மகப்பேறியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மகப்பேறியல் (Obstetrics) என்பது கருத்தரிப்பு, குழந்தை பிறப்பு, குழந்தை பிறப்புக்குப் பின்னரான காலம் ஆகியவற்றைப் பற்றி ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். மகப்பேறியல் என்பது மகளிர் நலவியலுடன்(gynecology) தொடர்புடையது. மருத்துவத்தில் சிறப்பாக மகப்பேறியல் மற்றும் மகளிர் நோய் மருத்துவவியல் இரண்டும் அறுவை சிகிச்சைப் பிரிவுவைச் சார்ந்ததாகும்.
மகப்பேற்றுக்கான பராமரிப்புதொகு
மகப்பேற்றுக்கான பராமரிப்பு என்பது கருத்தரிப்புக் காலத்தில் ஏற்படும் பல்வெறு சிக்கல்களை இனங்கான உதவும். தொடர்ந்த மருத்துவப்பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் ஆகியவையும் இதில் அடங்கும்.
3D ultrasound of 3-அங்குலம் (76 mm) fetus (about 14 weeks gestational age)
முதல் மூன்று மாதங்கள்தொகு
- முழுமையான குருதி அணுக்கள் சோதனை (CBC)
- குருதி வகை
- பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் தாக்கத்தை அறிய பிறபொருளெதிரி கண்டறிதல்
- ஆர்எச் குருதி நோய் இருப்பின் 28 வாரங்கள் நோய்த்தடுப்பு சிகிச்சையளித்தல்.
- சிலபிசு நோய் அடையாளம் காணல் ரேபிட் பிளாஸ்மா ரேஜின்
- ரூபெல்லா பிறபொருளெதிரி அடையாளம் காணல்
- மஞ்சள் காமாலை சோதனை
- கொணோறியா, கிளமிடியா சோதனை
- காசநோய்க்கான சோதனை
- பாப் சோதனை
- சிறுநீர்ப்பரிசோதனை
- எச்.ஐ.வி பரிசோதனை
ஆகியவை