திருவரங்கம் தீவு

ஒரு ஆற்றுத் தீவு

திருவரங்கம் தீவு (Srirangam Island) என்பது ஓர் ஆற்றுத் தீவு ஆகும் இது தமிழ்நாட்டின்திருச்சிராப்பள்ளி மாநகரின் ஒருபகுதியாக உள்ளது. இது காவிரி ஆறு, காவிரியின் கிளை ஆறான கொள்ளிடம் ஆறு ஆகியவற்றால் உருவான தீவு ஆகும்.  தீவின் நீளம் 19 மைல் (31 கி.மீ.) அகலம் 1.5 மைல்கள் (2.4 கி.மீ.) கொண்டதாக உள்ளது. தீவின் எல்லைகளாக மேற்கில்  மேலணையும்,   கிழக்கே கல்லணையும் உள்ளன. திருவரங்கம் நகரம், ஒரு முக்கிய இந்து வைணவ யாத்திரைத் தலமாக, இந்தத் தீவின் மையத்தில் அமைந்துள்ளது.

தீவின் பெரும்பகுதி திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் எல்லைக்குட்பட்டதாகவும், திருவரங்கம் மண்டலத்தின் ஒரு பகுதியாகவும், திருவரங்கம், திருவானைக்காவல், சீனிவாச நகர், கீதபுரம் ஆகிய  புறநகர் பகுதிகள் அடங்கியுள்ளன.

மேற்கோள்கள் தொகு

W. Francis (1906). Gazetteer of South India. பக். 199. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவரங்கம்_தீவு&oldid=2677024" இருந்து மீள்விக்கப்பட்டது