தேசிய நெடுஞ்சாலை 536 (இந்தியா)
(தேசிய நெடுஞ்சாலை 210 (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தேசிய நெடுஞ்சாலை 536 தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தே.நெ 536 தமிழ்நாட்டின் திருமயம் மற்றும் இராமநாதபுரம் ஆகியவற்றை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் திருமயம் அருகில் புதியதாய் பாரத மிகு மின் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் மொத்த நீளம் 109 கி.மீ. (68 மைல்).
தேசிய நெடுஞ்சாலை 536 | ||||
---|---|---|---|---|
வழித்தட தகவல்கள் | ||||
நீளம்: | 109 km (68 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | திருமயம், தமிழ்நாடு | |||
முடிவு: | இராமநாதபுரம், தமிழ்நாடு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | தமிழ்நாடு: 109 கி.மீ. | |||
முதன்மை இலக்குகள்: | தேவக்கோட்டை - திருவாடானை | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
வழி
தொகுதிருமயம் முதல் தேவக்கோட்டை, திருவாடானை வழியாக இராமநாதபுரம் வரை. மானாமதுரை முதல் தஞ்சாவூர் வரையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 36-ல் திருமயத்தில் இருந்து தொடங்கும் இச்சாலை காரைக்குடி நகருக்குள் செல்லாமல் தேவக்கோட்டை, திருவாடானை வழியாக இராமநாதபுரத்தில், கொச்சி முதல் இராமேசுவரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 87-ல் இணைகிறது.[1]