குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி

குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் இயங்கிவரும் தமிழக அரசுக்கு சொந்தமான கலை அறிவியல் கல்லூரியாகும். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் தன்னாட்சி கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[1]

குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி
குறிக்கோளுரைஉள்ளத்தனையது உயர்வு
வகைமகளிர் தன்னாட்சி கல்லூரி
உருவாக்கம்1966
முதல்வர்முனைவர் பா சிந்தியா செல்வி
நிருவாகப் பணியாளர்
200
மாணவர்கள்4023
அமைவிடம்தஞ்சாவூர், தமிழ்நாடு,  இந்தியா
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்www.kngac.ac.in

வரலாறுதொகு

இக்கல்லூரி, தமிழக அரசால் 1966ஆவது ஆண்டில் அரசினர் கலைக்கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்டது.வரலாற்றுச் சிறப்பு மிக்க தஞ்சை அரண்மனைக் கட்டிடத்தில் மூன்று புகுமுக வகுப்புகளைக் கொண்டு செயலாற்றத் தொடங்கியது .1969 ம் ஆண்டு முதல் பட்ட வகுப்புகள் ஆரம்பிக்கப் பட்டன. 1970ஆவது ஆண்டில் புதிதாகக் கட்டப் பட்ட சொந்தக் கட்டிடத்தில் கல்லூரி மாற்றப் பட்டது சென்னைப் பல்கலைக் கழகத்துடன் இணைந்திருந்த இக் கல்லூரி 1982 பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி எல்லைக்குள் வந்தது.

.17.9 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கல்லூரி இது .1972ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்றது. 1984ஆம் ஆண்டில் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.

வழங்கப்படும் படிப்புகள்தொகு

இளநிலைப் படிப்புகள்தொகு

கலைப்பாடங்கள்

 • பி. ஏ. தமிழ் [2]
 • பி. ஏ. பொருளியல்
 • பி. ஏ. ஆங்கிலம்
 • பி. ஏ. வரலாறு
 • பி. காம்.
 • பி பி ஏ

அறிவியல் பாடங்கள்

 • பி எஸ்சி கணினி அறிவியல்
 • பி. எஸ்சி தாவரவியல்
 • பி எஸ்சி வேதியியல்
 • பி எஸ்சி கணிதம்
 • பி எஸ்சி இயற்பியல்
 • பி எஸ்சி விலங்கியல்
 • பி. எஸ்சி புள்ளியியல்
 • பி. எஸ்சி புவியியல்

முதுநிலைப் படிப்புகள்தொகு

கலைப்பாடங்கள்

 • எம்.ஏ. தமிழ்[3]
 • எம்.ஏ. பொருளியல்
 • எம்.ஏ. ஆங்கிலம்
 • எம்.ஏ வரலாறு
 • எம்.காம்.

அறிவியல் பாடங்கள்

 • எம் எஸ்சி கணினி அறிவியல்
 • எம் எஸ்சி வேதியியல்
 • எம் எஸ்சி கணிதம்
 • எம் எஸ்சி இயற்பியல்
 • எம் எஸ்சி விலங்கியல்
 • எம் எஸ்சி புவியியல்

ஆய்வியல் நிறைஞர்தொகு

 • எம் பில் பொருளியல்
 • எம் பில் தாவரவியல்
 • எம் பில் வணிகவியல்
 • எம் பில் தமிழ்

முனைவர் பட்டம்தொகு

 • கணிதம்
 • பொருளியல்
 • தாவரவியல்
 • இயற்பியல்
 • ஆங்கிலம்
 • தமிழ்
 • வரலாறு
 • வணிகவியல்
 • விலங்கியல்


இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு