திருப்பராய்த்துறை

திருப்பராய்த்துறை (Thirupparaitturai) இந்தியாவின் தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அந்தநல்லூர் ஊராட்சியில் காவேரி ஆற்றின் தென் கரையில் அமைந்த கிராமம் ஆகும். திருப்பராய்த்துறை கிராமத்தின் அஞ்சல் சுட்டு எண் 639115 ஆகும்.

திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையும், திருச்சி-பாலக்காடு இருப்புப்பாதையும் திருப்பராய்த்துறை கிராமத்தின் வழியாகச் செல்கிறது. இக்கிராமம் திருச்சியிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சிறப்புகள் தொகு

திருப்பராய்த்துறை கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற திருப்பராய்த்துறை பராய்த்துறைநாதர் கோயில் [1] மற்றும் சுவாமி சித்பவானந்தர் நிறுவிய இராமகிருஷ்ண தபோவனம் உள்ளது.[2]

மக்கள் தொகையியல் தொகு

திருப்பாராய்த்துறை கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 3,403 ஆகும். அதில் ஆண்கள் 1679; பெண்கள் 1724 ஆக உள்ளனர். பட்டியல் தலித் சமூகத்தினர் 667 ஆகவும், பட்டியல் பழங்குடிகள் 715 ஆகவும் உள்ளனர். [3]

மேற்கோள்கள் தொகு

  1. "அருள்மிகு பராய்த்துறை நாதர் திருக்கோயில்". Archived from the original on 2017-05-18. பார்க்கப்பட்ட நாள் 2017-06-15.
  2. ஸ்ரீ இராமகிருஷ்ண தபோவனம்
  3. 2011 Census of Trichy District Panchayat Unions

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பராய்த்துறை&oldid=3874312" இலிருந்து மீள்விக்கப்பட்டது