தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை என்பது பாண்டியன் போக்குவரத்து கழகம் ஆகும்.
வகை | தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறை |
---|---|
நிறுவுகை | 1990 |
தலைமையகம் | , மதுரை |
சேவை வழங்கும் பகுதி | தமிழ் நாடு, அண்டை மாநிலங்கள்l |
தொழில்துறை | அரசுப் போக்குவரத்து பேருந்து |
உற்பத்திகள் | பேருந்து போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சேவைகள் |
உள்ளடக்கிய மாவட்டங்கள் |
|
இணையத்தளம் | [1] |
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக ,மதுரையில் அரசு டவுன் பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகிறது
வரலாறு
தொகு1972 ஆம் ஆண்டு பாண்டியன் போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது. இப்போக்குவரத்துக்கழகத்திலிருந்து 1974-ம் ஆண்டு 104 பேருந்துகள் பிரிக்கப்பட்டு கட்டப்பொம்மன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. 1974-ம் ஆண்டு இதிலிருந்து 62 பேருந்துகள் பிரிக்கப்பட்டு சோழன் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. மேலும் 1986-ம் ஆண்டு 446 பேருந்துகள் பிரிக்கப்பட்டு இராணி மங்கம்மாள் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது.
சேவை வழங்கும் மாவட்டங்கள்
தொகுஇந்த மதுரை போக்குவரத்துக் கழகமானது நான்கு மாவட்டங்களில் மட்டுமே தனது சேவையை வழங்குகிறது. தமிழகத்தில் மற்ற அரசு போக்குவரத்து கழகங்கள் வருமானத்தை ஒப்பிடும் போது இந்த மதுரை போக்குவரத்து கழக வருமானம் குறைவாகவே காணப்படுகிறது.
இதனையும் காண்க
தொகு- மாநகரப் போக்குவரத்து கழகம் - சென்னை
- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - சேலம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி
ஆதாரங்கள்
தொகுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை அலுவல் இணையதளம்