அண்ணா அறிவியல் மையம், திருச்சிராப்பள்ளி
அண்ணா அறிவியல் மையம் என்ற கோளரங்கம் இந்தியாவின் திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ளது.[1][2]
நிறுவப்பட்டது | 10 சூன் 1999 |
---|---|
அமைவிடம் | புதுக்கோட்டை சாலை ,திருச்சிராப்பள்ளி |
வகை | கோளரங்கம் |
வலைத்தளம் | http://tnstc.gov.in/anna-science-centre.html |
அமைவிடம்
தொகுஇந்தக் கோளரங்கம் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அருகிலுள்ள திருச்சி மற்றும் புதுக்கோட்டை இடையேயான தேசிய நெடுஞ்சாலை 210 யில் அமைந்துள்ளது.
வரலாறு
தொகுதிருச்சிராப்பள்ளியில் உள்ள அண்ணா அறிவியல் மையம், தமிழக அரசால் ஜூன் 10, 1999 அன்று திறக்கப்பட்டது. இந்த மையத்திற்கு அருகிலுள்ள மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சாவூர், பெரம்பலூர், திண்டுக்கல், கரூர் மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களில் இருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கோள்களைப் பார்வையிட வருகிறார்கள்.
அம்சங்கள்
தொகுஇந்தக் கோளரங்கத்தில் "சுற்றுச்சூழல் தொகுப்பு" உள்ளது. இதன் கருப்பொருள்கள்: சுற்றுச்சூழல் அமைப்புகள், உயிர்-புவிசார் வேதியியல் சுழற்சிகள், உயிர்-வேறுபாடு மற்றும் பாதுகாப்பு ஆகியவையாகும். இதில் "ஷார்க் தீவு", மேஜிக் ஷோ, ரோலர் கோஸ்டர் போன்ற பல முப்பரிமானப் படங்கள் உள்ளது. மேலும் இதில் ''விஜயன் பிரசார்", என்ற எடுசாட் வசதியைக் கொண்டுள்ளது. [3] இதன் மூலம் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அறிவியல் மையங்களைப் பற்றிய விவரங்களை அறியலாம்.[4]
நிகழ்ச்சிகள்
தொகுஇங்கு நிகழ்ச்சிகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் உள்ளது. தமிழ் நிகழ்ச்சிகள் காலை 10.30, 1.00 மணி மற்றும் 3.30 மணிக்கும். ஆங்கில நிகழ்ச்சிகள் 11.45 மணி, 2.15 மணி மற்றும் 4.45 மணியிலும் நடைபெறும்.[5]
இவற்றையும் காண்க
தொகு- List of planetariums
சான்றுகள்
தொகு- ↑ ""அண்ணா அறிவியல் மையம் புதிய கோளரங்கம் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது".". தி இந்து. 22 மார்ச்சு 2011. http://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/article1562057.ece. பார்த்த நாள்: 31 July 2011.
- ↑ http://www.tn.gov.in/policynotes/pdf/higher_education.pdf
- ↑ "திருச்சி அண்ணா அறிவியல் மையத்தில் புதிய 3D படம் ஃப்ளாஷ் நியூஸ் இன்று - ஆன்லைன் செய்தி இதழ்". Flashnewstoday.com. 2011-05-22. Archived from the original on 2011-05-23. பார்க்கப்பட்ட நாள் 2011-07-31.
- ↑ "திருச்சி அண்ணா அறிவியல் மையம் எடுசாட் வசதி பெறுகிறது". தி இந்து. 25 June 2007 இம் மூலத்தில் இருந்து 10 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121110091613/http://www.hindu.com/2007/06/25/stories/2007062557300300.htm. பார்த்த நாள்: 31 July 2011.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-26.