முதன்மை பட்டியைத் திறக்கவும்

பாரதிதாசன் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் புரட்சிக்கவி பாரதிதாசன் பெயரால் நிறுவப்பட்டது. இதன் குறிக்கோளாக புதியதோர் உலகம் செய்வோம் என்னும் பாரதிதாசனின் பொன்மொழிகளை ஏற்று செயற்பட்டு வருகிறது. இந் நிறுவனம் 2006–07 ஆம் ஆண்டு தனது வெள்ளி விழாவைக் கொண்டாடியது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம்
Bharathidasan University logo.gif
குறிக்கோளுரை"புதியதோர் உலகம் செய்வோம்"
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
We will create a brave new world
வகைஅரசு நிறுவனம்
உருவாக்கம்1982
வேந்தர்பன்வாரிலால் புரோகித்[1]
துணை வேந்தர்ப.மணிசங்கர்
பட்ட மாணவர்கள்2000 (2005)
உயர் பட்ட மாணவர்கள்500
அமைவிடம்திருச்சி, தமிழ் நாடு, இந்தியா
வளாகம்நகரம் சார் பகுதி
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இணையத்தளம்www.bdu.ac.in

இப்பல்கலையின் மைய வளாகம் முதலில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பல்கலைப்பேரூர், திருச்சியில் தொடங்கப்பட்டது. பின்னர் இதன் தெற்கு வளாகம் அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கும் அதனைத் தொடர்ந்து இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கும் முறையே பகிர்ந்தளிக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் மற்றொரு வளாகம் நகர்ப்புறத்தில் காஜாமலை என்னும் பகுதியில் அமையப்பட்டுள்ளது. இது முன்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் திருச்சி முதுநிலை மையமாக இயங்கிவந்தது.

இப்பல்கலைக்கழகத்திற்கு பெங்களூரு, தேசிய தர மதிப்பீடு மற்றும் நிர்ணயக் கழகத்தினால் "ஏ" கிரேடு வழங்கப்பட்டுள்ளது.

கட்டமைப்புதொகு

இதன் நிர்வாகம் சார்ந்தப் பகுதிகளான துணைவேந்தர் செயலகம், பதிவாளர் அலுவலகம், நிதி மற்றும் தேர்வு அலுவலகம், பெரும்பான்மையான துறைகள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் பல்கலையின் மைய வளாகமான பல்கலைப்பேரூரிலேயே அமையப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆடிப்படை மருத்துவயியல், புவியியல், சமுகவியல், கடலியல் மற்றும் மொழியியற் பள்ளிகளும், மேலும் மைய நூலகம், விடுதி, தகவலியற் மையம், பணியாளர் மனைகள், நலவிடுதி, உணவகம் எனப் பல அமையப்பெற்றுள்ளன.

இதன் நகர வளாகமான காஜாமலையில், பொருளியல்,சமூகப்பணி, கணினியல் மற்றும் தொலையுணர்தல் பள்ளிகளும், கல்விப்பணியாளர் கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. இதனைத் தவிர்த்து பாரதிதாசன் தொலைக்கல்வி மையம் பல்கலைப்பேரூரிலும், பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனம், திருவெரும்பூரிலும் இயங்கி வருகின்றன.

இயக்கம்தொகு

இப்பல்கலைக் கழகம் 4 கல்விமுறைத் தொகுதிகளாகப் பகுக்கப்பட்டு, 16 பள்ளிகள், 34 துறைகள், 11 ஆய்வு மையங்கள், 195 கல்விப்பணியாளர்கள், 2300 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு இயங்கிவருகிறது. இப்பலகலையின் துறைகள்/பள்ளிகளில் 177 திட்டங்களுக்குட்பட்ட 40 முதுநிலைத் திட்டமும் செயல்பட்டு வருகின்றன. இக்கல்வி நிறுவனத்தில் திருச்சியை ஒட்டிய 8 மாவட்டங்களில் இருக்கும் 123 கல்லூரிகளில் ஆட்சிச் செலுத்திவருகிறது. அதில் 123 கலை மற்றும் அறிவியற் கல்லூரிகளும், 3 நுண்கலைக் கல்லூரிகளும் அடங்கும். இவற்றுள் 8 அரசுக் கல்லூரியும் 11 அரசு உதவிக்கல்லூரிகளும் தன்னாட்சி நிறுவனங்களாக செயற்பட்டு வருகின்றன. இதைத் தவிர்த்து 8 பல்கலைக்கழகக் உறுப்புக்கல்லூரிகளும் நடத்திவருகிறது.

பல்கலைகழகத்தின் கீழ் கல்லூரிகள் உள்ள மாவட்டங்கள்தொகு

தன்னாட்சிக் கல்லூரிகள்தொகு

வ.எண் கல்லூரியின் பெயர் இடம் மாவட்டம்
01 புனித சூசையப்பர் கல்லூரி திருச்சி திருச்சி
02 பிஷப் ஹீபர் கல்லூரி திருச்சி திருச்சி
03 ஹோலி கிராஸ் கல்லூரி திருச்சி திருச்சி
04 சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி திருச்சி திருச்சி
05 ஜமால் முகமது கல்லூரி திருச்சி திருச்சி
06 நேரு நினைவுக் கல்லூரி புத்தனாம்பட்டி திருச்சி
07 A.V.V.M பூண்டி புஷ்பம் கல்லூரி பூண்டி தஞ்சாவூர்
08 ஏ. வி. சி. கல்லூரி மன்னம்பந்தல் மயிலாடுதுறை

பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகள்தொகு

  1. பாவேந்தர் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி
  2. தேசியக் கல்லூரி, திருச்சி
  3. அரசினர் கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  4. அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, முசிறி
  5. தனலெஷ்மி சீனிவாசன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
  6. மீனாட்சி இராமசாமி கலை அறிவியல் கல்லூரி
  7. சாரதா மகளிர் கலை அறிவியல் கல்லூரி
  8. அய்மான் மகளிர் கல்லூரி
  9. மாடர்ன் கலை அறிவியல் கல்லூரி
  10. சீனிவாசன் கலை அறிவியல் கல்லூரி
  11. தந்தை ரோவர் கல்லூரி
  12. பாரதிதாசன் பல்கலைகழக கல்லூரி
  13. புனித சூசையப்பர் கல்லூரி, திருச்சி
  14. நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி
  15. பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  16. தூய வளனார் கல்லூரி (இது சென்னைப் பல்கலைக்கழகத்தினின்றும் பழமையானதாகும்)
  17. ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி
  18. உருமு தனலட்சுமி கல்லூரி
  19. ஏ. ஏ. அரசு கலைக்கல்லூரி
  20. கலைக் காவிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  21. காவேரி மகளிர் கல்லூரி
  22. கிருத்துராஜ் கல்லூரி
  23. சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி
  24. செட்டிநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  25. தூய சிலுவைக் கல்லூரி
  26. பெரியார் ஈ.வெ.ரா அரசினர் கலைக்கல்லூரி
  27. ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி
  28. தனிநாயகம் அடிகள் இதழியல் கல்லூரி
  29. எம். ஐ. இ. டி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  30. ஏனாதி இராஐப்பா கலை & அறிவியல் கல்லூரி
  31. ஏ. வி. சி. கல்லூரி
  32. பூண்டி புஷ்பம் கல்லூரி
  33. சரபோஜி மன்னர் அரசினர் கலைக்கல்லூரி
  34. அடைக்கல மாதா கல்லூரி
  35. அபி மற்றும் அபி கலை அறிவியல் கல்லூரி
  36. அரசினர் கலைக்கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம்
  37. அரசினர் மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி), கும்பகோணம்
  38. அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரி
  39. ஏ. ஆர். சி. விஸ்வநாதன் கல்லூரி
  40. ஏ. டி. எம். மகளிர் கல்லூரி
  41. குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி
  42. சுவாமி விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி
  43. தமிழ்வேள் உமாமகேஸ்வரணார் கரந்தை கலை அறிவியல் கல்லூரி
  44. ந. மு. வெங்கடசாமி நாட்டார் கல்லூரி
  45. நல்லி குப்புசாமி மகளிர் கல்லூரி
  46. பாரத் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி
  47. போன்சீகுவர்சு மகளிர் கல்லூரி
  48. மருதுபாண்டியர் கல்லூரி
  49. விவேகானந்தா கல்லூரி
  50. காதிர் முகைதீன் கல்லூரி
  51. மேன்மைமிகு மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை
  52. பாரதிதாசன் மாதிரி கலைக்கல்லூரி(அரசுகல்லூரி), அறந்தாங்கி
  53. நைனாமுகமது மகளிர் கலை அறிவியல் கல்வியல் கல்லூரி
  54. அற்புதா கலை அறிவியல் கல்லூரி
  55. ஆக்சிலியம் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
  56. அரசினர் கலைக்கல்லூரி, கறம்பக்குடி
  57. அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, புதுக்கோட்டை
  58. கணேசர் கலை அறிவியல் கல்லூரி
  59. ஜேஜே கலை அறிவியல் கல்லூரி
  60. அடைக்கலமாதா கல்லூரி
  61. அரசினர் கலைக்கல்லூரி, பேராவூரணி
  62. இதயா மகளிர் கல்லூரி, கும்பகோணம்
  63. திருவையாறு அரசர் கல்லூரி
  64. பரிசுத்தம் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்லூரி

வெளியிணைப்புதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.