உலக மீட்பர் பேராலயம்

உலக மீட்பர் பேராலயம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பாலக்கரை பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு கிறித்தவத் தேவாலயம் ஆகும்.[1] 'சகாய மாதா திருத்தலப் பேராலயம்' என்றும் இது அழைக்கப்படுகிறது.[2]

உலக மீட்பர் பேராலயம்
உலக மீட்பர் பேராலயம்
பொதுவான தகவல்கள்
இடம்பாலக்கரை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு
ஆள்கூற்று10°48′37″N 78°41′53″E / 10.8103°N 78.6981°E / 10.8103; 78.6981
வலைதளம்
[1]
உலக மீட்பர் பேராலயம், பாலக்கரை, திருச்சிராப்பள்ளி

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் மீட்டர் உயரத்தில், (10°48′37″N 78°41′53″E / 10.8103°N 78.6981°E / 10.8103; 78.6981) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருச்சிராப்பள்ளியில் இத்திருத்தலம் கட்டப்பட்டுள்ளது.

வரலாறு

தொகு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திருச்சிராப்பள்ளியானது திவான் கஞ்சமலை முதலியார் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. அச்சமயம் திருச்சிராப்பள்ளியிலிருந்த அருட்தந்தை கோரிஸ், திவான் கஞ்சமலை முதலியாருக்கு நிறைய உதவிகளைச் செய்ததாகவும், அதற்குப் பிரதிபலனாக திவான், தற்போதைய இத்திருத்தலம் அமைந்திருக்கும் இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களையும் தானமாக அருட்தந்தை கோரிஸூக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது. அதில் கட்டப்பட்டது தான் இப்பேராலயம்.[3] கி. பி. 1881 ஆம் ஆண்டு இப்பேராலயம் தோற்றுவிக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Basilica of the Holy Redeemer, Trichy, Tamilnadu, India". Catholic Shrine Basilica (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-14. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
  2. DIN (2020-12-03). "பார்போற்றும் பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா!". Dinamani. பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
  3. "5. திருச்சி உலக மீட்பர் பசிலிக்கா சகாய அன்னை பேராலயம்". பார்க்கப்பட்ட நாள் 2024-09-13.
  4. Mukil E. Publishing And solutions Private Limited (2015-09-12). The local history , culture and symbols of Tamilnadu: தமிழ்நாட்டின் தல வரலாறுகளும், பண்பாட்டுச் சின்னங்களும். Mukil E Publishing And Solutions Private Limited.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_மீட்பர்_பேராலயம்&oldid=4089271" இலிருந்து மீள்விக்கப்பட்டது