திருக்கடையூர்


திருக்கடையூர் (திருக்கடவூர்) (ஆங்கிலம்:Thirukadaiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.

திருக்கடையூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் மயிலாடுதுறை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். லலிதா, இ. ஆ. ப
ஊராட்சி தலைவர்
மக்கள் தொகை 5,533 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மக்கள் வகைப்பாடுதொகு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,533 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 2,757 ஆண்கள், 2,776 பெண்கள் ஆவார்கள். திருக்கடையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78.71% ஆகும்.

சிறப்புதொகு

மயிலாடுதுறை - காரைக்கால் சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 21.4 கி.மி. தூரத்தில், காரைக்காலில் இருந்து 21.7 கிமீ தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 23 கி.மி. தொலைவில் சீர்காழி - காரைக்கால் சாலை வழியில் இவ்வூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோயில் புகழ்பெற்ற சைவத்தலமாகும்.

ஆதாரங்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. http://census2001.tn.nic.in/pca2001.aspx-Rural[தொடர்பிழந்த இணைப்பு] - Nagapattinam District;Tharangambadi Taluk;Thirukkadaiyur Village2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கடையூர்&oldid=3273445" இருந்து மீள்விக்கப்பட்டது