தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் - கோவை என்பது தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் அமைந்துள்ள எட்டு போக்குவரத்து கழகங்களில் ஒன்றாகும். இதன் தலைமையகம் நெம் 43,மேட்டுப்பாளையம் சாலை,கோயம்புத்தூர் ஆகும்.
வகை | தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் துறை |
---|---|
நிறுவுகை | 1990 |
தலைமையகம் | , கோயம்புத்தூர் |
சேவை வழங்கும் பகுதி | தமிழ் நாடு, அண்டை மாநிலங்கள்l |
தொழில்துறை | அரசுப் போக்குவரத்து பேருந்து |
உற்பத்திகள் | பேருந்து போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, சேவைகள் |
துணை நிறுவனங்கள் |
|
இணையத்தளம் | [1] |
வரலாறு
தொகுசுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் 1965-ஆம் ஆண்டு கோவையைத் தலைமையிடமாகக்கொண்டு சேரன் போக்குவரத்து கழகம் என்ற பெயரிலும் ஈரோட்டைத் தலைமையிடமாகக்கொண்டு ஜீவா போக்குவரத்து கழகம் என்ற பெயரிலும் உதகையைத் தலைமையிடமாகக்கொண்டு பாரதியார் போக்குவரத்து கழகம் என்ற பெயரிலும் பேருந்துகள் இயங்கிக்கொண்டு இருந்தது.
பின்பு அவைகளை ஒருங்கிணைந்த போக்குவரத்து கழகமாக 1997 -ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் - கோவை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு விளங்குகிறது.
மாநகராட்சிகளில் பேருந்து சேவை
தொகுகோவை கோட்டத்தின் மூலம் மூன்று மண்டலங்களில் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மூன்று மாநகராட்சிகளில் பேருந்து சேவை வழங்கப்படுகிறது. இதில் கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் மாநகர் போக்குவரத்து கழகம் தனது சேவையை வழங்குகிறது. மேலும் திருப்பூர், ஈரோடு ஆகிய மாநகரங்களுக்கு சாதாரண கட்டணத்தில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.
போக்குவரத்து மண்டலங்கள்
தொகுஇந்த போக்குவரத்து கழகத்தின் கீழ் பின்வரும் நான்கு மண்டலங்கள் செயல்படுகின்றன.
- கோவை - TN 38 N
- ஈரோடு - TN 33 N
- நீலகிரி - TN 43 N
- திருப்பூர் - TN 39 N
என்ற எண்களில் பேருந்து போக்குவரத்து சேவைகளை மண்டலங்களின் மூலம் இயக்கிவருகிறது.
மண்டலத் தலைமையகம்
- கோயம்புத்தூர் மண்டலத்தின் மூலம் கோவை மாவட்டத்திலும்,
- ஈரோடு மூலம் ஈரோடு மாவட்டத்திலும்
- திருப்பூர் மண்டலத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்திலும்
- உதகை மண்டலத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்திலும் பேருந்து சேவை வழங்கப்படுகிறது
மண்டலங்களும் பணிமனைகளும்
தொகுகோயம்புத்தூர் மண்டலம்
- தலைமை அலுவலகக் கிளை
- உப்பிலிபாளையம்
- சுங்கம்-1,2
- ஒண்டிப்புதூர் -1,2,3
- உக்கடம் -1,2
- அன்னூர்
- மருதமலை
- கருமத்தம்பட்டி
- பொள்ளாச்சி -1,2,3
- வால்பாறை
- சூலூர்
ஈரோடு மண்டலம்
- காசிபாளையம் (ஈரோடு)-1,2
- பள்ளிபாளையம் (ஈரோடு)-3
- பவானி
- பெருந்துறை
- கொடுமுடி
- கரூர்
- கவுந்தப்பாடி
- அந்தியூர்
- கோபிசெட்டிபாளையம்
- நம்பியூர்
- சத்தியமங்கலம்
- தாளவாடி
திருப்பூர் மண்டலம்
- திருப்பூர் -1,2
- காங்கேயம்
- பல்லடம்
- தாராபுரம்
- உடுமலைப்பேட்டை
- பழனி -1,2
உதகை மண்டலம்
பிற மாநில,மாவட்ட சேவைகள்
தொகுதமிழகம் மட்டுமின்றி பிற மாநில சேவைகளையும் இந்த அரசுப் போக்குவரத்துக் கழகம் - கோவை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் கேரளா, கர்நாடக, ஆந்திரா என பிற மாநிலங்களில் தனது சேவைகளை வழங்குகிறது. கேரள மாநிலம்
- பாலக்காடு
- ஆலப்புழை
- திருவனந்தபுரம்
- கோழிக்கோடு
- இடுக்கி
- எர்ணாகுளம்
- கண்ணூர்
- மலப்புரம்
- கொல்லம்
- திருச்சூர்
- குருவாயூர்
- காசர்கோடு
- கொச்சி
- பைனாவு
என கேரள மாநிலத்திற்கு கோவை மண்லடப் போக்குவரத்து சேவைகளை வழங்குகிறது. கேரள மாநில அரசு பேருந்துகளுக்கு தனியாக பேருந்து நிலையம் உள்ளது. வெளிமாநில பேருந்து நிலையங்களிலேயே கேரள மாநில பேருந்து நிலையம் தான் பெரிய பேருந்து நிலையம் ஆகும். கர்நாடக மாநில போக்குவரத்து
- கர்நாடகத்தில் தமிழக எல்லையில் அமைந்துள்ள பல மாவட்டங்களுக்கு முக்கிய நகராட்சி, மாநகராட்சிகளுக்கு பேருந்து போக்குவரத்து செய்யப்பட்டு உள்ளது. கர்நாடக அரசு பேருந்துகளுக்கு தனி பேருந்து நிலையம் உள்ளது.
ஆந்திர மாநில போக்குவரத்து
- குறிப்பிட்ட ஆந்திர மாநில மாவட்ட தலைநகரங்களுக்கு தினசரி பேருந்து போக்குவரத்து உள்ளது. ஆந்திர மாநில அரசு பேருந்துகளுக்கு தனியாக பேருந்து நிலையம் உள்ளது.
தமிழ்நாட்டுப் போக்குவரத்துக் கழகங்கள்
தொகு- மாநகரப் போக்குவரத்து கழகம் - சென்னை
- அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - விழுப்புரம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - கும்பகோணம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - சேலம்
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - மதுரை
- தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் - திருநெல்வேலி
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.google.com/urlsa=t&source=web&rct=j&url=https://www.tnstc.in/&ved=2ahUKEwit2dPtpLfxAhULA3IKHVlEAC8QFjAGegQIGxAC&usg=AOvVaw14hhEhtej9YnGORnNoj7Qw[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ https://www.google.com/urlsa=t&source=web&rct=j&url=https://www.123coimbatore.com/cinema/coimbatore-news/city-news/new-air-bus-in-coimbatore/&ved=2ahUKEwiX7J-bpbfxAhXOZCsKHWbyDr8QFjAWegQIGRAC&usg=AOvVaw3aUunsewo4TbK11uL0joRH[தொடர்பிழந்த இணைப்பு]