பாலக்கரை
தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
பாலக்கரை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு மாநகர்ப் பகுதியாகும்.
பாலக்கரை | |
---|---|
நகரப் பகுதி | |
ஆள்கூறுகள்: 10°48′39″N 78°41′45″E / 10.8108°N 78.6959°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஏற்றம் | 98.53 m (323.26 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 620001 |
புறநகர்ப் பகுதிகள் | சிங்காரத்தோப்பு, தாராநல்லூர், தென்னூர், புத்தூர், உறையூர், தில்லை நகர், பிராட்டியூர், எடமலைப்பட்டி புதூர், கருமண்டபம், பொன்மலை, வரகனேரி, அரியமங்கலம், திருவரங்கம், திருவானைக்காவல், கே. கே. நகர் |
மக்களவைத் தொகுதி | திருச்சிராப்பள்ளி |
சட்டமன்றத் தொகுதி | திருச்சிராப்பள்ளி கிழக்கு |
அமைவிடம்
தொகுபாலக்கரை பகுதியானது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 98.53 மீட்டர் உயரத்தில், (10°48′39″N 78°41′45″E / 10.8108°N 78.6959°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
தொகுதொடருந்து நிலையம்
தொகுஇவ்வூரிலுள்ள தொடருந்து நிலையம் பாலக்கரை தொடருந்து நிலையம் என்று அழைக்கப்படுகிறது.
சமயம்
தொகுஇந்துக் கோயில்
தொகுபாலக்கரையில் வெளிகண்ட நாதர் என்ற சிவன் கோயில் ஒன்று உள்ளது.[1] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]
கிறித்தவக் கோயில்
தொகுகிறித்தவக் கோயிலான உலக மீட்பர் பேராலயம் பாலக்கரை பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[3]
தேர்தல் தொகுதிகள்
தொகுபாலக்கரை பகுதியானது, திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
- ↑ "Arulmigu Velikandanadhar Temple, Palakkarai, Thiruchirappalli - 620001, Thiruchirappalli District [TM026415].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
- ↑ "Basilica of the Holy Redeemer, Trichy, Tamilnadu, India". Catholic Shrine Basilica (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-14. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.