கொணோறியா (Gonorrhea) ஒருவகைப் பாக்டீரியாவால் ஏற்படும் பாலியல் நோயாகும். தொற்றுள்ளவருடன் பாலுறவு கொள்வதால் பரவுகிறது. பெண்களில் தெளிவான அறிகுறி காட்டுவதில்லையாதலால் பெண்கள் இதனை இனங்காணாதிருக்க வாய்ப்புக்கள் அதிகம். கர்ப்பிணிகளுக்கு இது ஏற்பட்டால் குழந்தையின் கண்கள் குருடாகலாம். சரியான சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய நோயாகும்.[1][2][3]

அறிகுறிகள்

தொகு

ஆண்களில்

தொகு
  • ஆண்குறியிலிருந்து மஞ்சள் அல்லது வெண்ணிற திரவம் வெளியேறல்
  • சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிவு
  • குதத்தைச் சூழ அரிப்பு
  • குதவழிப் பாலுறவு கொண்டோரில் குதத்தினூடாக ஒருவித திரவம் வெளியேறல்
  • விதைகளில் வலி

பெண்களில்

தொகு
  • யோனிமடலினூடாக மஞ்சள் திரவம் வெளியேறல்
  • சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிவு

மேற்கோள்கள்

தொகு
  1. Delong L, Burkhart N (2017-11-27). General and Oral Pathology for the Dental Hygienist. Wolters Kluwer Health. p. 787. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4963-5453-2.
  2. "Gonorrhea – CDC Fact Sheet (Detailed Version)". CDC. 17 November 2015. Archived from the original on 2 September 2016. பார்க்கப்பட்ட நாள் 27 August 2016.
  3. "Sexually transmitted diseases treatment guidelines, 2015". MMWR. Recommendations and Reports 64 (RR-03): 1–137. June 2015. பப்மெட்:26042815. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொணோறியா&oldid=3893680" இலிருந்து மீள்விக்கப்பட்டது