திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்
திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் (Amritaghateswarar-Abirami Temple) என்பது சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 47ஆவது சிவத்தலம் ஆகும். அமிர்தமே லிங்கமாக அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றான இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும். இத்தலத்தில் இறைவன் மார்க்கண்டேயருக்காக எமனை உதைத்தருளினார் என்பது தொன்நம்பிக்கை
தேவாரம், அபிராமி அந்தாதி பாடல் பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 11°04′29″N 79°48′23″E / 11.0748°N 79.8065°E |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கடவூர் வீரட்டம், கடபுரி, வில்வாரண்யம், பிரமாந்திரத்தலம்[1] |
பெயர்: | திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருக்கடையூர் |
மாவட்டம்: | மயிலாடுதுறை |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அமிர்தகடேசுவரா் அமிர்தலிங்கேசுவரர் |
உற்சவர்: | காலசம்காரமூா்த்தி |
தாயார்: | அபிராமி தேவி, அபிராமசுந்தாி, அபிராமநாயகி, அபிராமவல்லி, அபிநயசரசநாயகி, அபிநயசுந்தாி, அமுதகடேஸ்வாி, அமுதநாயகி, அமுதாதேவி, அழகியமுலைநாயகி இடையழகுசுந்தாி, அஞ்சுகமொழியாள், ரத்னதொடுடையாள், ரத்னாம்பிகை, சுகுந்தகுளாம்பிகை, சுகந்தினாவதி, சுகம்தந்தநாயகி, சுகுணாம்பிகை, சந்திரஜோதி, சந்திரஆா்த்தி, சந்திரசேகாி, ஞானசோரூபினி, கனிமொழியாள், |
தல விருட்சம்: | வில்வம், பிஞ்சிலம்(சாதி முல்லை) |
தீர்த்தம்: | அமிர்த புஷ்கரணி, மார்க்கண்டேய தீர்த்தம், கால தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம், அபிராமி அந்தாதி |
பாடியவர்கள்: | சம்பந்தர், அப்பர், சுந்தரர், அபிராமி பட்டர் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிட கட்டடக்கலை |
வரலாறு | |
தொன்மை: | புராதனக் கோயில் |
அமைவிடம்
தொகுஇத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை–தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி–நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் உள்ளது.
இறைவன், இறைவி
தொகு- இக்கோயிலில் உள்ள இறைவன் அமிர்தகடேசுவரர், இறைவி அபிராமி தேவி.
- மேலும் இத்திருத்தலத்தில் இறைவி அபிராமி தேவி என்ற பெயரால் வணங்கபடுகிறாள்.
- அதற்கு உதாரணமாக மற்ற திருத்தலத்தில் இறைவி " வல்லி ", " அம்மன் " போன்று அல்லாமல் கன்னியாஸ்திரியாக " அபிராமி தேவி " ஆக அபிராம பட்டர் அருள்கினங்க சரஸ்வதி தேவியின் ஞானசொருப நிலையில் காட்சியளிக்கிறாள்.
- அதனால் இத்தல இறைவியான " அபிராமி தேவி " வணங்குவதன் மூலம் உயர் ஞானம், கல்வி மேலான அறிவு சார் வழிபாட்டிற்கு உகந்த இறைவியாக அருள் பாலித்து வணங்க செய்கிறாள்.
வழிபட்டோர்
தொகுஅகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம். மார்க்கண்டேயர் வழிபட்ட சிவத்தலங்களுள் இத்தலம் 108 வதாகவும், அருகிலுள்ள திருக்கடவூர் மயானம் 107 வதாகவும் அமைகின்றன.
தல வரலாறு மற்றும் இறைவனின் சாதனைகள்
தொகு- இத்தலத்தில் மார்க்கண்டேயனின் ஆயுட்காலம் நிறைவடைய அவனது உயிரை பறிக்கும் பொருட்டு வந்த கலனை (இஎமன்) பாசகயிற்றால் துரத்த உடனே மார்க்கண்டேயன் சிவபெருமானான அமிர்தலிங்கத்தை கட்டி அனைத்து கொள்ள இயமனின் பாசகயிறு சிவபெருமானின் லிங்கத்தின் மீது விழ கோபமுற்ற சிவன் உருவமாக வடிவெடுத்து இயமனை தனது காலால் உதைத்து நெற்றி கண்ணில் எறித்து அவனை கொன்றுவிட அதன் பிறகு மார்கண்டேயன் உயிர் நீடித்தான் என்பது இத்தல வரலாறும் இறைவனின் சாதனை ஆகும்,
- அதனாலே இத்தலத்தில் மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.[1]
- மேலும் தை அமாவாசை திதியை அம்பிகையின் முக அழகை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் பௌர்ணமி என்று தவறாக சரபோஜி மன்னரிடம் சொல்ல, அதனால் கோபமுற்ற மன்னரிடம் இருந்து காக்கும்படிக்கு அபிராமி அந்தாதி பாடி அமாவாசையை பௌர்ணமியாக மன்னருக்கு மாற்றிக் காட்டிய அற்புதம் நிகழ்ந்த தலம் ஆகும்.[2]
- மேலும் இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 164,165
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-06-26. பார்க்கப்பட்ட நாள் 2014-08-09.
இவற்றையும் பார்க்க
தொகுவெளி இணைப்புகள்
தொகு- வேங்கடம் முதல் குமரி வரை 2/கடவூர் கால சம்ஹாரர்
- திருக்கடையூர் அமிர்தகடேசுவரை சிறப்புகள் 50 பரணிடப்பட்டது 2016-09-25 at the வந்தவழி இயந்திரம்
- Thirukkadaiyur Pooja பரணிடப்பட்டது 2019-08-07 at the வந்தவழி இயந்திரம்
- தினமலர்
- தல வரலாறு பரணிடப்பட்டது 2012-05-08 at the வந்தவழி இயந்திரம்
- கடவூர் (திருக்கடவூர்)
- தேவகி முத்தையாவின் திருக்கடவூர் தலவரலாறு
- விக்கிமேப்பியாவில் கோயில் அமைவிடம்
- அபிராமி பட்டர் பரணிடப்பட்டது 2014-06-26 at the வந்தவழி இயந்திரம்
- காலனை கடிந்த கால சம்ஹாரமூர்த்தி!, தினமணி, 15 பிப்ரவரி 2019
படத்தொகுப்பு
தொகு-
கோபுரம்
-
அமிர்தகடேஸ்வரர் விமானம்
-
காலசம்ஹார மூர்த்தி விமானம்