கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி
கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி (K.A.P. Viswanatham Government Medical College) என்பது தமிழ்நாடு மாநில அரசால் நடத்தப்படும் ஒரு மருத்துவக் கல்லூரி ஆகும்.[1] இது இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.[2] இம்மருத்துவக் கல்லூரி தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி நகரில் மத்தியப் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது. 2010ஆம் ஆண்டில் கல்லூரி மாணவர்களிடையேயான சேர்க்கைத் தேர்வில் இக்கல்லூரி மூன்றாவது இடத்தைப் பெற்றது.[3]
குறிக்கோள் | பராமரிப்பு, சேவை, குணப்படுத்துதல் |
---|---|
நிறுவப்பட்டது | 1997 |
வகை | அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை |
துறை முதல்வர் | பேராசிரியர் மரு. வனிதா |
மேலாமை | சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை (தமிழ்நாடு) - மருத்துவ கல்வி இயக்குனரகம் |
பட்டப்படிப்பு | வருடத்திற்கு 150 மாணவர்கள் (எம்.பி.பி.எஸ்) |
பட்ட மேற்படிப்பு | வருடத்திற்கு 94 மாணவர்கள் (எம்.டி&எம்.எஸ்) வருடத்திற்கு 04 மாணவர்கள் (டி.எம்) |
அமைவு | பெரிய மிளகுப் பாறை, ஆட்சியர் அலுவலக சாலை, திருச்சிராப்பள்ளி., தமிழ்நாடு, இந்தியா (10°47′51″N 78°40′38″E / 10.797492°N 78.677269°E) |
வளாகம் | நகர்ப்புறம் |
இணைப்புகள் | தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | www |
அங்கீகாரமும் இணைப்பும்
தொகுகி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவக் கல்லூரி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை (முன்னர் அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை என அழைக்கப்பட்டது) கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள இக்கல்லூரி மருத்துவமனையாகும்.
வசதிகள்
தொகுஇக்கல்லூரியில் 30க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. கல்லூரி வளாகத்தில் மூன்று மாணவர்களுக்கான விடுதிகளும் இரண்டு மாணவியர் விடுதிகளும் உள்ளன. இக்கல்லூரியில் சுமார் 750 பேர் அமரும் வகையில் கலையரங்கம் ஒன்றினைக் கொண்டிருக்கிறது. 150க்கும் மேற்பட்ட இருக்கைகள் கொண்ட நான்கு விரிவுரை அரங்குகள் உள்ளன. 7,000 புத்தகங்கள் மற்றும் தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்விதழ்கள் கொண்ட மத்திய நூலகம் வளாகத்தில் அமைந்துள்ளது. இரண்டு வாசிப்பு அரங்குகள் கொண்ட இதில், ஒன்று முதுநிலை பட்டதாரிகளுக்கும், மற்றொன்று பேராசிரியர்களுக்கும் உள்ளது. உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகளும் உள்ளன. இதில் ஒரு உடற்பயிற்சிக்கூடம், கூடைப்பந்து மைதானம், இறகுப் பந்து மைதானம், இறகுப் பந்தாட்ட மைதானம் மற்றும் இரண்டு கைப்பந்து மைதானங்கள் உள்ளன. வட்டப் பந்து, தூக்கு பந்து, மட்டைப் பந்து, கால் பந்து ஆகியவற்றை விளையாடும் வசதியும் அமைந்துள்ளன.
வழங்கப்படும் படிப்புகள்
தொகுஇளங்கலை மருத்துவம்
தொகு- 2013 முதல் ஆண்டுக்கு 150 இடங்களுடன் இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் (5 மற்றும் அரை ஆண்டுகள் காலம்).
