சிங்காரத்தோப்பு

சிங்காரத்தோப்பு என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.

சிங்காரத்தோப்பு
சிங்காரத்தோப்பு is located in தமிழ் நாடு
சிங்காரத்தோப்பு
சிங்காரத்தோப்பு
ஆள்கூறுகள்: 10°49′27″N 78°41′53″E / 10.8241°N 78.6980°E / 10.8241; 78.6980
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருச்சிராப்பள்ளி
ஏற்றம்
98.7 m (323.8 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
620008
புறநகர்ப் பகுதிகள்தாராநல்லூர், தென்னூர், புத்தூர், உறையூர், தில்லை நகர், பாலக்கரை, பிராட்டியூர், எடமலைப்பட்டி புதூர், கருமண்டபம், பொன்மலை, வரகனேரி, அரியமங்கலம், திருவரங்கம், திருவானைக்காவல், கே. கே. நகர்
மக்களவைத் தொகுதிதிருச்சிராப்பள்ளி
சட்டமன்றத் தொகுதிதிருச்சிராப்பள்ளி கிழக்கு

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 98.7 மீட்டர் உயரத்தில் 10°49′27″N 78°41′53″E / 10.8241°N 78.6980°E / 10.8241; 78.6980 என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு திருச்சிராப்பள்ளியில் இவ்வூர் அமைந்துள்ளது.

முக்கியத்துவம்

தொகு

மலைக் கோட்டை, தாயுமானவர் கோயில், உச்சிப்பிள்ளையார் கோயில் ஆகியவை இப்பகுதியிலுள்ள முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். சென்னை நகருக்கு தியாகராய நகர் முக்கியத்துவம் வாய்ந்தது போல, திருச்சிக்கு சிங்காரத்தோப்பு வணிக முக்கியத்துவம் வாய்ந்தது. மிகச் சிறிய பொருட்கள் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள் வரை அனைத்தும் இங்கு மலிவான விலையில் கிடைக்கும்.[1][2]

தமிழ்நாட்டின் அரசு கைத்தொழில் வளர்ச்சி நிறுவனமான 'பூம்புகார்' விற்பனை நிலையத்தின் கிளை ஒன்று சிங்காரத்தோப்பு பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு ஆண்டுதோறும் கலைநயம் மிக்க கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.[3]

பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம்

தொகு

நெரிசல் மிகுந்த வணிகப் பகுதியான சிங்காரத்தோப்பு பகுதியில் 4,000 ச.மீ. பரப்பளவில் ரூ.19.70 கோடி செலவில் நான்கு அடுக்குகள் கொண்ட பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. 536 இருசக்கர வாகனங்கள் மற்றும் 138 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.[4]

தேர்தல் தொகுதிகள்

தொகு

சிங்காரத்தோப்பு பகுதியானது, திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. எம்.திலீபன், தே.தீட்ஷித் (2021-07-31). "திருச்சி: ஊசி, பாசி முதல் எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் வரை... சிங்காரத்தோப்பில் சிங்காரமாய் வாங்கலாம்!". Vikatan. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
  2. திருச்சி தீபன் (2021-08-04). "சென்னைக்கு தி.நகர், திருச்சிக்கு சிங்காரத்தோப்பு..!". tamil.abplive.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
  3. "வந்தாச்சு நவராத்திரி விழா.. திருச்சியில் கொலு பொம்மை விற்பனை தொடக்கம்!". News18 தமிழ். 2023-10-06. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
  4. "தயார்நிலையில் சிங்காரத்தோப்பு மல்டி லெவல் பார்க்கிங்.. தீபாவளிக்கு திறக்கப்படுமா?". News18 தமிழ். 2023-11-05. பார்க்கப்பட்ட நாள் 2024-09-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்காரத்தோப்பு&oldid=4089075" இலிருந்து மீள்விக்கப்பட்டது