திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில்

உச்சிப்பிள்ளையார் கோயில் (Ucchi Pillayar Temple) தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு.)

உச்சிப்பிள்ளையார் கோயில்
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில்
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் is located in தமிழ் நாடு
திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில்
தமிழ்நாட்டில் கோயிலின் இருப்பிடம்
ஆள்கூறுகள்:10°49′43″N 78°41′51″E / 10.8285°N 78.6974°E / 10.8285; 78.6974
பெயர்
வேறு பெயர்(கள்):மாணிக்க விநாயகர் (கணேசமூர்த்தி)
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருச்சிராப்பள்ளி
அமைவு:திருச்சிராப்பள்ளி
ஏற்றம்:122 m (400 அடி)
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
இணையதளம்:www.thiruchyrockfort.org

இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் சன்னதியை அடைய தரையில் இருந்து 437 படிகளை ஏற வேண்டும்.

மலைக்கோட்டை திருச்சி

சங்கநூல் குறிப்பு தொகு

பானை செய்யும் குயவனின் சிறுவன் தந்தையைப் போல விளையாடுகையில் பானை செய்யும் சக்கரத்தில் வைத்த பச்சைமண் உருண்டை போல் இந்த மலை இருந்ததாம். இதன் அரசன் சோழன் நலங்கிள்ளி என்று புலவர் கோவூர் கிழார்.[1]

மரபு வழி வரலாறு தொகு

இராவணனுடன் நடந்த போரில் வெற்றி பெற்று அயோத்தியா திரும்பிய இராமருக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அதில் விபீசணனும் கலந்து கொண்டார். போரில் தனக்கு உதவியதற்காக இராமர், விபீசணனுக்கு இரங்கநாதர் சிலை ஒன்றை பரிசளித்தார். விபீசணன் இராமருக்கு உதவிய போதிலும், அவர் அசுரன் என்ற காரணத்தால் அச்சிலையை அவர் கொண்டு செல்வதில் விருப்பமில்லாத தேவர்கள், அதை தடுக்க வேண்டுமென விநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களது வேண்டுகோளை விநாயகரும் ஏற்றார்.

விபீசணன் இலங்கைக்கு திருச்சி வழியே செல்லும் போது, அங்கு ஓடும் காவிரி ஆற்றில் குளிக்க விரும்பினார். ஆனால், இரங்கநாதர் சிலையை ஒரு முறை தரையில் வைத்து விட்டால் அதை அங்கிருந்து நகர்த்த முடியாது என்ற காரணத்தால் செய்வதறியாமல் திகைத்தார். அப்போது அங்கு இருந்த ஒரு சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, தான் குளித்து விட்டு வரும் வரையில் அதைத் தாங்கி பிடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து குளிக்கச் சென்று விட்டார்.

சிறுவன் வேடத்தில் இருந்த விநாயகர், இரங்கநாதர் சிலையை தரையில் வைத்து விட்டார். இதைக் கண்ட விபீசணன் கோபங்கொண்டு அச்சிறுவனைத் துரத்தி மலை உச்சியில் பிடித்து, கோபத்தில் அவனது தலையில் கொட்டினார். அப்பொழுது விநாயகர் தன் சுயரூபத்தை வெளிப்படுத்தினார். பின்பு, அவ்விடத்திலேயே உச்சிப்பிள்ளையார் கோயில் எழுப்பப்பட்டது.

இக்கதைக்கேற்றபடி, இங்குள்ள விநாயகர் சிலையின் தலையில் ஒரு வீக்கம் இருப்பதைக் காணலாம்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. :வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த
    பசு மண் குரூஉத் திரள் போல, அவன்
    கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே. 10
    திணை பாடாண்திணை; துறை இயன்மொழி.
    சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
    புறநானூறு 32
  2. மு.ஹரி காமராஜ் (2 சூலை 2021). திருப்பம் தரும் திருச்சி கோயில்கள்: உச்சத்தில் அமர்ந்தவரை வணங்கிட அச்சங்கள் விலகும்!. விகடன். https://www.vikatan.com/spiritual/temples/trichy-temples-uchchi-pillaiyar-temple-history-and-backstory.