தேசிய நெடுஞ்சாலை 87 (இந்தியா)

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தேசிய நெடுஞ்சாலை 87 (National Highway 87 (or NH 87) தென்னிந்தியாவில் உள்ள 🎁தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை-தனுஷ்கோடியை இணைக்கும் 154 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1]

Map
மதுரை-தனுஷ்கோடியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 87-இன் வரைபடம் (சிவப்பு நிறக் கோடு)
வழித்தட தகவல்கள்
AH43 இன் பகுதி
நீளம்:154 km (96 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மதுரை
To:தனுஷ்கோடி, இராமநாதபுரம், தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 154 km (96 mi)
முதன்மை
இலக்குகள்:
மதுரை - பரமக்குடி -இராமநாதபுரம்- மண்டபம் - தனுஷ்கோடி
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 38 தே.நெ. 50

முகுந்தராயர் சத்திரத்திலிருந்து, தனுஷ்கோடி வரையிலான 5 கிமீ நீளம் கொண்ட நெடுஞ்சாலை 1964 தனுஷ்கோடி புயலின் போது முழுவதும் சேதமுற்றது. 2015-இல் மதுரை-பரமக்குடி வரையான 75 கிமீ நீளத்திற்கு இந்நெடுஞ்சாலை நான்குவழிச்சாலையாக மாற்றப்பட்டது.

பரமக்குடியிலிருந்து, இராமநாதபுரம் வரையான இருவழிநெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டது. மதுரை-விரகனூர் சுற்றுச்சாலையிலிருந்து மணலூர், புளியங்குளம், சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, இராஜகம்பீரம், பரமக்குடி போன்ற ஊர்களைத் தொடாமல், சுற்றுச்சாலை வழியாக இந்நெடுஞ்சாலை கடக்கிறது.

இந்த நெடுஞ்சாலையுடன் கொச்சி-தனுஷ்கோடியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 49 மதுரையில் இணைகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "National Highways and their lengths". National Highways Authority of India. Archived from the original on 10 February 2010. பார்க்கப்பட்ட நாள் 2009-02-12.

வெள் இணைப்புகள்

தொகு
  • [1] NH 85 on MapsofIndia.com