முதுநிலை மருத்துவ படிப்புகள்
தொகு- கால அளவு 3 ஆண்டுகள்
- எம். டி பொது மருத்துவம் (ஆண்டுக்கு 14 இடங்கள்)
- எம். டி மயக்கவியல் (ஆண்டு 13 இடங்கள்)
- எம். டி உயிர் வேதியியல் (ஆண்டுக்கு 05 இடங்கள்)
- எம். டி குழந்தை மருத்துவம் (ஆண்டுக்கு 09 இடங்கள்)
- எம். டி உளநோய் மருத்துவம் (ஆண்டுக்கு 04 இடங்கள்)
- எம். டி நோயியல் (ஆண்டுக்கு 06 இடங்கள்)
- எம். டி நுண்ணுயிரியல் (ஆண்டுக்கு 03 இடங்கள்)
- எம். டி சட்ட மருத்துவம் (03 இடங்கள்/ஆண்டு)
- எம். டி உடற்கூறியல் (03 இடங்கள்/ஆண்டு)
- எம். எஸ். பொது அறுவை சிகிச்சை (ஆண்டுக்கு 16 இடங்கள்)
- எம். எஸ். மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் (ஆண்டுக்கு 09 இடங்கள்)
- எம். எஸ். முடவியல் (ஆண்டுக்கு 05 இடங்கள்)
- எம். எஸ். கண் மருத்துவம் (02 இடங்கள்/ஆண்டு)
- எம். எஸ். காது மூக்கு தொண்டை மருத்துவம் (02 இடங்கள்/ஆண்டு)
சிறப்புப் பாடங்கள்
தொகு- பட்டம் படிப்புகள் (கால அளவு 3 ஆண்டுகள்)
பட்டயப் படிப்புகள்
தொகு- செவிலியர் (ஆறு மாத பயிற்சி உட்பட மூன்றரை ஆண்டுகள்)
- மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் (இரண்டு ஆண்டுகள்)
தொழில்நுட்ப படிப்புகள்
தொகு- அறுவைசிகிச்சை அரங்க உதவியாளர் (1 வருடம்)
- மயக்க மருந்து தொழில்நுட்ப உதவியாளர்(1 வருடம்)
- எலும்பியல் தொழில்நுட்ப உதவியாளர் (1 வருடம்)
- அவசர சிகிச்சை தொழில்நுட்ப உதவியாளர்(1 வருடம்)
- சுவாச சிகிச்சை தொழில்நுட்ப உதவியாளர் (1 வருடம்)
- கதிரியக்க உதவியாளர் சான்றிதழ் (1 வருடம்)
பிற படிப்புகள்
தொகு- செவிலிய உதவியாளர் (1 வருடம்)
வகுப்புகள் மற்றும் நுழைவு ஆண்டுகள்
தொகுஎம்.பி.பி.எஸ் மாணவர்களின் ஒவ்வொரு வகுப்பும் மருத்துவப் பள்ளியில் நுழைந்த ஆண்டைக் குறிக்கும் ஒரு (அதிகாரப்பூர்வமற்ற) பெயரை தனக்கு ஒதுக்கியுள்ளது.
சமீபத்திய தொகுதிகள்
- 2009 - செடிசியன்ஸ்
- 2010 - கிரெனோவியாண்ட்ஸ்
- 2011 - ராபரைட்ஸ் ஒன்ஸ்
- 2012 - இன்காண்டோ டெசெர்னோஸ்
- 2013 - வால்டெரியன்ஸ்
- 2014 - டெஸ்பெராடோ சாண்டியன்ஸ்
- 2015 - ஆஸ்பிரோ ட்ரிடன்ஸ்
- 2016 - ஜெஹஸ்டியன்ஸ்
- 2017 - ஸ்பிலோக்ளாஸ்டர்ஸ்
- 2018 - லிவென்ட்ரான்ஸ்
- 2019 - யெக்சார்டியன்ஸ்
- 2020 - கால்வேரியன்ஸ்
- 2021 - வைவேர்ன்ஸ்
- 2022 - இன்ஃபிஸிட்ரான்ஸ்
இணைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்
தொகு- இராஜாஜி அரசு காசநோய் மருத்துவமனை, திருச்சி
- மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://www.tamildigitallibrary.in/admin/assets/periodicals/TVA_PRL_0014563/TVA_PRL_0014563_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_16_30_2000.pdf
- ↑ "NMC Approved Medical Colleges in India". Medical Council of India. 1 April 2021. பார்க்கப்பட்ட நாள் 1 April 2021.
- ↑ R. Krishnamoorthy (4 August 2010). "KAPV Medical College third preferred in counselling". The Hindu இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101123131756/http://www.hindu.com/2010/08/04/stories/2010080457420300.htm. பார்த்த நாள்: 1 June 2012.