நெல்சன் (துடுப்பாட்டம்)

நெல்சன் எனப்படுவது துடுப்பாட்டத்தில் வழங்கப்படுகின்ற வட்டார வழக்கும் மூடநம்பிக்கைக்குரிய விடயமும் ஆகும்.

துடுப்பாட்டத்தின் போது, ஒரு அணியின் ஓட்ட எண்ணிக்கை 111 அல்லது அதன் மடங்குகளாகக் காணப்படுகின்ற நிலையில், இந்த நெல்சன் என்ற பெயர் வழங்கப்படுகிறது. வேத்திய கடற்படையின் பிரபலமான அதிகாரியாக விளங்கிய முதலாவது விஸ்கோண்ட் நெல்சன், போரின் போது, தனது ஒரு கண், ஒரு கை மற்றும் ஒரு கால் என்பவற்றை (உண்மையில் நெல்சனின் இரு கால்களும் ஒருங்கே காணப்பட்டது, அவர் இழந்த மூன்றாவது அங்கம் இன்னும் அறியப்படாமலேயே இருக்கிறது.) இழந்ததை தொடர்புபடுத்தியே இந்தப் பெயர் வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது. [1] நீண்ட காலமாக துடுப்பாட்ட வரலாறுகள் பற்றிய ஆர்வலரும் கணக்கிடுனருமாகிய பில் பிரைன்டால், "ஒரு கண், ஒரு கை, ஒரு ஏதாவதொன்று" என்று நெல்சன் இழந்த மூன்றாவது அங்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். இருந்த போதிலும், இதுவும் இன்னும் மூன்றாவது அங்கம் எதுவென்பதை அறியவில்லை என்பதையே இந்தக் கூற்றும் குறித்து நிற்கிறது.

துடுப்பாட்டத்தின் போது, இந்த நெல்சன் இலக்கங்களில் ஓட்ட எண்ணிக்கை அமைகின்ற சந்தர்ப்பங்களில் அபசகுனமான விடயங்கள் நடந்தேறும் என்கின்ற பரவலான மூடநம்பிக்கை நிலவி வருகின்றது. ஆனாலும், 1990களில் த கிரிக்கெட்டர் என்ற சஞ்சிகையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, அதிகமான ஆட்டவிழப்புகள், ஓட்ட எண்ணிக்கை பூச்சியமாக (0) இருக்கின்ற சந்தர்ப்பங்களிலேயே இடம்பெறுவதாக அறியப்பட்டது. நெல்சன் எண்ணான '111' என்பது, துடுப்பாட்ட வீரரின் ஆட்டமிழப்பின் போது, விக்கெட்டின் மேலுள்ள பெயில்ஸ் விழுந்த நிலையில் விக்கட் காணப்படுகின்ற நிலையை ஒத்திருப்பதனாலும் இது துரதிட்ட நிலையாக கருதப்படுகின்றது.[2]

அபசகுனமாக ஆட்டமிழப்புகள், ஓட்ட எண்ணிக்கை நெல்சனாக அமைந்த நிலையில் இடம் பெற்றுவிடக் கூடாது என்ற எண்ணத்தோடு, துடுப்பாட்ட நடுவர் டேவிட் ஷெப்பர்ட் தனது கால்களை மாறி மாறி தரையில் மேலாக உயர்த்திக் கொள்வார். [3] இதனைப் பார்வையாளர்கள் அவதானித்து, அவரின் இந்தச் செய்கைக்காக கரகோசங்களையும் எழுப்புவர்.

ஆனாலும், நெல்சன் எண்ணைப் போல், அவுஸ்திரேலியா துடுப்பாட்ட அணியைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு 87 என்பதே சாத்தானின் எண்ணாக கருதப்படுகிறது. [4] 87 ஓட்ட எண்ணிக்கையாக இருந்தநிலையிலேயே, அவுத்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் பலரும் ஆட்டமிழப்புகளைச் சந்தித்துள்ளனர் என புள்ளிவிபரங்கள் வெளிப்படையாக்குகின்றன. [5]

உசாத்துணைகள்

தொகு
  1. Booth, Lawrence (2006). Arm-ball to Zooter: A Sideways Look at the Language of Cricket. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0140515817.
  2. http://www.mirrorfootball.co.uk/news/Kolo-Toure-and-the-Top-10-sporting-superstitions-article28387.html (Retrieved 2011-11-13)
  3. David Shepherd (2003-04-12). "David Shepherd's Umpire Guide - My Quirks". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 2011-11-13.
  4. Bill Frindall (2001-09-11). "Stump The Bearded Wonder No 10". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 2011-11-13.
  5. Geoff McClure (2007-11-20). "Why 87 is anything but Australian cricket's magic number". The Age. பார்க்கப்பட்ட நாள் 2011-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்சன்_(துடுப்பாட்டம்)&oldid=3580577" இலிருந்து மீள்விக்கப்பட்டது