தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி என்பது அரசுப் போக்குவரத்து கழக துறையின் கீழ் செயல்படும் ஒரு பொதுப் போக்குவரத்து அமைப்பாகும். இது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 8 பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
வகை | தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறை |
---|---|
நிறுவுகை | 1990 |
தலைமையகம் | , திருநெல்வேலி |
சேவை வழங்கும் பகுதி | தமிழ் நாடு, அண்டை மாநிலங்கள் |
தொழில்துறை | அரசுப் போக்குவரத்து பேருந்து |
உற்பத்திகள் | பேருந்து போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சேவைகள் |
உள்ளடக்கிய மாவட்டங்கள் |
|
இணையத்தளம் | http://www.tnstc.in |
வரலாறு
தொகு1974ஆம் ஆண்டு பாண்டியன் போக்குவரத்துக் கழகத்திலிருந்து 104 பேருந்துகள் பிரிக்கப்பட்டு நாகர்கோவிலை தலைமையிடமாக கொண்டு கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. 1983ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய பணிமனைகள் கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்திலிருந்து பிரித்து நேசமணிப் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. நேசமணிப் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டபின் கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்தின் தலைமையிடம் திருநெல்வேலிக்கு மாற்றப்பட்டது. 1997-ல் போக்குவரத்துக் கழகங்களைத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டப்பொழுது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மதுரையுடன் இணைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய போக்குவரத்துக் கழகங்கள் பிரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி என 2010 நவம்பர் 1 அன்று உருவாக்கப்பட்டது.
மண்டலங்களும் பணிமனைகளும்
தொகுஇந்த போக்குவரத்துக் கழகம் 3 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மண்டலம்
தொகுகட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரால் பெரும்பான்மையினரால் அறியப்படுகிறது. இது திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தை உள்ளடக்கியது. இம்மண்டலம் பின்வரும் 11 பணிமனைகளை கொண்டது:
பணிமனைகள்
தொகு- தாமிரபரணி
- திருநெல்வேலி புறவழிச்சாலை
- கட்டபொம்மன்நகர்
- வள்ளியூர்
- திசையன்விளை
- சேரன்மாதேவி
- பாபநாசம்
- தென்காசி
- செங்கோட்டை
- புளியங்குடி
- சங்கரன்கோவில்
நாகர்கோவில் மண்டலம்
தொகுநேசமணி போக்குவரத்துக் கழகம் என்ற பெயரால் பெரும்பான்மையினரால் அறியப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய இம்மண்டலம் பெரும்பான்மையான நகர மற்றும் புறநகரப் பேருந்துகளை இயக்குகிறது. நாகர்கோவிலில் பேருந்திற்கு மேற்கூரை கட்டும் தளமும் உள்ளது. பின்வரும் 12 பணிமனைகள் கொண்ட இம்மண்டலம் சுமார் 1000-க்கும் மேலான பேருந்துகளை தினமும் இயக்குகிறது:
பணிமனைகள்
தொகு- கன்னியாகுமரி
- ராணிதோட்டம் கிளை 1
- ராணிதோட்டம் கிளை 2
- ராணிதோட்டம் கிளை 3
- செட்டிக்குளம்
- விவேகானந்தபுரம்
- திங்கள்நகர்
- குளச்சல்
- திருவட்டார்
- மார்த்தாண்டம்
- குழித்துறை கிளை 1
- குழித்துறை கிளை 2
தூத்துக்குடி மண்டலம்
தொகுஇம்மண்டலம் 26.06.2013 அன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலியில் "தூத்துக்குடி" என்ற புதிய மண்டலம் உருவாக்கப்பட்டது. இது தூத்துக்குடி மாவட்டத்தை உள்ளடக்கியது ஆகும். இது பின்வரும் 7 பனிமனைகளை கொண்டுள்ளது
பணிமனைகள்
தொகு- தூத்துக்குடி நகர்
- தூத்துக்குடி புறநகர்
- திருச்செந்தூா்
- ஸ்ரீவைகுண்டம்
- கோவில்பட்டி
- விளாத்திகுளம்
- சாத்தான்குளம்
இதனையும் காண்க
தொகு- மாநகரப் போக்குவரத்து கழகம் - சென்னை
- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - சேலம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - மதுரை