஞ்சாவூர் 1
- தஞ்சாவூர் 2
- தஞ்சாவூர் 3
- திருவையாறு
- ஒரத்தநாடு
- பேராவூரணி
- பட்டுக்கோட்டை
திருச்சி மண்டலம்
திருச்சி மண்டலம், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். கும்பகோணம் கோட்டத்தின் மிகப் பெரிய மண்டலம் திருச்சி மண்டலமாகும். திருச்சி மண்டலத்தில் 15 கிளைகள் மூலம் பேருந்துகளை இயக்கி வருகிறது.
- திருச்சி புறநகர்
- திருச்சி கண்டோன்மெண்ட்
- திருச்சி தீரன் நகர்
- திருச்சி மலைக்கோட்டை
- திருச்சி மண்ணச்சநல்லூர்
- திருச்சி துவாக்குடி
- துவரங்குறிச்சி
- லால்குடி
- மணப்பாறை
- உப்பிலியாபுரம்
- துறையூர்
- அரியலூர்
- ஜெயங்கொண்டம்
- குன்னம்
- பெரம்பலூர்
நாகப்பட்டினம் மண்டலம்
நாகை மண்டலமானது, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். கும்பகோணம் கோட்டத்தில், அதிக மாவட்டங்களை உள்ளடக்கியது இம்மண்டலமாகும். இம்மண்டலத்தில் 11 கிளைகள் மூலம் பேருந்துகளை இயக்கி வருகிறது.
- நாகப்பட்டிணம்
- மயிலாடுதுறை
- சீர்காழி
- சிதம்பரம், கடலூர் மாவட்டம்.
- திருவாரூர்
- திருத்துறைப்பூண்டி
- பொறையாறு
- காரைக்கால், புதுச்சேரி யூனியன் பிரதேசம்.
- வேதாரண்யம்
- மன்னார்குடி
- நன்னிலம்
கரூர் மண்டலம்
கரூர் மண்டலம், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
- கரூர் 1
- கரூர் 2
- அரவக்குறிச்சி
- குளித்தலை
- முசிறி, திருச்சி மாவட்டம்.
புதுக்கோட்டை மண்டலம்
புதுக்கோட்டை மண்டலம், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
- புதுக்கோட்டை நகர்
- புதுக்கோட்டை புறநகர்
- திருச்சி, திருச்சிராப்பள்ளி.
- பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்.
- அறந்தாங்கி
- கந்தர்வக்கோட்டை
- பொன்னமராவதி
- இலுப்பூர்
- ஆலங்குடி
காரைக்குடி மண்டலம்
காரைக்குடி மண்டலம், சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாகும்.
- காரைக்குடி.1 காரைக்குடி.2
- இராமநாதபுரம் நகர்
- இராமநாதபுரம் புறநகர்
- இராமேஸ்வரம்
- சிவகங்கை
- திருப்பத்தூர்
- தேவகோட்டை
- முதுகுளத்தூர்
- பரமக்குடி
- கமுதி
- மதுரை
இதனையும் காண்க
தொகு- மாநகரப் போக்குவரத்து கழகம் - சென்னை
- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - சேலம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - மதுரை
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை