ரூபெல்லா

வைரசு நோய்

ரூபெல்லா (Rubella) என்பது ரூபெல்லா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று ஆகும்.இதனை ஜெர்மன் தட்டம்மை அல்லது மூன்று நாள் தட்டம்மை என்றும் கூறுவர்.[1] இந்த வைரஸ் சுவாசப் பாதை வழியாக உள் நுழைகிறது. தொற்று ஏற்பட்டு 5-7 நாட்கள் இரத்தத்தில் இருந்து பின் உடல் முழுதும் பரவுகிறது.இவை தொப்புல் கொடி வழியாக கருவை சென்றடையக் கூடியவை. இத்தொற்றால் ஏற்படும் சொறி முகத்தில் தொடங்கி உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. சில நேரங்களில் நமைச்சலைத் தோற்றுவிக்கும். நிணநீர் கணுக்களில் வீக்கம் பொதுவானவை. காய்ச்சல், தொண்டை புண் மற்றும் சோர்வு கூட ஏற்படலாம்.[2] பெரியவர்களுக்கு மூட்டுவலி பொதுவானது. விரைச்சிரை வீக்கம், நரம்புகளின் வீக்கங்கள், இரத்தப் போக்கு என்பன சிக்கலான நோய் நிலைகளாகும். கர்ப்பிணிகளுக்கு இந் நோய் தாக்கத்தினால் கருச்சிதைவு அல்லது பிறவி ரூபல்லா நோய்க்குறியுடனான (சிஆர்எஸ்) குழந்தை பிறக்கலாம்.[3] பிறவி ரூபல்லா நோய்க்குறியில் கண்புரை, காதுகள் கேளாமை, இதயம் மற்றும் மூளையில் கோளாறுகள் என்பன அடங்கும். கர்ப்பத்தின் 20 வது வாரத்திற்குப் பிறகு சிக்கல்கள் அரிதானவை.[3]

ரூபெல்லா என்பது உலகின் பல பகுதிகளில் ஏற்படும் பொதுவான தொற்று ஆகும்.[4] ஒவ்வொரு ஆண்டும் 100,000 பிறவி ரூபெல்லா நோய்க்குறி ஏற்படுகிறது.[5] தடுப்பூசியின் விளைவாக பல பகுதிகளில் நோய் விகிதங்கள் குறைந்துள்ளன. உலகளவில் நோயை அகற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 2015 இல் உலக சுகாதார அமைப்பு அமெரிக்காவை ரூபல்லா தொற்று இல்லாத நாடாக அறிவித்தது.[6]

அறிகுறிகள் தொகு

ஆரம்பத்தில் இந்நோய் பெரும்பாலும் தாக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு வராத வண்ணம் உள்ளது. பின்னர் தடித்தல் தோன்றி முகத்தில் இருந்து உடல் முழுதும் பரவுகிறது. சிலநேரங்களில் தடிப்புகளில் அரிப்பு ஏற்படுகிறது. காய்ச்சல், வரண்ட தொண்டை, மயக்கம் , மூட்டு வலி போன்றவையும் ஏற்படுகின்றன . கற்ப காலத்தில் இத்தொற்று ஏற்படும் போது கரு கலையவோ அல்லது பிறக்கும் குழந்தைகள் பிறவி ரூபெல்லா நோய்க்குறியோடு (congenital rubella syndrome) பிறக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு இதனால் கண்புரை, காது கேளாமை, மூளை மற்றும் இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது.[7]

சிகிச்சை தொகு

ரூபெல்லாவிற்கு என்று தனிப்பட்ட சிகிச்சை இல்லை. இருப்பினும் இத்தொற்றை வராமல் தடுப்பதற்கு எம்.எம்.ஆர் தடுப்பூசிகள் ( MMR vaccine) பயன்படுத்தப்படுகின்றன. உலகச் சுகாதார நிறுவனம் குழந்தையின் 12-18 மாதத்திற்குள் முதல் ஊசியும் 36 மாதத்தில் இரண்டாவது ஊசியும் போட பரிந்துரை செய்கிறது. உலகச் சுகாதார நிறுவனம் அக்டோபர் 2018ல் ரூபெல்லா இல்லாத நாடாக ஆஸ்திரேலியாவை அறிவித்தது.

காரணம் தொகு

ரூபல்லா வைரசினால் இந் நோய் ஏற்படுகின்றது. இந்த வைரசு ஒற்றை ஆர்என்ஏ மரபணுவைக் கொண்டுள்ளது.[8] இது சுவாச வழியால் பரவுகிறது. இத் தீ நுண்ம தொற்று 5 முதல் 7 நாட்களுக்கு பிறகு இரத்தத்தில் காணப்படுகிறது மற்றும் உடல் முழுவதும் பரவுகிறது.[3] இந்த தீ நுண்மம் நஞ்சுக் கொடியை கடந்து கருவைத் தொற்றும் திறன் கொண்டது. ரூபெல்லா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் இருமல் வழியாக காற்றினால் பரவுகின்றது. பிறவி ரூபல்லா நோய்க்குறியுடனான குழந்தைகள் ஒரு வருடத்திற்கும் மேலாக வைரஸை பரப்பக்கூடும்.[3] மனிதர்கள் மட்டுமே தொற்றினால் பாதிக்கப்படக் கூடியவர்கள். இந்நோயை பூச்சிகள் பரப்புவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் இத்தொற்று குணமடைந்தவுடன் எதிர்காலத்தில் இந்நோய் தொற்றில் இருந்து விடுபவதற்கான நோய் எதிர்ப்புச் சக்தயை பெறுகின்றனர். இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, தொண்டை பரிசோதனை என்பவற்றில் இந்நோயை பரப்பும் தீ நுண்மத்தை கண்டறிவதன் மூலம் நோய் உறுதிப்படுத்தப்படுகிறது.[2]

தொற்றுநோயியல் தொகு

ரூபெல்லா உலகளவில் நிகழ்கிறது. மிதமான காலநிலை உள்ள நாடுகளில் வசந்த காலத்தில் இந்த வைரஸ் உச்சம் பெறுகிறது. 1969 ஆம் ஆண்டில் ரூபெல்லாவுக்கு எதிரான தடுப்பூசி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, அமெரிக்காவில் ஒவ்வொரு 6-9 வருடங்களுக்கும் ஐரோப்பாவில் 3–5 வருடங்களுக்கும் பரவலாக இத்தொற்றுகள் ஏற்பட்டன. இது பெரும்பாலும் 5-9 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது.[9] தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அதிக எண்ணிக்கையிலான விகிதங்களைக் கொண்ட நாடுகளில் இந்த நோய் தொற்றுகள் அரிதாகிவிட்டன. 1962-1965 ஆண்டுகளுக்கு இடையில் அமெரிக்காவில் ஏற்பட்ட தொற்றுநோய்களின் போது, கர்ப்ப காலத்தில் ரூபெல்லா தீ நுண்ம தொற்றுகள் 30,000 இறந்து பிறந்த குழந்தைகள் மற்றும் 20,000 குழந்தைகள் சி.ஆர்.எஸ் இன் விளைவாக பலவீனமான அல்லது ஊனமுற்றவர்களாக பிறக்க காரணமாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.[10]

சான்றுகள் தொகு

  1. Neighbors, M; Tannehill-Jones, R (2010). "Childhood diseases and disorders". Human diseases (3rd ed.). Clifton Park, New York: Delmar, Cengage Learning. pp. 457–79. ISBN 978-1-4354-2751-8.
  2. 2.0 2.1 "Pinkbook | Rubella | Epidemiology of Vaccine Preventable Diseases | CDC". www.cdc.gov (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-11-05.
  3. 3.0 3.1 3.2 3.3 Lambert, N; Strebel, P; Orenstein, W; Icenogle, J; Poland, GA (7 January 2015). "Rubella". Lancet. 385 (9984): 2297–307. doi:10.1016/S0140-6736(14)60539-0. PMC 4514442. PMID 25576992.
  4. "3 Infectious Diseases Related To Travel"". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  5. "Rubella". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. "Rubella Has Been Eliminated From the Americas, Health Officials Say"". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  7. Edlich RF, Winters KL, Long WB, Gubler KD (2005). "Rubella and congenital rubella (German measles)". J Long Term Eff Med Implants. 15 (3): 319–28. doi:10.1615/JLongTermEffMedImplants.v15.i3.80. PMID 16022642.
  8. Frey TK (1994). Molecular biology of rubella virus. Adv. Virus Res. Advances in Virus Research. 44. pp. 69–160. doi:10.1016/S0065-3527(08)60328-0. ISBN 9780120398447. PMID 7817880.
  9. "The changing epidemiology of rubella in the 1990s: on the verge of elimination and new challenges for control and prevention". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  10. Cooper, L.Z. (1975). "Congenital Rubella in the United States". In Krugman S Gershon A (ed.). Symposium on Infections Of the Fetus and Newborn Infant. New York: Alan R. Liss. pp. 1–. ISBN 978-0845100035.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரூபெல்லா&oldid=3720983" இலிருந்து மீள்விக்கப்பட்டது