அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் (Anbil Dharmalingam Agricultural College and Research Institute) திருச்சியில் உள்ள நவலூர் குட்டப்பட்டு எனும் கிராமத்தில் அமைந்துள்ள வேளாண் கல்லூரி ஆகும். இது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரி ஆகும்.[1] திமுக அரசியல்வாதியான அன்பில் தர்மலிங்கத்தின் பெயர் இக்கல்லூரிக்கு இடப்பட்டுள்ளது.
நிறுவப்பட்டது | 1989 |
---|---|
வகை | பொது |
மாணவர்கள் | 750 |
அமைவு | திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா |
வளாகம் | புறநகர் |
இணைப்புகள் | தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் |
இணையதளம் | www |
துறைகள்தொகு
இக்கல்லூரியில் உள்ள துறைகள்[2]:
- உளவியல்
- மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல்
- சமூக அறிவியல்
- தாவர வளர்ப்பு மற்றும் மரபியல்
- பயிர் பாதுகாப்பு
ஆராய்ச்சிகள்தொகு
இங்கு உவர் மண் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.
படிப்புகள்தொகு
இங்கு இளம் மற்றும் முது அறிவியல் வேளாண் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
அமைவிடம்தொகு
இக்கல்லூரி திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நவலூர் குட்டப்பட்டில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்தொகு
- ↑ http://www.tnau.ac.in/
- ↑ "Anbil Dharmalingam Agricultural College and Research Institute Departments". tnau.ac.in. 17 ஜூன் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 June 2012 அன்று பார்க்கப்பட்டது.