ஆடுதுறை
ஆடுதுறை (Aduthurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் ஓர் பேரூராட்சி ஆகும். இதனை மருத்துவக்குடி என்றும் அழைப்பர்.[4] இது கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது.
ஆடுதுறை | |||||||
— பேரூராட்சி — | |||||||
ஆள்கூறு | 11°06′N 79°17′E / 11.1°N 79.28°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | தஞ்சாவூர் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | பி. பிரியங்கா, இ. ஆ. ப [3] | ||||||
பெருந்தலைவர் | ம.க. ஸ்டாலின் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
11,705 (2011[update]) • 696/km2 (1,803/sq mi) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 16.81 சதுர கிலோமீட்டர்கள் (6.49 sq mi) | ||||||
குறியீடுகள்
| |||||||
இணையதளம் | www.townpanchayat.in/aduthurai |
பேரூராட்சி நிர்வாகம்
தொகு16.81 சகிமீ பரப்பளவு கொண்ட இப்பேரூராட்சி 15 வார்டுகளும், 80 தெருக்களும் கொண்டது. இதன் தற்போதைய மக்கள்தொகை 14,750 (2017) ஆகும்.
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,705 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,858 பேர் ஆண்கள், 5,847 பேர் பெண்கள் ஆவார்கள். ஆடுதுறை மக்களின் சராசரி கல்வியறிவு 88.23 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.11%, பெண்களின் கல்வியறிவு 83.38% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. ஆடுதுறை மக்கள் தொகையில் 10.17% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[5]
அருகிலுள்ள கிராமங்கள்
தொகுஆவணியாபுரம், மஞ்சமல்லி, கிள்ளுக்குடி, சாத்தனூர், மேலமருத்துவக்குடி, கீழ மருத்துவக்குடி, வானாதிராஜபுரம், திருமங்கலக்குடி, நரசிங்கன்பேட்டை, தியாகராஜபுரம், சூரியனார் கோவில், போன்ற கிராமங்கள் உள்ளது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ http://www.townpanchayat.in/aduthurai
- ↑ "Aduthurai alias Maruthuvakudi Population Census 2011". பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2015.
வெளி இணைப்புகள்
தொகு